Home International Cases Indian Young Lawyers Association v. The State of Kerala

Court
இந்திய உச்ச நீதிமன்றம்
Bench
Dipak Misra, CJI A.M. Khanwilkar, J Rohintan Nariman, J Indu Malhotra, J D.Y. Chandrachud, J
Key words
இந்திய அரசியலமைப்பின் உறுப்புரை 14, 15, 17, 21, 25, 26, 29, 51
Cases referred to
  1. Sri Venkatramana Devaru v. State of Mysore and others [1958] SCR 895
  2. Nallor Marthandam Vellalar and others v. Comissioner, Hindu Religious and Charitable Endowment and Others
  3. Government of NCT of Delhi v. Union of India and others
  4. Navtej Singh Johar and others v. Union of India and others
  5. Mohd. Hanif Quareshi v. State of Bihar
  6. State of West Bengal and others v. Ashutosh Lahiri and others
  7. N. Adithayan v. Travancore Devaswom Board and others
  8. SSTS Saheb v. State of Bombay [1962] 2 SCR 496
  9. Seshammal v. State of Tamilnadu [1972] 3 SCR 81

 

R.P Gupta; Raja Ramachandran; K.Ramamoorthy for the Petitioners.

 

Jaideep Gupta; Liz Mathew; Venugopal; V.Giri; State of Kerala; Rakesh Dwivedi; K. Radhakrishanan for the Respondents.

Counsel who appeared
Date of Decision
28/09/2018
Judgement by Name of Judge/s
Indu Malhotra, J
Noteworthy information relating to the case

வழிபாட்டு கோவிலுக்குள் நுழையும் பெண்களின் உரிமை தொடர்பான வழக்கில் சமத்துவத்திற்கான உரிமை மற்றும் மத சுதந்திரம் ஆகியவற்றுக்கு இடையே வழங்கப்பட்ட நீதிமன்றத்தின் குறுக்கு வெட்டு தீர்ப்பு

Other information

நீதிபதி ஐ. மல்ஹோத்ரா, தனது மாறுபட்ட கருத்தில், மனுதாரர்களுக்கு ஆதரவாக இல்லாததால் வழக்கு தோல்வியடைய வேண்டும் என்று குறிப்பிட்டார். நீதிபதி மல்ஹோத்ரா, சபரிமலை கோயிலில் ஐயப்பன்கள் அல்லது வழிபடுபவர்கள் ஒரு மதப் பிரிவாக இருப்பதற்கானத் தேவைகளைப் பூர்த்தி செய்துள்ளதாகவும், எனவே உறுப்புரை 26 இன் பாதுகாப்பைப் பெற முடியும் என்றும் கூறினார். ஆகவே, பெண்களின் நுழைவுக்கான வரையறுக்கப்பட்ட மட்டுப்பாடு அரசியலமைப்பின் பகுதி III ஐ மீறாது என்று கூறினார்.

Indian Young Lawyers Association v. The State of Kerala

Writ Petition (Civil) No. 373 of 2006

Facts of the case

இந்த வழக்கு கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட இந்து கோவிலை மையமாகக் கொண்டது. பாரம்பரியத்தின் படி, மாதவிடாய் வயதுடைய பெண்கள், அதாவது 10-50 வயதுடையவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிக்கப்படவில்லை, ஏனெனில் இந்த கோயில் பிரம்மச்சாரி கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது, மேலும் மாதவிடாய் வயதுடைய பெண்கள் அப்புனிதத்திற்கு களங்கம்  ஏற்படுத்துவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

 

1965 ஆம் ஆண்டு கேரள இந்து பொது வழிபாட்டுத் தலங்கள் (நுழைவு அங்கீகாரம்) விதிகளின் கீழ் உருவாக்கப்பட்ட விதி 3(B) மூலம் சட்டப்பூர்வமாக்கப்பட்ட பண்டைய வழக்கத்தின் அடிப்படையில் இந்த விலக்கு நியாயப்படுத்தப்பட்டது. விதி 3(B) “பழக்கவழக்கங்கள் மற்றும் பண்பாடுகளின்படி எந்த நேரத்தில் பெண்களுக்கு புனிதத் தலங்களுக்குள் நுழைய அனுமதி இல்லையோ அந்நேரத்தில் பெண்கள் விலக்களிக்கப்படுவார்கள்” என குறிப்பிட்டது.

 

கேரள மேல் நீதிமன்றம், S. Mahendran vs. The Secretary,Travancore Devaswom Board, Thiruvananthpuram and Ors (AIR 1993 Ker. 42) என்ற வழக்கில், அத்தகைய கட்டுப்பாடு அரசியலமைப்பின் கீழ் பெண்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக இல்லை என்று கூறியது. இந்த வழக்கு இறுதியாக உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு நீதிபதிகள் குழாத்தின் முன் வைக்கப்பட்டது.

