F.S. Nariman, T.S. Krishnamurthy Iyer, K.J. John and M. Jha for the Appellants.
G. Viswanatha Iyer and Mrs. Baby Krishnan for Respondent Nos. I to 3.
P.S. Poti, E.M.S. Anam and James Vincent for the Respondents.
1987 AIR 748, 1986 SCR (3) 518
மேன்முறையீடு செய்த மூன்று பிள்ளைகளும் யெகோவாவின் சாட்சிகள் ஆவார். அவர்கள் “ஜன கண மன” எனத் தொடங்கும் தேசிய கீதத்தைப் பாட மறுத்துவிட்டனர்: தேசிய கீதத்தின் வார்த்தைகள் அல்லது எண்ணங்கள் அவர்களின் மத நம்பிக்கையின் கோட்பாடுகளுக்கு எதிரானது அல்ல- ஆனால் அதைப் பாடுவது அவர்களின் மத நம்பிக்கைகளுக்கு எதிரானது. ஆயினும்கூட, தேசிய கீதம் பாடப்பட்டபோது அப்பிள்ளைகள் மரியாதையுடன் அமைதியாக எழுந்து நிற்கிறார்கள். தலைமை ஆசிரியை 1985 ஜூலை 26 அன்று அப்பிள்ளைகளைப் பள்ளியிலிருந்து வெளியேற்றினார்.
மேன்முறையீடு செய்தவர்கள் உயர் நீதிமன்றத்தில், பள்ளிக்கு வருவதை தடுக்கும் அதிகாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என கோரி எழுத்துமூலம் மனு தாக்கல் செய்தனர். மேல்முறையீட்டாளர்களின் கோரிக்கையை உயர் நீதிமன்றம் நிராகரித்தது, எனவே மேன்முறையீட்டாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி மூலம் மேன்முறையீடு செய்தனர்.
(1) “கீதம் இசைக்கப்படும்போது, அவர்கள் மரியாதையுடன் எழுந்து நின்றபோதும், மத நம்பிக்கையின் காரணமாக அவர்கள் தமது மனசாட்சியின்படி தேசிய கீதம் பாடுவதில் பங்கேற்கவில்லை” என்ற காரணத்திற்காக, மூன்று பிள்ளைகளும் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டமையானது, மனசாட்சியின் சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக மதத்தினை பின்பற்றுவதற்கான, நடைமுறைப்படுத்துவதற்கான மற்றும் பிரச்சாரம் செய்வதற்கான அவர்களின் அடிப்படை உரிமையை மீறுவதாகும்.
ஆகவே, உறுப்புரை 19(1)(a) மற்றும் 25(1) இன்கீழான அவர்களது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளது என்பதுடன் அவை பாதுகாக்கப்பட வேண்டிய அடிப்படை உரிமைகளாகும் என நாங்கள் அடையாளப்படுத்துகிறோம். மேன்முறையீட்டை அனுமதிக்கிறோம், உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்து, பிள்ளைகளை மீண்டும் பள்ளியில் சேர்க்குமாறும், அவர்கள் படிப்பைத் தடையின்றி தொடர அனுமதிக்குமாறும், அவர்களுக்குத்
தேவையானதைக் கொடுத்து அவர்கள் படிப்பதனை சாத்தியப்படுத்துமாறும் பிரதிவாதியாகவுள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறோம். “நமது பாரம்பரியம் சகிப்புத்தன்மையைக் கற்பிக்கிறது, நமது தத்துவங்கள் சகிப்புத்தன்மையை போதிக்கின்றன, நமது அரசியலமைப்புச் சட்டம் சகிப்புத்தன்மையை நடைமுறைப்படுத்துகிறது- நாம் அதை நீர்த்துப்போகச் செய்ய கூடாது என்பதனை நாங்கள் கூற விரும்புகிறோம்.”
(02) “பிரிவு 25(1) ஆனது அதனால் சொல்லப்படுகின்ற உரிமைகள் மட்டுப்படுத்தப்படக்கூறிய காரணிகளையும் சேர்த்து சொல்கின்றது. அக்காரணிகளாக பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் சுகாதாரம் மற்றும் பகுதி III இல் சொல்லப்பட்டுள்ள பிற விதிகள் என்பன அமைகின்றன. மறுபுறத்தில், உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமையை வெளிப்படையாக உள்ளடக்குகிறது, மறுபுறம், மத நடைமுறையுடன் தொடர்புற்றிருக்கும் ஏதேனும் பொருளாதார, நிதிசார், அரசியல் அல்லது வேறு மத சார்பற்ற செயற்பாடுகளை சமூக நலன் மற்றும் திருத்ததிற்காக மட்டுப்படுத்தும் அல்லது ஒழுங்குபடுத்தும் அதிகாரம், அத்தகைய மட்டுப்பாடு அல்லது ஒழுங்குபடுத்தல் உறுப்புரை 25(1) இனால் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள உரிமையினைப் பாதிப்பதாய் அமையினும் கூட, அரசிற்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே, மனசாட்சியைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம், மதத்தினைப் பின்பற்றுவதற்கான, நடைமுறைப்படுத்துவதற்கான அல்லது பிரசாரம் செய்வதற்கான சுதந்திரத்திற்குரிய அடிப்படை உரிமைகள் வேண்டப்படுகின்றபோது, அடிப்படை உரிமையினை மீறுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள குறித்த செயலானது பொது ஒழுங்கு, ஒழுக்கம் அல்லது சுகாதாரத்தினைப் பேணுவதற்கானதா மற்றும் அது அரசியலமைப்பின் பகுதி III இற்கு வலுவளிப்பதற்கானதா அல்லது மத நடைமுறையுடன் தொடர்புற்றிருக்கும் ஏதேனும் பொருளாதார, நிதிசார், அரசியல் அல்லது வேறு மத சார்பற்ற செயற்பாடுகளை சமூக நலன் மற்றும் சீர்திருத்ததிற்காக மட்டுப்படுத்தும் அல்லது ஒழுங்குபடுத்துவதற்கான சட்டம் அல்லது ஒழுங்குவிதியொன்றின் அடிப்படையில் செய்யப்பட்டதா என்பதனை பரிசீலிக்க வேண்டும்.”
(3) ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையோ அல்லது நடைமுறையோ நமது பகுத்தறிவு அல்லது உணர்வை ஈர்க்கிறதா என்பது கேள்வி அல்ல, ஆனால் அந்த நம்பிக்கை உண்மையான மற்றும் மனசாட்சியுடன் மத நடைமுறையின் ஒரு பகுதியாக நடத்தப்படுகிறதா என்பதுதான் பரிசீலிக்கப்பட வேண்டிய விடயமாகும். தனிப்பட்ட கருத்துக்கள் மற்றும் எதிர்வினைகள் பொருத்தமற்றவை. நம்பிக்கை உண்மையாகவும் மனசாட்சியின்படியாகவும் இருந்தால் அது உறுப்புரை 25 இன் பாதுகாப்பை ஈர்க்கிறது. எவ்வாறெனினும், அப்பாதுகாப்பானது அவ் உறுப்புரையில் சொல்லப்பட்டுள்ள மட்டுப்பாடுகளுக்கு உட்பட்டதாகும்.
மேன்முறையீட்டாளர்களுக்கான செலவுகளுடன் மேன்முறையீடு அனுமதிக்கப்படுகிறது.