குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்
பிரசன்னமாகிய சட்டத்தரணிகள்
மீறப்பட்டுள்ளதாகக் கூறப்படும் அடிப்படை உரிமைகள் (உறுப்புரை 19 (1) (g) & உறுப்புரை 25) மீது விதிக்கப்பட்டுள்ள மட்டுப்பாடுகள் தொடர்பாகத் தீர்மானிப்பதில், State of Madra v. I. G. Row [1952] S.C.R. 597. என்ற வழக்கில் அளிக்கப்பட்ட தீர்மானத்தினைப் பின்பற்றுவதன் மூலம் நீதிமன்றம் நியாயப்பாட்டிற்கான சோதனையைப் பிரயோகித்தது.
அதன்படி, பால் உற்பத்தி போன்ற பொருளாதார நலன்களைக் கொண்ட கால்நடைகளை வெட்டுவதற்குத் தடை விதிக்கப்பட்டால் அத்தடையினை பொது மக்களின் நலன்களின் அடிப்படையில் நியாயமான மட்டுப்பாடு ஒன்றாக பார்க்க முடியுமென கூறப்பட்டது. எவ்வாறாயினும், கால்நடைகளைக் கொல்வதற்கான பூரணத் தடையானது பயனற்ற கால்நடைகளைக் கொல்வதனையும் தடுக்கும் என்பதனால் நியாயப்பாட்டிற்கான சோதனையினைப் பிரயோகப்படுத்தி இத்தடையினை நியாயமான மட்டுப்பாடொன்றாகப் பார்க்க முடியாது.
அரசியலமைப்பின் பகுதி IV இல் குறிப்பிடப்பட்டுள்ள அரசக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் அரசியலமைப்பின் பகுதி III இல் உள்ள அடிப்படை உரிமைகளுக்கு துணையாகக் கருதப்படுகின்றன என்பதை நீதிமன்றம் எடுத்துக்காட்டுகிறது. ஆக நீதிமன்றம் இவ்வழக்கில் State of Madra v. I. G. Row [1952] S.C.R. 597. என்ற வழக்கினைப் பயன்படுத்தி தீர்ப்பளித்தது. குறித்த பண்டிகை நாளன்று பசுக்களை வெட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டிருப்பது கூட உறுப்புரை 25 இன்கீழான மனுதாரரின் உரிமைகளை மீறவில்லை- ஏனெனில், குறித்த பண்டிகையிலே மாடுகளைக் கொல்தல் மத அனுட்டானத்தின் முக்கிய கடப்பாடாகக் குறிப்பிடப்படவில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
பொருத்தமானதல்ல
[1958] AIR 731 [1959] SCR 629
மனுதாரர்கள் முஸ்லீம் குரேஷி சமூகத்தைச் சேர்ந்தவர்கள், அவர்கள் முக்கியமாக இறைச்சிக் கடை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர். மனுதாரர்கள் தங்கள் பாரம்பரியத்தில் காலங்காலமாக மேற்கொள்ளப்படும் தொழிலாக இந்தத் தொழிலைக் கொண்டிருந்தனர். அவர்களின் மதத்தின்படி, இது வலிதானதாகக் கருதப்படுகிறது, மேலும் கால்நடைகளை படுகொலை செய்வது வணிகம் மற்றும் தொழிலை மேம்படுத்துவதற்காக செய்யப்படுகிறது. இதற்கு எதிர்புற நிகழ்வுகளைக் பார்க்கின்றபோது, இந்தியாவில் பெரும்பான்மையானவர்களால் பின்பற்றப்படும் மதமாகக் காணப்படுகின்ற இந்து மதம் பசுக்களை புனிதமான விலங்குகளாகக் கருதுகின்றதுடன் அவை கடவுளின் மங்களகரமான இருப்பைக் கொண்டுள்ளன என்று நம்புகின்றது. அத்துடன், விலங்குகள் பால் மற்றும் பல பொருட்களை வழங்குவதால் அவை இன்றியமையாததாகக் கருதப்படுகின்றன, எனவே மனிதர்கள் தார்மீக அடிப்படையில் அவ்விலங்குகளுக்கு நன்றி சொல்ல வேண்டும். மேற்குறிப்பிட்ட நிகழ்வின் அடிப்படையானது மனிதர்கள் மாடுகளைக் கொல்வதனை மனிதாபிமான அடிப்படையில் தடை செய்கின்றது.
