Facts of the case
            கண்டி பெண்கள் உயர்நிலைப் பாடசாலையின் அதிபர் தனது மகளை பாடசாலையின் தரம் 01 இல் சேர்க்க மறுத்ததன் மூலம் சமத்துவத்திற்கான தனது அடிப்படை உரிமையை மீறுவதாக மனுதாரர் முறையிட்டுள்ளார். கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவுறுத்தல்களில் 3.2வது வாசகத்தில் கூறப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டிற்கான, தரம் ஒன்றிற்கான மாணவர் சேர்ப்பில் வெவ்வேறு மதங்களை சேர்ந்த சிறுவர்களுக்கு மேற்கூறப்பட்ட உரிமைகள் கருத்தில் கொள்ளப்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளதை பிரதிவாதி கவனத்தில் கொள்ளத் தவறியதாக அவர் மேலும் கூறினார்
            Findings related to FoRB
            மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்திற்கான மீறல் – மனசாட்சி  (அதாவது ஒருவரின் விருப்பப்படி ஒரு மதத்தை வைத்திருப்பது அல்லது ஏற்றுக்கொள்வது) பாரபட்சம்
            Holding/Decision
            
- மதம் மட்டுமே தகுதிக்கான அளவுகோலாக இருக்க வேண்டும் என்றால், சுற்றறிக்கை அதை ஒரு தனி வகையாக மாற்றியிருக்கலாம். அது அவ்வாறு இல்லை என்பதன் அர்த்தம், மதம் என்பது அளவுகோல்களின் கட்டமைப்பிற்குள் பார்க்கப்பட வேண்டும் என்பதாகும். மத ஒதுக்கீடு என்பது கருத்தில் கொள்ள வேண்டிய ஒரு சிறப்புக் காரணியாகும் – ஆனால் அது அனுமதிக்கான தனி பிரிவு அல்ல. அதாவது தகுதியற்ற விண்ணப்பதாரரை இது தகுதியுடையதாக மாற்றாது. பிற வகைகளுக்கு இடையில் மதத்திற்கு ஒதுக்கப்பட்ட மீதமுள்ள இடங்களை விகிதாச்சாரப்படி பிரிப்பதற்கு இதுவே காரணம் – ஏனைய வகைகளில் தகுதியான விண்ணப்பதாரர்களை உள்வாங்குவதை எளிதாக்குகிறது.’
 
- ‘தற்போதைய வழக்கில், பள்ளியை அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் போது இருந்த வெவ்வேறு பிரிவுகளைச் சேர்ந்த பிள்ளைகளின் விகிதாசாரத்தின் அடிப்படையில் பள்ளி தனது அனுமதி செயன்முறையினை நடைமுறைப்படுத்தியுள்ளது… அவ்வாறு கூறப்பட்ட அளவுகோலை ஏற்றுக்கொள்வதற்காக நீதிமன்றம் அவர்களைக் குறை சொல்ல முடியாது. அது சட்டப்பூர்வ தேவைகளுக்குப் புறம்பானது.’
 
- மனுதாரரின் மகளை ஏற்க மறுத்தபோது, பிரதிவாதிகள் நயவஞ்சகமான பாரபட்சமான நோக்கத்துடன் செயல்பட்டதாக முடிவு செய்ய முடியாது என்று நீதிமன்றம் கூறியது. றோமன் கத்தோலிக்கரல்லாத பிரிவில் இதேபோன்ற சூழ்நிலையில் உள்ள ஒவ்வொரு விண்ணப்பதாரிகளும் இதே முறையில் நடத்தப்பட்டுள்ளனர்.