ICCPR இன் உறுப்புரை 20(2) இற்கமைய, தேசிய, இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுகின்றமையினை ‘சட்டத்தின் மூலம் தடைசெய்யும்’ அரச தரப்பின் கடப்பாடு மீறப்பட்டுள்ளதென அங்கீகரிக்கப்படவில்லை.
பொருத்தமானதல்ல
CCPR/C/117/D/2124/2011
ஒரு அரசியல்வாதியால் இன அல்லது மத வெறுப்பு தூண்டப்படுதல்
2006 மற்றும் 2009 க்கு இடையில், பாராளுமன்ற உறுப்பினரும், சுதந்திரத்திற்கான தீவிர வலதுசாரி அரசியல் கட்சியின் நிறுவனருமான Geert Wilders இனால் செய்யப்பட்ட பாகுபாடு, வன்முறை மற்றும் வெறுப்பைத் தூண்டும் வகையிலான அறிக்கைகள் குறித்து நூற்றுக்கணக்கான தனிநபர்கள் மற்றும் அமைப்புகளிடமிருந்து பொலிஸார் புகார்களைப் பெற்றனர்.
இருப்பினும், அரசு வழக்கறிஞர் Mr.Wilders மீது வழக்குத் தொடர வேண்டாம் என்று முடிவு செய்தார், அவருடைய அறிக்கைகள் குற்றமானவை அல்ல, மாறாக, அவை பொது விவாதத்தில் கருத்துச் சுதந்திரத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பரப்பிற்குள் உள்ளடங்குபவை என்று வாதிட்டார். குற்றவியல் சட்டத்தின் கீழ் புகாரளிக்கப்பட்டுள்ள நிகழ்வுகள் தண்டனையினை தேவைப்படுத்தாமையினால், குறித்த நபர் மீது எந்த வழக்கும் தொடரப்படாது என்று விளக்கி, Geert Wilders இற்கு எதிராகக் காவல்துறைக்கு புகாரளித்த அனைவருக்கும் வழக்கறிஞர் கடிதம் ஒன்றை அனுப்பினார்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை, பாரபட்சம்
ஒரு அரசியல்வாதியால் இன அல்லது மத வெறுப்பைத் தூண்டுதல்.
உறுப்புரை 20(2) இனால் கையாளப்படுகின்ற பேச்சினைத் தடுப்பதற்கான வினைத்திறனான சிவில் மற்றும் குற்றவியல் சட்டக் கட்டமைப்பினை குறித்தர அரச தரப்பு கொண்டுள்ளது. எவ்வாறெனினும், Geert Wilders தொடர்பாக சுயாதீனமான நீதிமன்றமொன்றில் குற்றவியல் வழக்குத் தொடர்வொன்றினைச் செய்வதற்கு அது இணங்கியது. குறித்த முறைப்பாட்டாளர்கள் அவர்கள் விரும்பிய சிவில் தீர்வினைப் பெற முனைந்தனர்- எவ்வாறெனினும், அது உயர் அளவிலான சான்றுகள் மற்றும் குற்றவியல் தூண்டுதலுக்கான நியமம் என்பவற்றைக் கவனத்திற் கொள்கின்ற குற்றவியல் நடபடிமுறைகளில் வெற்றி பெறுவதிலேயே தங்கியிருந்தது. உறுப்புரை 20(2) இன் கீழ் குற்றவியல் தண்டனைகளுக்கான ஆணை வழங்கப்பட்டிருக்கவில்லை என்பதுடன் உறுப்புரை 2(3) இன் கீழோ அல்லது உடன்பாட்டின் வேறு ஏதேனும் ஏற்பாட்டின்கீழோ வெற்றிகரமான குற்றவியல் தண்டனையை அடைந்து கொள்ள முறைப்பாட்டாளர்களுக்கு உரித்திருக்கவில்லை. இத்தகைய சூழ்நிலைகளின்கீழ், உறுப்புரை 26 உடன் “பாரபட்சம், விரோதம் அல்லது வன்முறையினைத் தூண்டக்கூடிய தேசிய, இன, அல்லது மத வெறுப்பு பிரசாரங்களை” என கூறுகின்ற உறுப்புரை 20(2) இனை இணைத்து வாசிக்கின்ற போது, அத்தகைய வெறுப்பு பிரச்சாரங்களை “சட்டத்தினூடாகத் தடுக்கின்ற” தனது கடப்பாட்டினை அரசு செய்யத் தவறியுள்ளது என்பதனை முறைப்பாட்டாளர்கள் நிரூபிக்கத் தவறியுள்ளனர். அத்துடன் அத்தகைய மீறலுக்கான நிவாரணத்தினை வழங்க அரச தரப்பு தவறியுள்ளது என்றும் நிரூபிக்க முறைப்பாட்டாளர்கள் தவறியுள்ளனர்.