முகமது ஹனிப் குரேஷி என்பவர் 1958 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் விலங்குகள் தொடர்பான பீகார் சட்டங்களின்படி பீகாரில் பசுவைக் கொல்லுவதைத் தடைசெய்ததன் மூலம் தனது அடிப்படை உரிமைகளை மீறுவதாக ஒரு மனு தாக்கல் செய்தார்.
இதில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் வருமாறு-
உறுப்புரை 19 (1) (g) பேச்சு சுதந்திரம் தொடர்பான சில உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பானது
(1) அனைத்து பிரஜைகளுக்கும் பின்வரும் உரிமை உண்டு-
(g) எந்த ஒரு தொழிலையும் கடைப்பிடிப்பதற்கான அல்லது எந்த ஒரு தொழில், வர்த்தகம் அல்லது வியாபாரம் செய்வதற்கான உரிமை
பிரிவு 25 ஆனது மனசாட்சியினைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் மற்றும் மதத்தினை சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கான, நடைமுறைப் படுத்துவதற்கான மற்றும் பிரசாரம் செய்வதற்கான சுதந்திரம் ஆகியவற்றுடன் தொடர்புடையது.
(1) பொது ஒழுங்கு, ஒழுக்கம் மற்றும் சுகாதாரம் மற்றும் இந்த பகுதியின் ஏனைய ஏற்பாடுகளுக்கு உட்பட்டு, அனைத்து நபர்களும் மனசாட்சியைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் மற்றும் எந்தவொரு மதத்தினையும் சுதந்திரமாகப் பின்பற்றுவதற்கான, நடைமுறைப்படுத்துவதற்கான மற்றும் பிரசாரம் செய்வதற்கான சுதந்திரம் ஆகியவற்றிற்கு சம அளவில் உரித்துடையவர்கள் ஆவர்.
(2) இந்தக் உறுப்புரையில் உள்ள எதுவும், தற்போதுள்ள எந்தவொரு சட்டத்தின் செயற்பாட்டையும் பாதிக்காது என்பதுடன் அரசாங்கம் எந்தவொரு சட்டத்தை உருவாக்குவதனையும் தடுக்காது.
(a) மத நடைமுறையுடன் தொடர்புடைய ஏதேனும் பொருளாதார, நிதி, அரசியல் அல்லது பிற மதச்சார்பற்ற செயற்பாடுகளை ஒழுங்குபடுத்துதல் அல்லது மட்டுப்படுத்துதல்
(b) சமூக நலன் மற்றும் சீர்திருத்தத்தினை மேற்கொள்ளல் அல்லது இந்துக்களின் அனைத்து வகுப்புகளுக்கும் மற்றும் பிரிவுகளுக்கும் பொதுவான இந்து மத நிறுவனங்களை தாபித்தல்
விளக்கம் 1- கிர்பான்களை அணிவது மற்றும் எடுத்துச் செல்வது சீக்கிய மதத்தின் அனுட்டாங்களில் ஒன்றாகச் சேர்க்கப்பட்டதாகக் கருதப்படும்.
விளக்கம் II- இந்துக்களைக் குறிப்பிடுகின்ற பிரிவின் உட்பிரிவு (b) இல், இந்துக்கள் பற்றிய குறிப்பில், சீக்கியர், ஜெயின், அல்லது பௌத்த மதம் என்று கூறும் நபர்களையும் உள்ளடக்குவதாகக் கருத வேண்டும், மேலும், அதற்கமையவே இந்து மத நிறுவனங்களைப் பற்றிய மேற்கோள் கட்டியமைக்கப்பட வேண்டும்.
பக்ரா-ஈத் பண்டிகையின் போது பசுக்களை பலியிடுவது இஸ்லாமிய மதத்தின் கட்டாய நடைமுறையென்றோ அல்லது இன்றியமையாத பகுதியென்றோ நிறுவப்படவில்லை, மாறாக, அது விருப்பத் தெரிவொன்றாக மாத்திரமே காணப்படுகின்றது. இந்நிலையில் பசு வதைக்கான தடையானது, 25வது பிரிவின் கீழ் மனுதாரர்கள் தங்கள் மதத்தை கடைப்பிடிப்பதற்கான சுதந்திரத்தை மீறவில்லை என்று நீதிமன்றம் கூறியது.
