PC/34315
குற்றவாளி, கருப்பையா சிவராசா மற்றும் ஏனையோருக்கு காயம் ஏற்படுத்திய, வாகனமொன்றை சேதம் செய்த, அருள்மரியநாயகம் என்ற நபருடைய காணிக்குள் அத்துமீறி நுழைந்த சட்டமுரணான கும்பலொன்றின் உறுப்பினரொருவர் ஆவார். இக்குற்றங்கள் இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 144 உடன் வாசிக்கப்படுகின்ற பிரிவு 139 மற்றும் 143 ஆகிய பிரிவுகளின் கீழ் உள்ளடக்கப்படுகின்றன.
இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 433 மற்றும் 32 இன் கீழ் அருள்மரியநாயகத்தின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்துள்ளனர். இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவு 32, 408 மற்றும் 409 களின் கீழ் ஆதனச் சேதம் விளைவித்தமையினூடாக ஆதனத்தின் உரிமையாளருக்கு நட்டம் ஏற்படுத்தியுள்ளமை.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை
பொலிஸாரால் பதிவு செய்யப்பட்டுள்ள இப்பிழையான செயற்பாட்டினை முன்னெடுத்து நடத்துவதில் எவ்வித அர்த்தமும் இல்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. முடிவாக, அனைத்து குற்றவாளிகளும் இக்குற்றச்சாட்டுக்களின்கீழ் குற்றம் சாட்டப்பட்டுள்ளனர் என்ற முடிவிற்கு தம்மால் வரமுடியவில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இப்பிழையான செயற்பாட்டிற்கமைய, இலங்கை குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவு 186 இன்கீழ் அனைத்து குற்றவாளிகளும் விடுதலை செய்யப்படுகின்றனர்.