Home Sri Lankan Cases Jeevakaran v Rathnasiri Wickramanayake மற்றும் பிறர்

Court
இலங்கை உச்ச நீதிமன்றம்
Bench
Fernando, J., Wijetunga, J. And Dr. Gunawardana, J.
Key words
கட்டுரை 12 (1)
Cases referred to

N. Vijithsinghe with Anton Punethanayagam for petitioner.

Kolitha Dharmawardana, D. S. G. for respondents.

Counsel who appeared
Date of Decision
28/01/97
Judgement by Name of Judge/s
Fernando, J.
Noteworthy information relating to the case

அடிப்படை உரிமைகளுக்கான விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.

Other information

Jeevakaran v Rathnasiri Wickramanayake மற்றும் பிறர்

S.C. Application No. 623/96

Facts of the case

1971 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க விடுமுறைச் சட்டமானது ஒவ்வொரு பௌர்ணமி தினத்தையும் ஞாயிற்றுக்கிழமையையும் பொது விடுமுறை தினமாக அறிவித்தது. கூடுதலாக, 1வது அட்டவணையில் குறிப்பிடப்பட்ட குறிப்பிட்ட நாட்களும் பொது விடுமுறை தினங்களாக மாற்றப்பட்டன. பிரிவு 4 ஆனதுஇ 1வது அட்டவணையை திருத்த அல்லது மாற்றும் அதிகாரத்தை அமைச்சருக்கு வழங்கியது. அதிகளவிலான பொது விடுமுறைகள் நாட்டின் உற்பத்தித் திறனைப் பாதித்துள்ள நிலையில், மகா சிவராத்திரி, ஹஜ்ஜு , தேசிய மாவீரர் தினம் மற்றும் பண்டாரநாயக்கா நினைவு தினம் ஆகிய விடுமுறைகளை நீக்குவதற்கு அரசாங்கம் குழுவொன்றின் பரிந்துரையின் பேரில் தீர்மானித்துள்ளது. இருப்பினும், அதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் மகா சிவராத்திரி மற்றும் ஹஜ்ஜு என்பனவற்றை “முறையே இந்து மற்றும் இஸ்லாம் மதத்தினைப் பின்பற்றுபவர்களுக்கான சிறப்பு விடுமுறைகள்” என்று அறிவித்தது. மனுதாரர், “மகா சிவராத்திரி பொது விடுமுறையாக இருக்கப் போவதில்லை என்பதால் மனுதாரரால் இந்த மத நடைமுறைகளைக் கடைபிடிக்க முடியாது. இது அவரது மத உணர்வினையும் நம்பிக்கையினையும் உடனடியாக மீறக்கூடியவாறான பிரதிவாதிகளின் நிர்வாக அல்லது நிறைவேற்று நடவடிக்கைகள் ஆகும்.” என குறிப்பிட்டார்.

 

மேலும், “அந்த நாள் பொது விடுமுறை என்பதால் வெவ்வேறு மதக் குழுக்கள் பொதுவாக ஒன்றுகூடி மற்றவரின் மதம் அல்லது நம்பிக்கையைக் கடைப்பிடிக்கின்றன” என்றும், “போரினால் பாதிக்கப்பட்ட நாட்டில் மதங்களுக்கு இடையே நல்லிணக்கத்தை மேம்படுத்துவதற்கு இது அவசியம்” என்றும் அவர் கூறினார். இதனூடாக அரசியலமைப்பின் உறுப்புரைகள் 10 மற்றும் 14(1)(e) மீறுவதாக அவர் குற்றம் சாட்டினார். மனுதாரரின் அடுத்த வாதம் என்னவென்றால், திடீரென விடுமுறை மறுக்கப்பட்டமையானது, “மனுதாரரின் நியாயமான எதிர்பார்ப்புகளுக்கு எதிரானது மற்றும் முற்றிலும் ஒருதலைப்பட்சமானது, காரணமற்றது தன்னிச்சையானது, நியாயமற்றது, முறையான நடைமுறைகளைப் பின்பற்றாது எடுக்கப்பட்டது, நீதியற்றது, சலன புத்தியுள்ளது, அதிகார வரம்பிற்கு அப்பாற்பட்டது மற்றும் இது எவ்வித நல்ல காரணத்திற்காகவும் மேற்கொள்ளப்படவில்லை, மாறாக, சில இணை நோக்கங்களுக்காக சம வாய்ப்பை மறுத்து அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளை மீறுகிறது” என்பதாகும்.  மேலும் “ஒட்டுமொத்த சனத்தொகையுடன் ஒப்பிடும் போது சிறுபான்மையினராலேயே இந்து மதம் பின்பற்றப்படுகிறது. ஆகவே,  மகா சிவராத்திரியை பொது விடுமுறையாக அறிவிக்காமல் சிறுபான்மை மதத்தினருக்கு மட்டும் விடுமுறையாக அறிவிப்பது என்பது அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) மூலம் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை மீறுவதாகும்” என குறிப்பிட்டார்.