“நாட்டில் பால் மாடுகள், இனப்பெருக்கம் செய்யும் காளைகள் மற்றும் வேலை செய்யும் எருதுகளுக்கு பற்றாக்குறை நிலவுகின்றது” என்று நீதிமன்றம் கண்டறிந்தது, எனவே “தேசிய பொருளாதாரம், பால் வழங்கல், விவசாய வேலைக்கான சக்தி மற்றும் உரம் என்பனவற்றுக்கு அவசியமாயுள்ள இம்மாடுகளைக் கொல்வதற்கான பூரணத் தடையானது பொது மக்களின் நலன்களுக்காக விதிக்கக்கூடிய ஒரு நியாயமான மட்டுப்பாடு” என நீதிமன்றம் கண்டறிந்தது.
“அனைத்து வயதுடைய மாடுகளையும், அவற்றின் கன்றுகளையும், ஆண் மற்றும் பெண் எருதுகளையும் அவற்றின் கன்றுகளையும் அறுப்பதை முற்றிலும் தடைசெய்வது” நியாயமானது என்றும், “அது உறுப்புரை 48 இல்
குறிப்பிடப்பட்டுள்ள வழிகாட்டல் கொள்கைகளுக்கு இணக்கமானது” என்றும் நீதிமன்றம் கூறியது.
எவ்வாறாயினும், “பயனற்ற கால்நடைகளை” வெட்டுவதை மொத்தமாகத் தடை செய்ய முடியாது என்று நீதிமன்றம் கூறியது. ஏனெனில், பயனற்ற கால்நடைகளை வெட்டாது வைத்திருப்பின் அவற்றுக்கு உணவளிக்க வேண்டும். ஏற்கனவே, மாடுகளுக்கான உணவுப் பற்றாக்குறை இருக்கின்ற நிலையில், பயனற்ற கால்நடைகளுக்கு உணவளித்தலானது பயன்படுத்தத்தகு கால்நடைகளில் போசனை குறைபாடு ஏற்படுவதற்கு துணை புரியும். ஆகவே, பயனற்ற கால்நடைகளை வெட்டுவதற்கான தடையினை பொது நலன் அடிப்படையில் நியாயப்படுத்த முடியாது.” என நீதிமன்றம் கூறியது.
நீதிமன்றத்தின் முன் இருக்கும் அரசியலமைப்பு தொடர்பான பிரச்சினையை இந்து சமூகத்தின் உணர்வின் அடிப்படையில் மட்டும் முடிவு செய்ய முடியாது என்றாலும், இம்மட்டுப்பாட்டின் நியாயப்பாடு தொடர்பான தனது தீர்ப்பினை அடைவதற்கு. அதனை ஏனைய பல அம்சங்களுக்கு மத்தியில் விடயமொன்றாகக் கருத்தில் கொண்டுள்ளதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.
பால் மாடு, இனப்பெருக்கும் காளை அல்லது வேலை செய்யும் எருது (கால்நடை மற்றும் எருமை) என்பன எப்பொழுது பயனற்றதாகவும், சேவை செய்ய முடியாததாகவும் மாறும் என்ற கேள்வி சட்டமியற்றுவோரால் தீர்மானிக்கப்பட வேண்டியது. அதற்கு பீகார் சட்டத்தில் எந்த ஏற்பாடும் இல்லை. இவ்விடயம் தொடர்பாக ஏதேனுமொரு ஒழுங்கை ஏற்படுத்துவதற்கான எவ்வித பரிந்துரையும் எம்மால் வழங்கப்படவில்லை. எனவே, கூறுபடுத்துகின்ற கோட்பாட்டைப் பிரயோகித்து, கறவையாக அல்லது இனப்பெருக்கம் செய்யும் அல்லது வேலை செய்யும் விலங்குகளாகப் பயன்படும் எருமைகள், வளர்ப்புக் காளைகள், வேலை செய்யும் காளைகள் (கால்நடை மற்றும் எருமை) ஆகியவற்றை வெட்டுவதற்கான தடையினை நிலைநிறுத்தி, பயனற்ற கால்நடைகளை படுகொலை செய்யவுள்ள தடையினை மட்டும் நீக்குதல் சாத்தியமற்றது.