(1) “உறுப்புரை 20 (2) ஆனது தனிநபர்களாகவும் குழுக்களின் உறுப்பினர்களாகவும் மக்கள் வெறுப்பு மற்றும் பாகுபாட்டிலிருந்து விடுபடுவதற்கான உரிமையைக் குறிப்பிடுகின்றது. உறுப்புரை 26 இன் கீழ் அரச திறத்தவர்கள் குறிப்பிட்ட கசில நடத்தைகள் மற்றும் வெளிப்படுத்தல்களைச் சட்டத்தின் மூலம் தடை செய்ய வேண்டும் என தேவைப்படுத்தப்படுகின்றன. உறுப்புரை 20 இல் குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட வகையான வெளிப்படுத்தல்கள் தொடர்பில் மட்டுமே அரச திறத்தவர்கள் சட்டப்பூர்வ தடைகளை வைத்திருக்க வேண்டும். உறுப்புரை 19 இன் கீழான கருத்துச் சுதந்திரம் உட்பட மற்றைய சமமான அடிப்படை உடன்படிக்கை உரிமைகள் மீறப்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்காக, உறுப்புரை 20 (2) ஆனது குறுகியதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கருத்துச் சுதந்திரம் என்பது ஆழமாக புண்படுத்தக்கூடியதாகக் கருதப்படும் வெளிப்படுத்தலை கூட உள்ளடக்கியதாகக் காணப்படுகிறது. இதனை குழு நினைவு படுத்திக் கொண்டது. மேலும், குடிமக்கள், வேட்பாளர்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு இடையே பொது மற்றும் அரசியல் பிரச்சினைகள் பற்றிய தகவல் மற்றும் யோசனைகளின் சுதந்திரமான தொடர்பாடல் வெளிப்படுத்தலுக்கான சுதந்திரத்தை ஊக்குவிப்பதற்கும் மற்றும் பாதுகாப்பதற்கும் அவசியம் ஆகும்.
(2) உறுப்புரைகள் 19 மற்றும் 20 ஆகியவை ஒன்றுக்கொன்று இணக்கமானவை மற்றும் ஒன்றையொன்று பூர்த்தி செய்கின்றன என குழு கூறியது. உறுப்புரை 20 இன் அடிப்படையில் நியாயப்படுத்தப்படும் ஒரு மட்டுப்பாடானது உறுப்புரை 19 (3) இன் கடுமையான தேவைப்பாடுகளுடனும் இணங்கியிருத்தல் வேண்டும். ஆகவே, எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உறுப்புரை 20(2) இன்கீழ் காணப்படுகின்ற சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள எந்தவொரு மட்டுப்பாடும், உறுப்புரை 19 (3) இன் துணைப் பந்திகள் (a) மற்றும் (b) இல் குறிப்பிடப்பட்டுள்ள உள்ள ஒரு காரணத்திற்காக மட்டுமே விதிக்கப்படலாம். மேலும் அவை அவசியம் மற்றும் விகிதசமன் ஆகிய தேவைப்பாடுகளுடனும் இணங்க வேண்டும்.
(3) உறுப்புரை 20 (2) இற்கு முரணாக செய்யப்படுகின்ற அறிக்கைகளை தடை செய்வதற்கும், அத்தகைய அறிக்கைகளினால் ஏற்படும் விளைவுகளிலிருந்து முறைப்பாட்டாளர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு பயனுள்ள தீர்வினை வழங்கவும் அவசியமான மற்றும் விகிதசமமான நடவடிக்கைகளை அரச தரப்பு எடுத்துள்ளது என்று குழு கூறியது. எவ்வாறாயினும், பிரிவு 20 (2) இன் கீழ் உள்ள கடப்பாடானது, பாரபட்சம், விரோதம் அல்லது வன்முறையைத் தூண்டியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒரு நபர் ஒரு சுதந்திரமான மற்றும் பாரபட்சமற்ற நீதிமன்றத்தால் தவறாமல் தண்டிக்கப்படுவதை உறுதிசெய்கின்ற அளவிற்கு நீட்டிக்கப்படாது. எனவே உடன்படிக்கையின் உறுப்புரைகள் 26 மற்றும் 20 (2) உடன் சேர்த்து வாசிக்கப்பட்ட உறுப்புரை 2 (3) இனை அரச தரப்பு மீறியுள்ளது என்று குழு முடிவு செய்ய முடியாது.