மேன்முறையீடு அனுமதிக்கப்படுகிறது
No.39L of 2015
மேன்முறையீடு செய்பவரான அக்கிராமத்தின் கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த ஆசியா பீபி, மற்ற முஸ்லீம் பெண்களுடன் சேர்ந்து /பால்சா (கிரேவியா/ஊதா பெர்ரி) பறித்துக் கொண்டிருந்தார். அதன்போது மேன்முறையீட்டாளர் புனித ஹஸ்ரட் மொஹமட் இற்கு எதிரான இழிவான கருத்துக்களை முன்வைத்தார்.
அதன்பிறகு, மேன்முறையீட்டாளர் ஒரு பொதுக் கூட்டத்தில் அழைக்கப்பட்டார். அங்கு நடந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்பட்டது. மேன்முறையீட்டாளர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
விசாரணை நீதிமன்றம் 295-C பிரிவின் கீழ் மேன்முறையீட்டாளரை குற்றவாளி என்று தீர்ப்பளித்தது மற்றும் ரூ. 100,000/- அபராதத்துடன் மரண தண்டனை விதித்தது. அபராதத்தை செலுத்தத் தவறும் பட்சத்தில் ஆறு மாதங்களுக்கான சிறை தண்டனை விதித்தது.
“சகிப்புத்தன்மையே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை” என்று நீதிமன்றம் கூறியது. இது ஒரு மத மற்றும் தார்மீக கடமையாகும், மேலும் இது மனிதர்களின் கண்ணியம், அல்லாஹ்வின் அனைத்து படைப்புகளுக்கும் இடையேயான சமத்துவம் மற்றும் சிந்தனை, மனசாட்சி மற்றும் நம்பிக்கை ஆகியவற்றுக்கான அடிப்படை சுதந்திரம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
இதன் அர்த்தம் ஒருவரின் மதக் கொள்கைகளை சமரசம் செய்து கொள்ள வேண்டும் அல்லது கொள்கைகளில் தீவிரமாக இருக்கக் கூடாது என்பதல்ல, மாறாக இயற்கையாகவே தோற்றம், சூழ்நிலை, பேச்சு, நடத்தை மற்றும் விழுமியங்கள் ஆகியவற்றில் வேறுபட்டுள்ள மனிதர்கள் அமைதியாக வாழவும் அதே போல அவர்கள் அவர்களாகவே வாழவும் உரிமையினைக் கொண்டுள்ளனர்.
இஸ்லாம் எதையும் சகித்து கொள்ளலாம், ஆனால் குர்ஆன் ஆரம்பத்திலிருந்தே குறிப்பிடுகின்ற மற்ற மனிதர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதி, ஒடுக்குமுறை மற்றும் உரிமை மீறல் ஆகியன தொடர்பில் சகிப்புத்தன்மை இருக்கக்கூடாது என கற்பிக்கிறது. மத சுதந்திரத்தை இஸ்லாம் உறுதி செய்துள்ளது.
மதம் மற்றும் நம்பிக்கை விடயங்களில் பலாத்காரத்தினை இது தடை செய்கிறது. “எனவே, மதத்தில் எந்த நிர்ப்பந்தமும் இருக்கக் கூடாது. நிச்சயமாக, பிழையினை அடிப்படையாகக் கொண்டே நாம் சரியான வழியைக் கண்டறிகிறோம். முஸ்லிம்களாகிய நாம் இந்த அதிகாரபூர்வமான கட்டளைக்குக் கட்டுப்பட்டுள்ளோம் என்பதுடன் நாம் அவ் அதிகார எல்லைக்குள் தான் செயற்பட வேண்டும்” அல்-பக்காரா (2:256)