Home Sri Lankan Cases Ashik v Bandula and Others (Noise Pollution Case)

Court
உச்ச நீதிமன்றம்
Bench
Sarath N. Silva, C.J. Tilakawardane, J. Somawansa, J.
Key words
அரசியலமைப்பின் உறுப்புரைகள் 3, 126, 126(4), 12(1); பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 80; 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க தேசிய சுற்றாடல் சட்டத்தின் (1988 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சட்டத்தால் திருத்தப்பட்டவாறு) பிரிவுகள் 23P, 23R மற்றும் தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 26
Cases referred to

குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்

  1. Marshall v Gunaratne Unnanse 1 NLR 179
  2. Church of God (full Gospel) in India v K.K.R.M.C. Welfare Association 1AR 2000 – SC – 2773.

3. In Re Noise Pollution AIR 205 – SC 3136

 

பிரசன்னமாகிய சட்டத்தரணிகள்

Ikram Mohamed PC for the petitioners.

Ms. Indika Demuni de Silva 2nd, 3rd, 4th respondents.

Ms. B.J. Tilakaratne, Deputy Solicitor General for Central Environmental Authority.

Uditha Egalahewa for 7th respondent.

 

Counsel who appeared
Date of Decision
9/3/2007
Judgement by Name of Judge/s
Sarath N. Silva, C.J.
Noteworthy information relating to the case

உறுப்புரை 126(4) இன் கீழ் பணிப்புரை வழங்கப்பட்டது

Other information

Ashik v Bandula and Others (Noise Pollution Case)

SC FR 38/2005

Facts of the case

முறைப்பாடு: பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 80 இன்கீழ் ஒலிபெருக்கிகளைப் பாவிப்பதற்கான அனுமதியினை வெலிகம ஜும்மா பள்ளிவாசல் நம்பிக்கைப் பொறுப்பாளர்களுக்கு வழங்காமை மற்றும் அத்தகைய பாவனையின்மீது மட்டுப்பாடுகளை விதித்தல் அவர்களது அடிப்படை உரிமைகளை மீறுவதாகும்.

Findings related to FoRB

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை, பாரபட்சம்

Holding/Decision

Sarath N. Silva C.J. கீழ்வருமாறு குறிப்பிட்டார்:

“மத நடைமுறையொன்றினை அடிப்படையாகக் கொண்ட சிலரின் அனுமானிக்கப்பட்ட வசதி அல்லது நன்மை, பொது மக்களுக்கு எரிச்சலூட்டுகின்ற அல்லது அருகிலுள்ள ஆதனங்களில் வசிக்கின்ற மக்களுக்கு பொதுவாக இடையூறு ஏற்படுத்துவதற்கான காரணமொன்றாகாது.”

  • 1980 ஆம் ஆண்டின் 47 ஆம் இலக்க, தேசிய சுற்றாடல் சட்டத்தின் (திருத்தப்பட்டவாறான) பிரிவு 23P இனால் ஆணையிடப்பட்டுள்ளதற்கமைய, ஒழுங்குவிதிகளினூடாக ஒலி மாசடைவின் ஊறுபடுத்தத்தகு விளைவுகளிலிருந்து பொது மக்களைப் பாதுகாப்பதற்கான வினைத்திறனான சட்ட ஆட்சியொன்றினை தாபிக்க நிறைவேற்றுத்துறை தவறுகின்றமையினூடாக சட்டத்தின் முன்னரான மக்களின் சமமான பாதுகாப்பு மறுக்கப்படுகின்றது- சட்டத்தின் ஏற்பாகின்ற ஏற்பாடுகளின் வினைத்திறனான அமுலாக்கத்திற்கான எவ்வித ஒழுங்குவிதிகளும், அதாவது உறுப்புரை 12(1) இனால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள மக்களுக்கான சமமானப் பாதுகாப்பினை வழங்குவதற்கான எவ்வித ஒழுங்குவிதிகளும் வெளியிடப்படவில்லை.

 

உச்ச நீதிமன்றமானது தனது முன்னிலையில் உள்ள விடயங்களைக் கருத்திற்கொண்டு பார்த்து அரசியலமைப்பின் உறுப்புரை 126(4) இற்கமைய குறிப்பான பணிப்புரைகளை வழங்கியது.