எனவே, பால் மாடுகள், இனப்பெருக்கம் செய்யும் காளைகள், வேலை செய்யும் எருதுகளை (கால்நடை மற்றும் எருமை) வெட்டுவதைத் தடை செய்யும் அனைத்து விதிகளும் ரத்து செய்யப்பட வேண்டும். இதன் விளைவு என்னவென்றால், அனைத்து வயதுடைய மாடுகளையும், அவற்றின் கன்றுகளையும், ஆண் மற்றும் பெண் எருதுகளையும் அவற்றின் கன்றுகளையும் அறுப்பதை முற்றிலும் தடைசெய்கின்ற பீகார் சட்டம் அரசியலமைப்புச் சட்டத்திற்கு அமைவானதாகும் மற்றும் செல்லுபடியாகும் என்று நாங்கள் உறுதிசெய்து அறிவிக்கிறோம். எவ்வாறெனினும், அவற்றின் வயது அல்லது பயன்பாட்டுத்தன்மை குறித்து எந்த சோதனை அல்லது தேவையையும் பரிந்துரைக்காமல், பால் மாடுகள், இனப்பெருக்கம் செய்யும் காளைகள், வேலை செய்யும் எருதுகளை (கால்நடை மற்றும் எருமை) வெட்டுவதற்கானத் தடையானது, உறுப்புரை 19 (1) (g) கீழான மனுதாரர்களின் உரிமைகளை மீறுகிறது என்பதுடன் குறித்த அவ் அளவிற்கு அது வெறிதானதாகும்.
ஆகவே, 1955 ஆம் ஆண்டின் பசுவதைத் தடுப்புச் சட்டத்தினைப் பொறுத்தவரை, அனைத்து வயது பசுக்களையும், ஆண், பெண் என அனைத்து மாடுகளையும் அவற்றின் கன்றுகளையும் வெட்டுவதற்கான தடை அம்மட்டுமளவில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு இசைவானதாகும் என்றும், எவ்வாறெனினும், அவற்றின் வயது அல்லது பயன்பாட்டுத்தன்மை குறித்து எந்த சோதனை அல்லது தேவையையும் பரிந்துரைக்காமல், பால் மாடுகள், இனப்பெருக்கம் செய்யும் காளைகள், வேலை செய்யும் எருதுகளை (கால்நடை மற்றும் எருமை) வெட்டுவதற்கானத் தடையானது, உறுப்புரை 19 (1) (g) கீழான மனுதாரர்களின் உரிமைகளை மீறுகிற குற்றச் செயலாகும் என்றும் அது அம்மட்டுமளவில் வெறிதாகுமென்றும் நீதிமன்றம் பிரகடனப்படுத்தியது.
மத்தியப் பிரதேச சட்டத்தைப் பொறுத்தமட்டிலும், அனைத்து வயது பசுக்களையும், ஆண், பெண் என அனைத்துப் மாடுகளையும் அவற்றின் கன்றுகளையும் வெட்டுவதற்கான தடை அமட்டுமளவில், அரசியலமைப்புச் சட்டத்திற்கு இசைவானதாகும் என்றும், எவ்வாறெனினும், அவற்றின் வயது அல்லது பயன்பாட்டுத்தன்மை குறித்து எந்த சோதனை அல்லது
தேவையையும் பரிந்துரைக்காமல், பால் மாடுகள், இனப்பெருக்கம் செய்யும் காளைகள், வேலை செய்யும் எருதுகளை (கால்நடை மற்றும் எருமை) வெட்டுவதற்கானத் தடையானது அவ்வளவிற்கு வெறிதாகுமென்றும் நாங்கள் பிரகடனப்படுத்துகின்றோம். அத்துடன் குறித்த சட்டமானது அதில் குறிப்பிடப்பட்டுள்ள குறித்த அதிகாரிகளினால் வழங்கப்படுகின்ற சான்றிதழ்களின்கீழ் ஏனைய விலங்குகளைக் கொல்வதனை ஒழுங்குபடுத்தின் அது வலிதானதாகுமென்றும் நீதிமன்றம் கூறியது.
இதன்மூலம், குறித்த சட்டங்கள் வெறிதானவை எனத் தீர்க்கப்பட்டிருப்பின் அச்சட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டாமென நீதிமன்றம் மாநிலங்களைக் கேட்டுக் கொண்டது. இவ்விண்ணப்பத்திற்கான திறத்தவர்களின் செலவுகளை அவர்களே ஏற்றுக்கொள்வர்.
மனுக்கள் பகுதியளவில் அனுமதிக்கப்படுகின்றன.