குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்
N.C. Chatterjee and U. M. Trivedi (H. H. Dalal and I. N. Shroff -with them) for the appellants in Appeal No., I of 1954.Rajinder Narain for the appellants in Civil Appeal. No. 7 of 1954.
M. C. Setalvad and C.K. Daphtary (G. N. Joshi and Porus A. Mehta, with them) for the respondents in both the appeals.
Madras v. Sri Lakshmindra Tirtha Swamiar என்ற வழக்கின் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிமன்றம் பின்வரும் அவதானிப்புகளை மேற்கொண்டது:
அரசியலமைப்பின் 25 வது உறுப்புரை இந்திய பிரஜைகளுக்கு மட்டுமல்லாமல் ஒவ்வொரு நபருக்கும் மனசாட்சியினைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் மற்றும் சுதந்திரமாக மதத்தை பின்பற்றுவதற்கும் பிரச்சாரம் செய்வதற்கும் உரிமை என்பனவற்றை அளிக்கிறது. இது ஒவ்வொரு சந்தரப்பத்திலும் பொது ஒழுங்கு, சுகாதாரம் மற்றும் ஒழுக்கத்திற்கு உட்பட்டது.
மேலும் இவ் உரிமைகளுக்கான விதிவிலக்குகள் உறுப்புரையின் உட்பிரிவு (2) இல் குறிப்பிடப்பட்டுள்ளன. உட்பிரிவு (2) இன் உபவாசகம் (a) ஆனது மத நடைமுறையுடன் தொடர்புடைய எந்தவொரு பொருளாதார-நிதி, அரசியல் அல்லது பிற மதச்சார்பற்ற நடவடிக்கைகளையும் ஒழுங்குபடுத்தும் அல்லது கட்டுப்படுத்தும் சட்டங்களை உருவாக்கும் மாநில அரசின் அதிகாரத்தை உறுதிப்படுத்துகின்றது என்பதுடன் உபவாசகம் (b) ஆனது சமூக சீர்திருத்தம் மற்றும் சமூக நலனுக்கான சட்டங்களை உருவாக்கும் அதிகாரத்தை, அவை மத நடைமுறைகளில் தலையிடக்கூடும் என்ற சந்தர்ப்பங்களிலும் கூட- மாநில அரசிற்கு வழங்குகின்றது.
எனவே, உறுப்புரை 25 விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு, எமது அரசியலமைப்பின்கீழ் ஒவ்வொரு நபருக்கும் நமது அரசியலமைப்பின் கீழ் அவரது தீர்ப்பு அல்லது மனசாட்சியால்
அங்கீகரிக்கப்படும் அத்தகைய மத நம்பிக்கையை பின்பற்றுவதற்கான உரிமை மட்டுமல்லாமல், தனது நம்பிக்கையையும் கருத்துக்களையும் இதுபோன்ற வெளிப்படையான செயல்களில் வெளிப்படுத்துவதற்கான உரிமையும் அவரது மதக் கருத்துக்களை ஏனையோர் அறிந்து கொள்வதற்காக அவற்றை பிரச்சாரம் செய்கின்ற உரிமையும் உள்ளன.
ஒரு நபர் தனிப்பட்ட ரீதியிலா அல்லது ஏதேனும் தேவாலயம் அல்லது நிறுவனம் சார்பாக பிரச்சாரம் செய்தாரா என்பது முக்கியமற்றது.
பொருத்தமானதல்ல
[1954] AIR 388
பம்பாயில் உள்ள ஒரு ஜெயின் பொதுக் கோயிலின் மேலாளர் மற்றும் பார்சி பஞ்சாயத்து நிதி மற்றும் சொத்துக்களின் அறங்காவலர்கள் ஆகியோர் 1950 ஆம் ஆண்டின் பம்பாய் பொது அறக்கட்டளைச் சட்டம் அரசியலமைப்புடன் இணங்குகின்ற தன்மையினை பம்பாய் உயர்நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தினர்.
