“FORB DASHBOARD என்றால் என்ன?”

FORB Dashboard ஆனது இலங்கையில் மற்றும் சர்வதேச பரப்பில் உள்ள மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பான தீர்ப்புக்கள், பகுப்பாய்வுகள் மற்றும் ஆக்கங்களைக் கொண்டுள்ள இலவச வளமாகும். மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் தொடர்பான இலங்கையின் சட்டவியல் விருத்தி பற்றிய புரிதலுக்கான முக்கிய தரவுகளை வழங்குகின்ற, அதேபோல, கற்றலில் ஆர்வமுள்ள நபர்களுக்கு மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரம் பற்றிய அடிப்படை புரிதலை வழங்குகின்ற dashboard ஒன்றாக FORB Dashboard காணப்படுகின்றது

நாங்கள் யார்?

FORB Dashboard ஆனது MinorMatters இனால் உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் இலங்கையில் மத ஒற்றுமையினை வளர்ப்பதற்காக மற்றும் மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தினைப் பாதுகாப்பதற்காக அர்ப்பணிக்கப்பட்ட பொது இயக்கமாவோம். நாங்கள் நல்லிணக்கத்தினை மேம்படுத்துவதற்கான, மத தீவிரவாதத்தினை எதிர்ப்பதற்கான மற்றும் தேசிய சகவாழ்வினை மேம்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கவும் அவற்றை மேம்படுத்தவும் முனைகின்றோம்.

Learn more about FoRB