CCPR/C/128/D/3032/2017
இத்தொடர்பாடலை மேற்கொண்ட முறைப்பாட்டாளர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஜே.ஐ ஆவார். சுவீடன் அரசானது தன்னை ஆப்கானிஸ்தானுக்கு நாடு கடத்துதலானது உடன்படிக்கையின் 6, 7 மற்றும் 18 வது உறுப்புரைகளின் கீழான தனது உரிமைகளை மீறுவதாக அவர் கூறுகிறார்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- மனசாட்சி (அதாவது ஒருவரின் விருப்பப்படி ஒரு மதத்தை வைத்திருப்பது அல்லது ஏற்றுக்கொள்வது)
(1) தன்னை ஆப்கானிஸ்தானுக்குத் திருப்பி அனுப்புவது, சீர்செய்ய முடியாத தீங்கு விளைவிக்கும் உண்மையான ஆபத்தை, ICCPR இன் உறுப்புரைகள் 6 மற்றும் 7 இற்கு முரணான ஊறை, அவருக்கு ஏற்படுத்தும் என்ற முறைப்பாட்டாளரின் கூற்றை குழு குறிப்பிடுகிறது.
(2) குழுவானது S.A.H. v Denmark, என்ற வழக்கினை சுட்டிக்காட்டி, ஒரு புகலிடக் கோரிக்கையாளர் மதமாற்றம் அல்லது மத நம்பிக்கை தொடர்பாக வேண்டுகோளொன்றினை விடுக்கின்றபோது, அம்மத மாற்றத்தின் அல்லது நம்பிக்கையின் நேர்மைத் தன்மையினைப் பொருட்படுத்தாது, அம்மத மாற்றத்தினால் அந்நபருடைய சொந்
த நாட்டில் அவர் உடன்படிக்கையின் உறுப்புரைகள் 6 மற்றும் 7 இல் குறிப்பிடப்பட்டுள்ளவாறான ஏதேனும் சீர்செய்யமுடியாத ஊறிற்கு உள்ளாவதற்கான உண்மையான அபாயம் உள்ளதா என்பதையே அறிய வேண்டும்.
எனவே, குறித்த மதமாற்றம் அல்லது நம்பிக்கை நேர்மையீனமானவை என்று கண்டறியப்பட்டாலும், அந்தச் சூழ்நிலையில், புகலிடக் கோரிக்கையாளரின் மதமாற்றம் அல்லது நம்பிக்கை தொடர்பான நடத்தை மற்றும் செயற்பாடுகள், அவரது சொந்த நாட்டில் அவருக்கு பாரதூரமான விளைவுகள் மற்றும் ஈடுசெய்ய முடியாத தீங்கினை ஏற்படுத்துமா என்பதனையே அதிகாரிகள் மதிப்பீடு செய்தல் வேண்டும்.
3) அரச தரப்பானது (ஸ்வீடன்) ஆப்கானிஸ்தானுக்குத் திரும்பியவுடன் முறைப்பாட்டாளர் எதிர்கொள்ளக்கூடிய சீர்படுத்த முடியாத தீங்கின் அபாய நேர்வினை மதிப்பிடும்போது கிடைக்கக்கூடியதாக உள்ள அனைத்து விடயங்களையும் கவனத்திலெடுத்து ஆராய்ந்துள்ளதாக குழு குறிப்பிட்டது. அரச தரப்பு அதிகாரிகளின் நிகழ்வு சார்ந்த தீரமானங்களுடன் முறைப்பாட்டாளர் உடன்படாத அதேவேளையில், 30 டிசெம்பர் 2015 அன்று மேற்கொள்ளப்பட்ட Migration Agency இன் தீரமானம் எதேச்சாதிகாரமானது அல்லது வெளிப்படையாகத் தவறானது அல்லது அது நீதியின் மறுப்பாக அமைந்தது என்பதனை அவர் நிரூபிக்கவில்லை.