Home Sri Lankan Cases B.M. Asiri Tharanga & Thiyagarajah Mahendran v The principal of Kingswood College

Court
இலங்கை உச்ச நீதிமன்றம்
Bench
S. Eva Wanasundera PCJ B.P. Aluwihare PCJ H.N.J. Perera J
Key words
உறுப்புரை 12(1)
Cases referred to

குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்

  1. SC/FR 613/2004
  2. SC/FR 614/2004
  3. SC/FR 615/2004
  4. SC/FR 616/2004

5. SC/FR 353/2016

 

பிரசன்னமாகிய சட்டத்தரணிகள்

Elmore Perera for the Petitioner

Suren Gnanaraj SSC for the Respondent

 

 

Counsel who appeared
Date of Decision
30/10/17
Judgement by Name of Judge/s
S. Eva Wanasundera PCJ
Noteworthy information relating to the case
Other information

B.M. Asiri Tharanga & Thiyagarajah Mahendran v The principal of Kingswood College

SC FR Application No. 335/2016

Facts of the case

தன்னுடைய மகனை 2017 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்க மறுத்தமையினூடாக கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக மனுதாரர் குற்றம் சார்த்தியுள்ளார்.

Findings related to FoRB

  • “சுற்றுநிரூபத்தின் வாசகம் 2 இற்கமைய, கிறிஸ்தவப் பிள்ளையொன்று ஏதேனுமொரு வகைப்பாட்டின்கீழ் கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியில் அனுமதிக்காக விண்ணப்பிக்கின்றபோது, ஆவணங்கள் அப்பிள்ளை கிறிஸ்தவர் என்பதனை வெளிப்படுத்துமாயின் மற்றும் மத வகைப்பாட்டின்கீழ் பாடசாலையில் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருக்கும் கிறிஸ்தவப் பிள்ளைகளின் எண்ணிக்கை அவ்வகைப்பாட்டின்கீழ் அனுமதிக்கப்படக்கூடிய பிள்ளைகளின் எண்ணிக்கையின் 20 வீதத்தினை அடைந்திருக்காவிடின், அப்பிள்ளைக்கு அப்பாடசாலையில் அனுமதி பெறுவதற்கான உரிமை உண்டு.”

 

  • “1960 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1961 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க சட்டம் ஆகிய பாராளுமன்ற நியதிச் சட்டங்களினால் சொல்லப்பட்டிருக்கின்ற சட்டங்களை யாரும் புறக்கணிக்க முடியாது. பாடசாலை அதிகாரிகளும் கல்வி அமைச்சும் ஏற்கனவே வலுவிலிருக்கின்ற சட்ட ஏற்பாடுகள் தொடர்பாகப் பாராமுகமாகச் செயற்பட முடியாது.”

 

  • மனுதாரரினால் மேற்கொள்ப்பட்ட இதனையொத்த வழக்குகளில் (SC/FR 613/2004, 614/2004, 615/2004, 616/2004 மற்றும் 353/2016) வழங்கப்பட்ட தீர்மானங்களுடன் நீதிமன்றம் இணங்கியது.

 

  • அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) இல் சொல்லப்பட்டுள்ள மனுதாரரின் அடிப்படை உரிமைகளை முதலாம், இரண்டாம் மற்றும் மூன்றாம் பிரதிவாதிகள் மீறியுள்ளனர். மனுதாரரின் மகனைப் பாடசாலையில் அனுமதிக்குமாறு அப்பிரதிவாதிகளுக்கு பணிக்கின்றேன்” என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Holding/Decision

மாணவரொருவர் ஏதேனுமொரு வகைப்பாட்டின்கீழ் பாடசாலையொன்றிற்கு அனுமதிக்கின்றபோது, ஆவணங்கள் அம்மாணவர் கிறிஸ்தவர் எனக் காட்டுமாயின் மற்றும் 20% ஒதுக்கீடு பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லையாயின், அப்பிள்ளைக்கு சுற்றுநிரூபத்தின் வாசகம் 3.2 இன்கீழ் அப்பாடசாலையில் அனுமதிக்கப்படுவதற்கான உரிமை உண்டு.

 

மேலும், பாடசாலை அதிகாரிகள் அல்லது கல்வி அமைச்சு 1960 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1961 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க சட்டம் ஆகிய பாராளுமன்ற நியதிச் சட்டங்களினால் சொல்லப்பட்டிருக்கின்ற சட்டங்களை புறக்கணிக்க முடியாது.

 

மேலும், அமைச்சு 1960 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1961 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க சட்டம் ஆகிய பாராளுமன்றத்தின் இரண்டு சட்டங்களால் வழங்கப்பட்ட சட்டத்தை பாடசாலை அதிகாரிகளோ அல்லது கல்வி அமைச்சோ புறக்கணிக்க முடியாது.

 

மனுதாரரின் மகனை கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியில் முதலாம் தரத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

 

சாரம்:

எவ்வாறெனினும், மனுதாரரின் மகன் எதிர்காலத்தில் தனது கல்வி சார்ந்த விடயங்களை அடைந்து கொள்ள வேண்டிய இடமாக இப்பாடசாலை இருப்பதனால் செலவுகள் தொடர்பான எவ்வித உத்தரவையும் செய்ய விரும்பவில்லை. இப்பாடசாலை  அவருக்கு பூமியில் இரண்டாவது தாயாக விளங்குவதோடு, கல்வி மற்றும் அறிவைப் பெறுவது மட்டுமல்லாமல், வாழ்வில் சரியானதை செய்வதற்கும் தவறானவற்றை செய்யாதிருப்பதற்குமான தார்மீக ஒழுக்கத்தைப் பெற்றுக் கொள்கின்ற இடமாகவும் விளங்குகின்றது.