குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்
பிரசன்னமாகிய சட்டத்தரணிகள்
Elmore Perera for the Petitioner
Suren Gnanaraj SSC for the Respondent
SC FR Application No. 335/2016
தன்னுடைய மகனை 2017 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்க மறுத்தமையினூடாக கண்டி கிங்ஸ்வூட் கல்லூரி தனது அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக மனுதாரர் குற்றம் சார்த்தியுள்ளார்.
மாணவரொருவர் ஏதேனுமொரு வகைப்பாட்டின்கீழ் பாடசாலையொன்றிற்கு அனுமதிக்கின்றபோது, ஆவணங்கள் அம்மாணவர் கிறிஸ்தவர் எனக் காட்டுமாயின் மற்றும் 20% ஒதுக்கீடு பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லையாயின், அப்பிள்ளைக்கு சுற்றுநிரூபத்தின் வாசகம் 3.2 இன்கீழ் அப்பாடசாலையில் அனுமதிக்கப்படுவதற்கான உரிமை உண்டு.
மேலும், பாடசாலை அதிகாரிகள் அல்லது கல்வி அமைச்சு 1960 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1961 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க சட்டம் ஆகிய பாராளுமன்ற நியதிச் சட்டங்களினால் சொல்லப்பட்டிருக்கின்ற சட்டங்களை புறக்கணிக்க முடியாது.
மேலும், அமைச்சு 1960 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க சட்டம் மற்றும் 1961 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க சட்டம் ஆகிய பாராளுமன்றத்தின் இரண்டு சட்டங்களால் வழங்கப்பட்ட சட்டத்தை பாடசாலை அதிகாரிகளோ அல்லது கல்வி அமைச்சோ புறக்கணிக்க முடியாது.
மனுதாரரின் மகனை கண்டி கிங்ஸ்வூட் கல்லூரியில் முதலாம் தரத்தில் சேர்த்துக் கொள்ளுமாறு பிரதிவாதிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
சாரம்:
எவ்வாறெனினும், மனுதாரரின் மகன் எதிர்காலத்தில் தனது கல்வி சார்ந்த விடயங்களை அடைந்து கொள்ள வேண்டிய இடமாக இப்பாடசாலை இருப்பதனால் செலவுகள் தொடர்பான எவ்வித உத்தரவையும் செய்ய விரும்பவில்லை. இப்பாடசாலை அவருக்கு பூமியில் இரண்டாவது தாயாக விளங்குவதோடு, கல்வி மற்றும் அறிவைப் பெறுவது மட்டுமல்லாமல், வாழ்வில் சரியானதை செய்வதற்கும் தவறானவற்றை செய்யாதிருப்பதற்குமான தார்மீக ஒழுக்கத்தைப் பெற்றுக் கொள்கின்ற இடமாகவும் விளங்குகின்றது.