 

அந்தவகையில், நீதிமன்றத்தின் முன் உள்ள பிரச்சினைகள் பின்வருமாறு:

பெண் பாலினத்திற்கு பிரத்தியேகமான ஒரு உயிரியல் காரணியை அடிப்படையாகக் கொண்ட விதிவிலக்கு நடைமுறையானது “பாரபட்சமானதா” மற்றும் அதன் மூலம் உறுப்புரை 14, உறுப்புரை 15 மற்றும் உறுப்புரை 17 ஆகியவற்றின் மையப்பொருள் மீறப் படுகின்றதா மற்றும் அரசியலமைப்பின்  உறுப்புரை 25 மற்றும் 26[6] இல் சொல்லப்பட்டுள்ள “ஒழுக்கம்” என்ற காரணியினால் இவ்விலக்களிப்பு பாதுகாக்கப்படுமா.

 

  • இந்த கட்டுப்பாடு கேரள இந்து பொது வழிபாட்டு தலச் சட்டம், 1965 இன் ஏற்பாடுகளை மீறுகிறதா?

 

  • சபரிமலை கோவிலுக்கு மதப் பண்பு உள்ளதா?

 

● கேரள இந்து பொது வழிபாட்டுத் தலங்களின் (நுழைவு அங்கீகாரம்) விதிகளின் 3வது விதியானது, 10 முதல் 50 வயது வரையிலான பெண்களின் நுழைவைத் தடை செய்ய ‘மதப் பிரிவை’ அனுமதிக்கிறதா?

 

Findings related to FoRB

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 15, 17, 25 மற்றும் 26 வது உறுப்புரைகளை  மீறுவதால், கோவிலுக்குள் பெண்கள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது அரசியலமைப்பிற்கு எதிரானது என்று மனுதாரர்கள் வாதிட்டனர்.

 

கூறப்பட்ட உறுப்புரைகள் பின்வருவனவற்றுடன் தொடர்புடையவை:

 

 

[1] 1949 ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பில் உறுப்புரை 14:

 

சட்டத்தின் முன் சமத்துவம்: இந்திய ஆள்புல எல்லைக்குள் எந்தவொரு நபருக்குமான சட்டத்தின் முன்னரான சமத்துவத்தையோ அல்லது சட்டங்களின் சமமான பாதுகாப்பினையோ வழங்குவதற்கு அரசு மறுக்கக்கூடாது.

 

[2] பிரிவு 25: மனசாட்சியினைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக மதத்தைப் பின்பற்றுவதற்கான,  நடைமுறைப்படுத்துவதற்கான மற்றும் பரப்புவதற்கான சுதந்திரம்.

 

அனைத்து நபர்களும் மனசாட்சியினைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக மதத்தைப் பின்பற்றுவதற்கான,  நடைமுறைப்படுத்துவதற்கான மற்றும் பரப்புவதற்கான சுதந்திரத்திற்கு சம அளவில் உரித்துடையவர்கள் ஆவார்.

 

[3] உறுப்புரை 15: மதம், இனம், சாதி, பாலினம் அல்லது பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் பாரபட்சம் காட்டுதலைத் தடை செய்தல்.

மதம், இனம், சாதி, பாலினம் மற்றும் பிறந்த இடம் ஆகியவற்றின் அடிப்படையில் எந்த பிரஜைக்கும் எதிராக அரசு பாகுபாடு காட்டக்கூடாது. எந்தவொரு குடிமகனும், மதம், இனம், சாதி, பாலினம், பிறந்த இடம் அல்லது அவற்றில் ஏதேனும் ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, கடைகள், பொது உணவகங்கள், ஹோட்டல்கள் மற்றும் பொது பொழுதுபோக்கு இடங்களை அணுகுவதற்கான எவ்விதமான இயலாமை, கடப்பாடு, மட்டுப்பாடு அல்லது நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கக்கூடாது.

 

[4] பிரிவு 17: தீண்டாமை ஒழிப்பு:

 

தீண்டாமை ஒழிக்கப்பட்டு, எந்த வடிவத்திலும் அதை நடைமுறைப்படுத்துவது தடைசெய்யப்பட்டுள்ளது. தீண்டாமையினை அடிப்படையாகக் கொண்டு ஏதேனும் இயலாமையினை நடைமுறைப்படுத்தலானது சட்டப்படி தண்டனைக்குரிய குற்றமாகும்.

