3.Church of the New Faith v Comr of Pay-Roll Tax (Victoria) (1983) 154 CLR
4. Davis v Beason 133 US 333 (1890)
மேன்முறையீடு அனுமதிக்கப்படுகிறது.
பொருத்தமானதல்ல
UKSC 77 (2013)
மேன்முறையீடு செய்பவர் மத அறிவியலைப் பயிற்சி செய்தார். அவர் மத அறிவியல் தேவாலயத்தில் திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டார். முந்தைய வழக்குகளில் தீர்மானிக்கப்பட்டுள்ள பிரகாரம், மத அறிவியல் தேவாலயங்கள் வழிபாட்டு இடங்கள் பதிவுச் சட்டத்தின்படி மத வழிபாட்டிற்கான சந்திப்பு இடமாகக் கருதப்பட மாட்டாது. இதன் விளைவாக அங்கு வலிதான திருமண விழாவொன்றை நடத்த முடியவில்லை.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- மனசாட்சி (அதாவது ஒருவரின் விருப்பப்படி ஒரு மதத்தை வைத்திருப்பது அல்லது ஏற்றுக்கொள்வது) பாரபட்சம். மேல்முறையீடு அனுமதிக்கப்படுகிறது.
(1) “ஆங்கில சட்டத்தில் அனைவருக்கும் ஏற்பாகக்கூடிய பொதுவான வரைவிலக்கணமொன்று மதம் தொடர்பில் காணப்படவில்லை. மேலும் பல ஆண்டுகளாக பொதுச் சட்டம் பின்பற்றப்பட்டு வரும் நாடுகளில் நேர்ந்த அனுபவத்தை கொண்டு பார்க்கையில், மதம் என்ற சொல்லிற்கு ஒரு குறுகிய சுற்றப்பட்ட அர்த்தத்தை இணைக்க முயற்சிப்பதில் உள்ள சிக்கல்கள் வெளிப்படுகின்றன. இதற்குப் பல காரணங்கள் உள்ளன – பிரச்சனை எழக்கூடிய பல்வேறு சூழல்கள், பல்வேறு உலக மதங்கள், புதிய மதங்கள் மற்றும் மத நடைமுறைகளின் வளர்ச்சிகள் மற்றும் சமூகத்தில் இடம்பெறும் கலாச்சார மாற்றங்கள் காரணமாக மதத்தின் கருத்தைப் பற்றிய பொதுவான புரிதல்கள் வளர்ச்சியடைகின்றமை என்பன அத்தகைய சில காரணங்களாகும்.
சட்டம் தோன்றிய வரலாறை அறிதல் அச்சட்டத்தின் நோக்கத்தைப் புரிந்து கொள்வதற்கு உதவுகின்ற போதிலும், குறித்த சட்டத்தின் பிரிவு 2 இல் உள்ள “மத வழிபாட்டிற்கான இடம்” என்பதனை சமகாலத்தில் மதம் தொடர்பாகவுள்ள புரிதலுக்கு ஏற்ப பொருள்கொள்ள வேண்டுமேயொழிய, 1855 இல் காணப்பட்ட கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு பொருட்கோடல் செய்ய கூடாது. 150 ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்ற உறுப்பினர்கள் அறிவியலை ஒரு மதமாக கருதியிருப்பார்களா என்று எண்ணுவது ஏற்புடையதல்ல.
(2) குறித்த சேவையின் வடிவம் Segerdal வழக்கில் ஏற்றுக்கொள்ளப்பட்ட குறுகிய வரையறைக்குள் வந்தாலும் வராவிட்டாலும், “மத வழிபாடு” என்ற வெளிப்பாடு மத சேவைகளை உள்ளடக்கும் அளவுக்கு பரந்த அளவில் உள்ளது. இந்த பரந்த விளக்கம் நிலையான அகராதி வரையறைகளுடன் ஒத்துப்போகிறது. சேம்பர்ஸ் அகராதியின் 12வது பதிப்பு (2011) “வழிபாடு” என்ற பெயர்ச்சொல்லை “தெய்வத்திற்கு செலுத்தப்படும் வழிபாடு முதலியன” மற்றும் “மத சேவை” ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக வரையறுக்கிறது, மேலும், “வழிபாடு” என்பதன் வினை வடிவத்தினை இவ் அகராதி “வணக்கத்திற்குரிய செயல்களைச் செய்வது” மற்றும் “சமய சேவையில் பங்கு கொள்தல்” என வரையறுக்கிறது. இதேபோல், சுருக்கமான ஆக்ஸ்போர்டு ஆங்கில அகராதி, 12வது பதிப்பு (2011), “வழிபாடு” என்பதனை “ஒரு தெய்வத்தின் மீதான பயபக்தி மற்றும் வணக்கத்தின் உணர்வு அல்லது வெளிப்பாடு” மற்றும் “மத சடங்குகள் மற்றும் விழாக்கள்” ஆகிய இரண்டையும் உள்ளடக்கியதாக வரையறுக்கிறது.
(3) இத்தகைய ஒரு பரந்த பொருட்கோடலானது, ஒரு மத சபையின் உறுப்பினர்கள், அவர்கள் தங்கள் மத சடங்குகளைச் செய்யும் இடத்தில், திருமணத்திற்கான மதச் சடங்குகளை நடத்த அனுமதிக்கும் சட்டத்தின் நோக்கத்துடன் இணங்குகிறது. அவ்வாறு செய்வதற்கான அவர்களின் அதிகாரம், அவர்கள் எல்லையற்றவற்றுடனான (அறிஞர்களால் அவர்களின் மத மற்றும் உலகளாவிய பிரார்த்தனையில் “கடவுள்” என்று குறிப்பிடப்படுகிறது) தங்கள் உறவை எவ்வளவு துல்லியமாகப் பார்க்கிறார்கள் மற்றும் வெளிப்படுத்துகிறார்கள் என்பதற்கான சிறந்த இறையியல் அல்லது வழிபாட்டு முறைகளை சார்ந்து இருக்கக்கூடாது. இந்த வழக்கின் சாட்சியங்களில் மிக விரிவாகப் பேசப்பட்ட அந்த விடயங்கள், பதிவாளர் நாயகம் அல்லது நீதிமன்றங்களால் தீர்மானிக்கப்பட வேண்டிய வியடங்கள் அல்ல, மாறாக அவை இறையியல்வாதிகளால் தீர்மானிக்கப்பட வேண்டிய விடயமாகும்.
(4) நீதிமன்றம் Segerdal என்ற வழக்கு தீர்ப்பினை விஞ்சி செயற்பட்டு அதனை ரத்து செய்து மேன்முறையீட்டினை அனுமதித்தது. 146 ராணி விக்டோரியா தெருவில் உள்ள தேவாலயம் குறித்த சட்டத்தின் பிரிவு 2 இன் கீழான சமய வழிபாட்டிற்கான கூடும் இடமொன்றென பிரகடனப்படுத்தியது, அத்துடன் அவ்விடத்தினை குறித்த சட்டத்தின் பிரிவு 3 இன்கீழ் தேவாலயமாகப் பதிவு செய்யவும், திருமணச் சட்டத்தின் பிரிவு 41(1) இன் கீழ் திருமணங்கள் நடைபெறும் இடமொன்றாகப் பதிவு செய்யவும் பதிவாளர் நாயகத்திற்கு உத்தரவிட்டது.