பொருத்தமானதல்ல
ICCPR உறுப்புரைகளின் மீறல் ஏற்றுக்கொள்ளப்பட்டது
CCPR/C/98/D/1593-1603/2007
இத் தொடர்பாடலை மேற்கொண்டிருந்த தரப்பினர் தங்கள் மத நம்பிக்கைகள் மற்றும் மனசாட்சியின் காரணமாக இராணுவ சேவையில் இணைய மறுத்துவிட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு இராணுவ சேவைச் சட்டத்தின் உறுப்புரை 88 (பிரிவு 1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்– மனசாட்சி (அதாவது ஒருவரின் விருப்பப்படி ஒரு மதத்தை வைத்திருப்பது அல்லது ஏற்றுக்கொள்வது)
(1) கட்டாய இராணுவப் பணிக்காக அமர்த்தப்படுவதை குறித்த தரப்பினர் மறுப்பது அவர்களின் மத நம்பிக்கைகளின் நேரடி வெளிப்பாடாகும். அம் மத நம்பிக்கை மறுதலிக்கப்படாததுடன் நேர்மையாகக் கடைப்பிடிக்கப்பட்டதுமாகும். மேலும், அவர்களுக்கு வழங்கப்பட்ட தண்டனையானது அவர்களின் மனசாட்சியின் சுதந்திரத்தை மீறுவதாகும் என்று குழு குறிப்பிடுகிறது. அத்துடன் அது மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்துகின்ற அவர்களது இயலுமையின் மீது விதிக்கப்பட்ட மட்டுப்பாடாகும் என குழு குறிப்பிடுகின்றது.
(2) குறித்த இவ்வழக்கில் பிரச்சினைக்குட்பட்டுள்ள இவ் மட்டுப்பாடுகள் அவசியம் என்பதை அரச தரப்பு நிரூபிக்காததால் அது உடன்படிக்கையின் உறுப்புரை 18 இன் 3 ஆம் பந்தியினால் சொல்லப்பட்டுள்ளவற்றுக்கு அமைய உறுப்புரை 18 இன் பந்தி 1 ஐ மீறியுள்ளது என்று குழு கண்டறிந்துள்ளது.