மீறல் அங்கீகரிக்கப்பட்டது.
பொருத்தமானதல்ல
No.2417/2014
கஸகஸ்தானில் உள்ள பாரம்பரிய மதங்களான இஸ்லாம் மற்றும் கிறித்தவம் போன்ற வழிபாட்டாளர்கள் தங்கள் விழாக்களை பதிவு செய்துள்ள குறிப்பிட்ட இடங்களுக்கு வெளியே நடத்த அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என்று முறைப்பாட்டாளர் கூறுகிறார்.
முறைப்பாட்டாளரின் பார்வையில், “பாரம்பரியமற்ற” மதத்தின் பிரதிநிதியாக அவர் பாரபட்சத்திற்கு உள்ளாகியுள்ளார். எனவே, ஒரு மத அமைப்பின் பதிவு இடத்திற்கு வெளியே எந்தவொரு மத விழாவையும் நடத்த அனுமதி கோருவதற்கு பாரம்பரியமற்ற (சிறுபான்மை) மத அமைப்புகளை தேவைப்படுத்துவதானது அவர்களின் உரிமைகளைக் மட்டுப்படுத்துகிறது.
பிரதான அல்லது “பாரம்பரிய” மதக் குழுக்கள் நிலத்தை வாங்குவதற்கும், மசூதிகள் மற்றும் தேவாலயங்களைக் கட்டுவதற்கும், அவற்றை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்வதற்கும், அதிகாரப்பூர்வ பதிவு இடங்களில் அனைத்து விழாக்களையும் நடத்துவதற்கும் போதுமான நிதியைக் கொண்டுள்ளன. இதற்கிடையில், சிறுபான்மை மத அமைப்புகள், முறைப்பாட்டாளரைப் போன்றவர்கள், பெரும்பாலும் தனியார் அடுக்குமாடி குடியிருப்புகளில் பதிவுசெய்து, தங்கள் விழாக்களுக்காக வளாகத்தை வாடகைக்கு எடுக்க வேண்டும்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- – மத சுதந்திரம்: மதத்தின் அடிப்படையில் பாரபட்சம்
உடன்படிக்கையின் உறுப்புரை 18 இன் கீழ் முறைப்பாட்டாளரின் கூற்று தொடர்பாக பரிசீலிக்கின்றபோது, குழுவானது, ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் சுதந்திரத்திற்கான உரிமை சில மட்டுப்பாடுகளுக்கு உட்பட்டது, ஆனால் அம்மட்டுப்பாடுகள் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட்டவையாகவும் பொது பாதுகாப்பு, ஒழுங்கு, சுகாதாரம் அல்லது ஒழுக்கம் அல்லது மற்றவர்களின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்க அவசியமானதாயும் இருக்க வேண்டும் என கூறுகின்ற உறுப்புரை 18(3) இனை நினைவுபடுத்துகின்றது.
தற்போதைய வழக்கில், கிருஷ்ணா என்ற மத சமுதாய உறுப்பினர்களுடன் சிறிய மத சார் நிகழ்வொன்றினை குறிப்பிட்ட அமைப்பு பதிவு செய்யப்பட்ட இடத்திற்கு அப்பால் வேறு ஒரு இடத்தில் மத விவகாரங்களுக்கான திணைக்களத்தின் அனுமதியின்றி நடத்தியமைக்காக முறைப்பாட்டாளருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. நிகழ்த்த சங்கத்தின் ஒதுக்கப்பட்ட இடத்தை தாண்டியமைக்காக அபராதம் விதிக்கப்பட்டது. சமூகத்தில் தனது நம்பிக்கைகளை மற்றவர்களுடன் வெளிப்படுத்தும் முறைப்பாட்டாளரின் உரிமையின் மீது அரச தரப்பின் அதிகாரிகள் மட்டுப்பாடுகள் விதித்துள்ளதாகவும், முறைப்பாட்டாளருக்கு விதிக்கப்பட்ட அபராதம் அத்தகைய மட்டுப்பாடொன்றாகும் என்றும் குழு கருதுகின்றது.
முறைப்பாட்டாளருக்கு விதிக்கப்பட்ட தண்டனையானது, உறுப்புரை 18 (1) இன் கீழ் சமூகத்தில் தனது மதத்தை சமூகத்தில் வெளிப்படுத்துவதற்கான முறைப்பாட்டாளரின் உரிமையின் மீறலொன்றாகும் என குழு முடிவு செய்கிறது. குறித்த மட்டுப்பாடானது சம்பவம் இடம்பெற்றபோது சட்டத்தால் குறித்துரைக்கப்பட்ட ஒன்றாக அமைந்திருக்கவில்லை என்பதுடன் அது உறுப்புரை 18 (3) இல் அடையாளம் காணப்பட்ட எந்தவொரு நியாயமான நோக்கத்தினையும் நிறைவேற்றுவதற்காக விதிக்கப்படவில்லை: அத்துடன், ஒருவரின் மதத்தை வெளிப்படுத்தும் உரிமையின் மீது விதிக்கப்பட்ட இந்த பரந்த மட்டுப்பாடானது, அது செய்ய எத்தனிக்கின்ற எந்தவொரு நியாயமான நோக்கத்திற்கும் விகித சமமானது என்பதை அரச தரப்பு நிரூபிக்கவில்லை.
எனவே, மட்டுப்பாடானது, உறுப்புரை 18 (3) இன் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை, மேலும் உடன்படிக்கையின் உறுப்புரை 2(3) உடன் வாசிக்கின்றபோது உறுப்புரை 18 (1) இன் கீழ் உள்ள முறைப்பாட்டாளரின் உரிமைகள் மீறப்பட்டிருப்பதைக் குழு கண்டறிந்துள்ளது.