Home Sri Lankan Cases வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம்

Court
வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம்
Bench
பொருத்தமானதல்ல
Key words
இலங்கை தண்டனைச் சட்டக் கோவையின் பிரிவுகள் 140, 292 மற்றும் 332
Cases referred to

பொருத்தமானதல்ல

Counsel who appeared
Date of Decision
15/03/2019
Judgement by Name of Judge/s
பொருத்தமானதல்ல
Noteworthy information relating to the case

தண்டனை வழங்கப்பட்டது

Other information

பொருத்தமானதல்ல

வாழைச்சேனை நீதவான் நீதிமன்றம்

PC/50001/19

Facts of the case

73 வயதான கிறிஸ்தவரொருவரான கணபதிபிள்ளை மகேஷ்வரன் அவரது சுகவீனம் காரணமாக இறக்கின்றார். அவருடைய குடும்பத்தினர் அவரை பொது மயானத்தில் அடக்கம் செய்யத் தீர்மானிக்கின்றனர். சுமார் பிற்பகல் 3.00 மணியளவில் இறந்தவருடைய இறுதிக்கிரியைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, சுமார் 500 பேரை உள்ளடக்கிய குழுவொன்று கிறிஸ்தவர்களை அம்மயானத்தில் அடக்கம் செய்ய முடியாதென கூறி இறுதி சடங்குகளுக்கு இடையூறு விளைவிக்கின்றனர். அக்குழு பின்னர் இறுதிக் கிரியைகளுக்காகக் குழுமியிருந்த கிறிஸ்தவர்களைத் தண்டுகள் மற்றும் காலணிகளால் வன்முறையான முறையில் தாக்குகின்றனர்.

 

பொலிஸார், கிராம அலுவலர் மற்றும் உதவி கிராம அலுவலர் என்போருக்கு இச்சம்பவம் தொடர்பாக அறிவிக்கப்பட்டதுடன் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்தனர். மயானத்திற்கு அருகிலிருந்த ஒரு காணியில் சடலத்தை அடக்கம் செய்யுமாறு உதவி கிராம அதிகாரி ஆலோசனை கூறியபோது அக்குழு அதனையும் எதிர்த்தது. அதன்பின்னர் குழு பொலிஸாரைத் தாக்க ஆரம்பித்தது. சுமார் மாலை 6.30 மணியளவில் கிராமத்தவர்களின் அழுத்தம் அதிகரித்ததன் காரணமாக அக்கிறிஸ்தவர்கள் 15 கிலோ மீற்றருக்கு அப்பால் உள்ள இடத்தில் பொலிஸ் பாதுகாப்புடன் சடலத்தை அடக்கம் செய்தனர்.

Findings related to FoRB

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல் தொடர்பான விடயம்- வன்முறை- உடல்ரீதியற்றது

Holding/Decision

இத்தகைய சூழ்நிலையில் பொலிஸ் 3 குற்றங்களின் கீழ் குற்றவாளிகளை குற்றம் சாட்டினர்:

 

  • இலங்கை தண்டனை சட்டக்கோவையின் பிரிவு 140 இன் கீழ் தெரிந்து கொண்டே சட்டமுரணான ஒன்றுகூடலில் இணைதல்
  • இலங்கை தண்டனை சட்டக் கோவையின் பிரிவு 292 இன்கீழ் மரண சடங்குகளுக்காக கூடியிருந்தவர்களுக்கு இடையூறு செய்தல்
  • இலங்கை தண்டனை சட்டக் கோவையின் பிரிவு 332 இன் கீழ் மரண சடங்குகளை செய்ய முயற்சித்தவர்களை தவறான வழியில் தடுத்தல்

குற்றவாளிகள் முதலாவது குற்றச்சாட்டு தொடர்பில் குற்றத்தை ஒத்துக் கொண்டனர். நீதிமன்றமானது நபருக்கு 1500/- தண்டப்பணம் விதித்ததுடன் ஏனைய குற்றச்சாட்டுக்களிலிருந்து குற்றவாளிகளை விடுவித்தது.