UKSC 15 (2009)
E என்பவர் M ஆன தனது மகனை பள்ளியில் சேர்க்க மறுத்தமையானது தன்னை இனரீதியாகப் பாரபட்சப்படுத்துவதாகும் என முறைப்பாடு செய்தார். பள்ளி பழமைவாத யூத மதச் சோதனையொன்றைப் பயன்படுத்தியது, E இன் குடும்ப வரலாற்றின் காரணமாக அச்சோதனை அவரை யூதராகக் கணக்கிடவில்லை.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல் – பாரபட்சம்: பொருளாதார, அரசியல், குற்றவியல் நீதி. மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
இந்த விடயத்தில் மத மற்றும் இன நிலையை வேறுபடுத்துவதில் சிரமங்கள் உள்ளன. நீதிபதி ஃப்ரேசரால் அடையாளம் காணப்பட்ட இனத்திற்கான அளவுகோல்களில் ஒன்றாக பகிரப்படுகின்ற மதம் அமைகின்றது. யூதர்களைப் பொறுத்தமட்டில், இதுவே மேலாதிக்க அளவுகோலாகும். அவர்களின் விடயத்தில், இன அந்தஸ்து மற்றும் மத அந்தஸ்தை வேறுபடுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இரண்டும் கிட்டத்தட்ட ஒன்றோடொன்று விரிவாக இணைந்தவை. யூத மதத்திற்கு மாறும் ஒரு பெண் அதன் மூலம் யூத மத அந்தஸ்து மற்றும் யூத இன அந்தஸ்தைப் பெறுகிறாள்.
இந்த காரணங்களுக்காக, தாய்வழி உறவினரின் தொடர்புடைய பண்புகளுள் வெறுமனே மதம் மட்டும் கணக்கிலெடுக்கப்படுவதில்லை என்பது தெளிவாகிறது. அது வகுப்பாகவும், சில சமயங்களில் இனமாகவும் இருக்கலாம்.
குறித்த நபர் இரண்டு குழுவில் எதாவது ஒன்றிலேனும் இருக்கிறார் அல்லது இல்லை என்பதனை அடிப்படையாகக் கொண்டு பாரபட்சப்படுத்தல் இன பாரபட்சமாகும். குறித்த பாடசாலையானது மன்டலாவில் உள்ள அவ் யூத பெண்ணின் பரம்பரை வம்சாவழி மற்றும் மத காரணங்களை அடிப்படையாகக் கொண்டு அனுமதியினை மறுக்கின்றது. ஆகவே, இதனை இன பாரபட்சமாகக் கொள்ளாதிருக்க எந்த வாய்ப்பும் இல்லை என நீதிமன்றம் தீர்மானிக்கின்றது.