 

இடையலை மிகைப்பிக்கள், ஒலிபெருக்கிகள் அல்லது வேறு உபகரணம் அல்லது துணை கருவிகள் என்பனவற்றின் பாவனையினூடாக பொது மக்களுக்கு அல்லது அருகில் வசிக்கின்ற ஆதனங்களில் வசிக்கின்ற

  • அல்லது குடியிருக்கின்ற மக்களுக்கு எரிச்சலூட்டுகின்ற ஒலி மாசடைவானது தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 261 இற்கு கீழ் பொது இடையூறாகக் கருதப்பட வேண்டும் என்பதுடன் அத்தகைய பொது இடையூறு தொடர்பான முறைப்பாடுகளை பொலிஸார் கவனத்திலெடுத்து அவற்றைக் களைய பொருத்தமான நடவடிக்கை எடுக்க வேண்டும்;

 

  • பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 80(1) இன் கீழ் பொலிஸாரினால் வழங்கப்பட்ட அனைத்து அனுமதிகளும் வலுவாவதிலிருந்து நிறுத்தப்பட வேண்டும்;

 

  • பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 80(1) இன் கீழ் ஒலியினை பெருப்புவதற்கான ஒலி பெருக்கிகள் மற்றும் ஏனைய உபகரணங்கள் என்பனவற்றை பயன்படுத்துவதற்கான அனுமதியினை வழங்குகின்றபோது, அப்பிரிவில் குறிப்பிடப்பட்டிருப்பதற்கமைய இரவு 00 மணியிலிருந்து காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் அவற்றைப் பயன்படுத்துவதற்கு அனுமதி வழங்கக்கூடாது. அத்தகைய அனுமதிகள் விசேட மத விழாக்கள் மற்றும் வேறு விசேட நிகழ்வுகளுக்கு வழங்கப்படலாம், எவ்வாறெனினும் அவற்றை வழங்குவதற்கு முன்னர் அது தொடர்பாக அருகில் வசிப்பவர்களின் கருத்துக்களை நிச்சயப்படுத்திக் கொள்ள வேண்டும். அத்தகைய விடயங்கள் தொடர்பான பதிவினைப் பேண வேண்டும் என்பதுடன் அத்தகைய அனுமதிகளை அருகிலுள்ள நீதவான் நீதிமன்றத்திற்கு அறிக்கையிடுதலும் வேண்டும்;

 

  • இரவு 00 மணியிலிருந்து காலை 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் வழங்கப்படுகின்ற அனுமதிகள் குறிப்பிட்ட நோக்கங்களுக்காக, மட்டுப்படுத்தப்பட்ட காலப்பகுதிக்கு, குறித்த இடையலை மிகைப்பி அல்லது ஒலிபெருக்கியிலிருந்து வரும் சத்தம் குறிப்பிட்ட இடத்தின் வளாகங்களுக்கு அப்பால் செல்லக்கூடாது என்ற கடினமான நிபந்தனையுடன் வழங்கப்பட வேண்டும்;

 

  • பிரிவு 80(1) இற்கமைய, வழங்கப்பட்டுள்ள பணிப்புக்கள் (iii) மற்றும் (iv) இல் குறிப்பிட்டுள்ளவாறு அனுமதி வழங்கப்படுகின்றபோது, அத்தகைய பாவனை இடம்பெறுகின்ற பகுதியில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் சரியாக பின்பற்றப்படுகின்றன என்பதனை உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் அதிகாரிகள் ஒதுக்கப்பட்டு பணிக்கமர்த்தப்பட வேண்டும்;

 

தண்டனை சட்டக் கோவையின் பிரிவு 261 இல் குறிப்பிடப்பட்டவாறான பொது இடையூறு ஏற்படுத்தல் என்ற குற்றத்தை புரிந்த ஒருவர் அல்லது பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 80 இல் குறிப்பிடப்பட்டவாறு ஏதேனும் ஒலிபெருக்கி, இடையலை மிகைப்பி அல்லது வேறு ஏதேனும் உபகரணத்தினை இங்கு குறிப்பிட்டுள்ள பணிப்புக்களுக்கு முரணாகப் பயன்படுத்துகின்ற குற்றத்தை புரிந்த ஒருவருக்கெதிராக பொது மக்களுள் ஒருவர் முறைப்பாடொன்றினைப் பதிவு செய்கின்றபோது அது தொடர்பாக விசாரிப்பதற்கு பொலிஸார் விசேடமான ஏற்பாடுகளை மேற்கொள்வர் என்பதுடன் அவ்விடயத்தினை விசாரிப்பதற்கான உடனடியான நடவடிக்கைகளை மேற்கொண்டு அந்நடத்தையினை தொடராதிருக்க வேண்டும் என அந்நபரை எச்சரித்தல் வேண்டும். அவ்வாறு எச்சரிக்கை செய்த பின்னரும் பொலிஸ் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 80(4) இல் குறிப்பிடப்பட்டுள்ளதற்கமைய குறித்த உபகரணத்தை கைப்பற்றுதல் வேண்டும் என்பதுடன் அவ்விடயத்தை இந்நீதிமன்றத்தின் பதிவாளருக்கு அறிக்கையிடுதலும் வேண்டும்.