 

[5] பிரிவு 26: பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் சுகாதாரத்திற்கு அமைவாக, ஒவ்வொரு மதப் பிரிவினருக்கும் அல்லது அதன் எந்தப் உப பிரிவினருக்கும் அதன் மத விவகாரங்களை நிர்வகிக்கும் உரிமை உண்டு.

 

இந்த வழக்கில் மத சுதந்திரம் தொடர்பாகக் கண்டறியப்பட்ட குறிப்பிடத்தக்க விடயம் யாதெனில்,  மத விடயத்தில் “பக்தியில்” பாலின பாகுபாடு இருக்க முடியாது என்பதாகும். மேலும், தீர்ப்பின் மேலதிக விடயமாக பிரதம நீதியரசர் கூறிய விடயம் யாதெனில், மதம் என்பது தனிநபர் ஒருவரின் கௌரவத்துடன் பிணைந்துள்ள வாழ்க்கை முறையொன்றாகும் என்பதுடன் ஒரு பாலினத்திற்கு சார்பாகவும் ஒரு பாலினத்தை புறக்கணித்தும் செய்யப்படுகின்ற ஆணாதிக்க நடைமுறைகள் ஒருவரின் மதத்தினைப் பின்பற்றுவதற்கான மற்றும் நடைமுறைப்படுத்துவதற்கான அடிப்படை சுதந்திரத்தை மீறுமாயின் அவற்றை அனுமதிக்க முடியாது என்பதாகும்.

 

Holding/Decision

இந்த வழக்கின் தீர்ப்பை 4:1 பெரும்பான்மையில் நீதிமன்றம் வழங்கியது. பிரச்சினைக்குட்பட்டுள்ள குறித்த நடைமுறையானது சமத்துவம், சுதந்திரம் மற்றும் மத சுதந்திரத்திற்கான அடிப்படை உரிமைகளை  (உறுப்புரை 14, 15, 19(1), 21 மற்றும் 25(1)) மீறுவதாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. இது கேரள இந்து பொது வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் விதி 3(b)ஐ அரசியல் சட்டத்திற்கு எதிரானது என நீக்கியது. விதி 3(b) ஆனது, பெண்களை பொது வழிபாட்டுத் தலங்களில் இருந்து விலக்கி வைத்தலானது வழக்காற்று நடைமுறையொன்றாக இருக்குமிடத்து அவ்வாறு செய்வதற்கு இந்து மதப் பிரிவினரை அனுமதித்திருந்தது.

 

இதற்கான நியாயமாக சுட்டிக்காட்டப்பட்ட விடயம் யாதெனில், பிரச்சினைக்குட்பட்டிருந்த விதியானது உறுப்புரை 25(1) இன் கீழ் பெண்கள் தங்கள் மத சுதந்திரத்திற்கான உரிமையைப் பயன்படுத்துவதை தடுத்திருந்தது என்பதுடன் அத்தகைய விலக்களிப்பு வேறு ஒரு மதப் பிரிவினரின் மத நடைமுறையினைப் பின்பற்றுவதற்கு அவசியமானதாக அயைமவில்லை. 26(B) பிரிவின்படி, மத நிறுவனங்கள் தங்கள் சொந்த விவகாரங்களை நிர்வகிக்க அனுமதித்த போதிலும், ஐயப்ப பக்தர்கள் தனி மதமாக தகுதி பெற்றுள்ளனர் என்ற விடயத்துடன் பெரும்பான்மையான நீதிபதிகள் இணங்கவில்லை. இந்துக்களாக, அவர்கள் இந்து மத நிறுவனங்களைச் சீர்திருத்த அனுமதிக்கின்ற உறுப்புரை 25(2)(B) விதிகளுக்கு உட்பட்டனர். பெண்களின் கண்ணியம், சுதந்திரம் மற்றும் சுயாட்சி ஆகியவற்றை மீறுவதால், உயிரியல் பண்புகளின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்படும் ஒரு நடைமுறை அரசியலமைப்புச் சட்டத்துடன் இசைவானதாக இருக்க முடியாது என்று நீதிமன்றம் விவாதித்தது.

ஒரு பெண்ணின் மாதவிடாய் நிலை அவரது அந்தரங்கத்தின் ஒரு பகுதியாகும் என்றும், அதைக் கட்டாயமாக வெளிப்படுத்தக் கோருவது உறுப்புரை 21 இன் கீழான பெண்ணின் அந்தரங்கத்திற்கான உரிமையை மீறுவதாக அமையுமென்றும் நீதிமன்றம் குறிப்பாக குறிப்பிட்டது.

 

சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் நுழைவதைக் கட்டுப்படுத்துவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என்றும், எனவே சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கூறிய நீதிமன்றம், “பக்தி விடயத்தில் பாலின பாரபட்சம் இருக்கக் கூடாது” என்றும் கூறியது.