Home International Cases M.Z.B.M. v. Denmark

Court
மனித உரிமைகள் ஆணைக்குழு (ICCPR) (வெளிநாட்டு நியாயாதிக்கமாயின், குறித்த நாட்டினது அடையாளம்)
Bench
Key words
உறுப்புரை 18, ICCPR
Cases referred to

பொருத்தமானதல்ல

Counsel who appeared
Date of Decision
31/03/2015
Judgement by Name of Judge/s
பொருத்தமானதல்ல
Noteworthy information relating to the case

முறைப்பாட்டாளர் தனது கோரிக்கையினையோ அல்லது ஷரியா சட்டத்தின்கீழான அவரது சிறைப்படுத்தல் மற்றும் இந்து மதத்திற்கு மாறுகின்ற அவரது எண்ணம் என்பவற்றுக்கிடையிலான தொடர்பினையோ நிரூபிக்கத் தவறியுள்ளதால் எவ்வித மீறலும் அங்கீகரிக்கப்படவில்லை.

Other information

பொருத்தமானதல்ல

M.Z.B.M. v. Denmark

CCPR/C/119/D/2593/2015

Facts of the case

டென்மார்க்கில் இருந்து மலேசியாவுக்கு திருநங்கை ஒருவரை நாடு கடத்தல்.

 

உடன்படிக்கையின் உறுப்புரை 18 (1) உடன் இணைந்து உறுப்புரை 7 உம் மீறப்பட்டுள்ளதாக இத்தொடர்பாடலை மேற்கொண்ட தரப்பினர் கோரினர். ஏனெனில் அவர் இஸ்லாத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியிருந்தார் என்பதுடன் இது மலேசியாவின் ஷரியா சட்டத்தால் அனுமதிக்கப்படாத ஒன்றாகும். ஆகவே, அவரை மலேசியாவுக்குத் திருப்பி அனுப்புகின்றபோது அவர் சிறையில் அடைக்கப்படும் அபாயம் உள்ளது.

Findings related to FoRB

சிறைப்படுத்தப்படுவதற்கான சாத்தியத்தினை நிரூபிக்குமாறாக, இந்து மதத்திற்கு மாற வேண்டுமென்ற குறித்த நபரின் எண்ணத்திற்கும் ஷரியா சட்டத்தின் பிரயோகத்திற்குமிடையே எவ்வித நெருக்கமான தொடர்பும் காணப்படவில்லை.  குறித்த நபர் “முறைப்படி” இந்து மதத்திற்கு மாறவில்லை என்றும், அத்தகைய மதமாற்றத்தை நிரூபிக்க கணிசமான ஆதாரங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை என்ற சமர்ப்பிப்பினை குழு முன்னிலைப்படுத்தி காட்டியது.

Holding/Decision

தாம் முறையாக இந்து மதத்திற்கு மாறவில்லை என்று குறித்த நபரே டென்மார்க் அதிகாரிகளுக்குத் தெரிவித்ததாக அரச தரப்பின் சமர்ப்பிப்புக் குழு குறிப்பிட்டது. குறித்த நபரால் கூறப்படும் மதமாற்றம் அல்லது அந்த மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள் பற்றிய எந்த விவரத்தையும் அவர் குழுவிற்கு வழங்கவில்லை. மலேகாவில் உள்ள ஷரியா நீதிமன்றத்தில் தன்மீது தொடரப்பட்டிருக்கும் வழக்கு தான் இந்து மதத்தில் இணைந்தது தொடர்பானது என்றோ அல்லது மதமாற்றத்தின் விளைவாக தான் துன்புறுத்தலுக்கு ஆளானதாகவோ அவர் கூறவில்லை. அவள் திருப்பி அனுப்பப்பட்டால் அத்தகைய துன்புறுத்தல், ஆபத்து ஏற்படும் தன்மை குறித்தும் எந்த விவரங்களையும் அவர் தெரிவிக்கவில்லை.

அதன்படி இந்தக் கோரிக்கை போதுமான அளவு ஆதாரமற்றது என்றும் எனவே விருப்பப் பின்னேட்டின் உறுப்புரை 2க்கு இணங்க அனுமதிக்கப்பட முடியாதது என்றும் குழு முடிவு செய்கிறது.