Findings related to FoRB

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்திற்கான மீறல் – மனசாட்சி  (அதாவது ஒருவரின் விருப்பப்படி ஒரு மதத்தை வைத்திருப்பது அல்லது ஏற்றுக்கொள்வது) பாகுபாடு

Holding/Decision

  • அரசாங்கத்தின் முடிவு, அரசியலமைப்பின் 14(1)(e) உறுப்புரையின் கீழ் மனுதாரர்களின் வழிபாட்டு சுதந்திரத்தை மீறவில்லை. வழிபாட்டு சுதந்திரத்தின் சாராம்சம் என்னவென்றால், அரசு (அல்லது ஒரு தனியார் முதலாளி கூட) பிரஜையின் மத நடைமுறையை தடை செய்யவோ அல்லது குறுக்கிடவோ கூடாது, ஆனால் அத்தகைய நடைமுறைக்கு ஆதரவை வழங்கவோ அல்லது வசதிகளை வழங்கவோ கடப்பாடுடையது அல்ல. மற்ற சுதந்திரங்களைப் பொறுத்தவரை இந் நிலைப்பாடானது வேறுபட்டதல்ல. பேச்சு சுதந்திரம் ஒரு பிரஜைக்கு செய்தித்தாள் வெளியிடுவதற்கு அல்லது வானொலி நிலையத்தை இயக்குவதற்கு உரிமையளிக்கும் அதே வேளையில், அது அவருக்கு அரச நிலம் அல்லது அவரது நிறுவனத்திற்கான நிதியைப் பெற்றுக் கொள்வதற்கான உரிமையினை வழங்காது. அத்துடன் ஒன்று சேர்வதற்கான சுதந்திரமானது ஒரு நிறுவனம், சமூகம் அல்லது தொழிற்சங்கத்தை நிறுவுவதற்கு பிரஜைகளுக்கு உரிமை அளிக்கலாம், ஆனால் அதன் செயல்பாடுகளுக்காக அரசிடம் இருந்து ஒரு கட்டிடத்தை கோர முடியாது.

 

  • அரசியலமைப்பின் 12(1) ஆம் உறுப்புரையின் கீழ் சமத்துவத்திற்கான மனுதாரரின் உரிமை மீறப்படவும் இல்லை. தேசிய பொருளாதாரத்தை நிர்வகிப்பதில் அதன் பங்கு மற்றும் பொறுப்புகளை கருத்தில் கொண்டு, விடுமுறை நாட்களின் எண்ணிக்கையை குறைக்கும் முடிவு நியாயமானது. அரசு விடுமுறை நாட்களை நிர்ணயம் செய்வதில் பல்வேறு விடயங்களைக் கருத்தில் கொள்ள உரிமை உள்ளது. எதேச்சாதிகாரம் சில கடினமான கொள்கைகளால் பிணைக்கப்படவில்லை.