பொருத்தமானதல்ல
இணக்கம்
பொருத்தமானதல்ல
No. B41997/21
அப்பிரதேசவாசிகளின் முறைப்பாட்டினைக் கருத்திற்கொண்டு அவசர சந்தர்ப்பங்களில் வழங்கப்படுகின்ற அறுதியான கட்டளையொன்றினை வழங்குமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வேண்டினார். குறித்த பெண் போதகர் (திறத்தவர்கள் நிரலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது) தனது வீட்டில் வேறுபட்ட இடங்களில் இருந்து வருகின்ற சுமார் 40-50 நபர்களுக்கு அவரது வீட்டில் பிரார்த்தனைகளை நடத்துகின்றமையானது அப்பிரதேசவாசிகளுக்கு இடையூறினை ஏற்படுத்துகின்றது என்பதே முறைப்பாடாகும். அத்துடன் நாட்டில் நிலவுகின்ற கொவிட் 19 நோய் நிலைமையின் காரணமாக இவ்வாறு ஒன்று கூடுவதால் ஏற்படக்கூடிய சுகாதார பிரச்சினைகள் குறித்தும் முறைப்பாடு செய்யப்பட்டது.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை
2021 மார்ச் 17 ஆம் திகதியன்று, இம்மத செயற்பாடுகளைத் தவிர்க்குமாறு நீதவான் இடைக்கால ஆணையொன்றினை வழங்கினார். 2021 ஆகஸ்ட் 6 ஆம் திகதியன்று பொது இடையூறு நீக்கப்பட்டது என்ற அடிப்படையில் இவ்விடயம் முடிவிற்கு கொண்டு வரப்பட்டது.