இரண்டு வழக்குகளிலும் மனுதாரர்கள், பம்பாய் மாநிலத்தில் உள்ள பொது மற்றும் மத நம்பிக்கைகளை ஒழுங்குபடுத்துவதற்கான சிறந்த ஏற்பாடுகளை ஆக்கும் பொருட்டு பம்பாய் சட்டவாக்கத்துறையினரால் உருவாக்கப்பட்ட பம்பாய் பொது அறக்கட்டளைச் சட்டம் (1950 ஆம் ஆண்டின் 29 ஆம் சட்டம்) என அழைக்கப்படும் இச்சட்டம் அரசியலமைப்புடன் இணங்குகின்ற தன்மையினை சவாலுக்குட்படுத்தினர். அதன் ஏற்பாடுகள் பொது, மத, தர்ம நோக்கங்களுக்கான அனைத்து கோவில்கள், மற்றும் ஏனைய அனைத்து நம்பிக்கை அமைப்புக்களுக்கும், வெளிப்படையாகவோ அல்லது பொருட்கோடலினூடாகவோ பிரயோகமாயின.
எனவே, 1950 ஆம் ஆண்டின் பம்பாய் சட்டத்தின் ஏற்பாடுகள் உறுப்புரை 25 (1) க்கு முரணானது மற்றும் அரசியலமைப்பின் 26 (b) மூலம் பாதுகாக்கப்பட்டுள்ள மத விடயங்களைக் கண்காணிக்கும் நெகிழ்வுத்தன்மைக்கு முரணானது என்ற அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
அரசியலமைப்பின் உறுப்புரை 26 இன் உட்பிரிவுகள் (c) மற்றும் (d) ஆகியன இயற்றப்பட்ட சட்டத்திற்கு அதிகாரமளிக்கும் அதிகாரத்தினை மாநிலத்திற்கு வழங்கியுள்ளது. ஆகவே, இவ் உறுப்புரைகளின் அடிப்படையில் பம்பாய் மேல் நீதிமன்றமானது குறித்த மேன்முறையீட்டினை நிராகரித்ததுடன் தற்போதைய வழக்கிலே நீதிமன்றம் ‘மதம்’ என்பதற்கு வழங்கிய வரைவிலக்கணத்தின் அடிப்படையில் மாநிலம் சார்பாக குறித்த வழக்கினைத் தீர்த்தது. குறித்த வரைவிலக்கணமானது மதத்தினை வெறுமனே ஒழுக்கம் சார்ந்தவொன்றாக குறைத்து காட்டியதுடன் மத நடைமுறைகள் போன்ற விடயங்களை இவ்வரையறை விலக்களித்திருந்தது.
மத நிறுவனமொன்று மதம் தொடர்பான தமது சொந்த விடயங்களை முகாமை செய்வதற்கான உரிமையினைக் கொண்டுள்ளது. இவ் உரிமையானது தெளிவான முறையில் அரசியலமைப்பினால் உத்தரவாதம் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இவ் உரிமையானது, மதத்திற்காக மற்றும் மத நோக்கங்களுக்காக மற்றும் குறித்த நிறுவனத்தின் வழக்காறினூடாகத் தாபிக்கப்பட்டிருக்கும் அல்லது ஸ்தாபகரால் கூறப்பட்டிருக்கும் குறிக்கோள்களை அடைந்து கொள்வதற்காக அந்நிறுவனத்தின் ஆதனம் அல்லது அதன் வருவாயினைச் செலவழிக்கும் உரிமையினையும் உள்ளடக்கும்.
அறக்கட்டளை ஆணையர் அல்லது நீதிமன்றம் பயனுள்ளது அல்லது சரியானதென கருதும் நோக்கங்களுக்காக அறக்கட்டளை சொத்து அல்லது நிதியைப் பயன்படுத்துவதானது, ஸ்தாபகரின் உண்மையான குறிக்கோள்களைச் செயற்படுத்தக் கூடியதாக உள்ள சந்தர்ப்பங்களிலும்கூட, தங்களுடைய சொந்த மத விவகாரங்களை முகாமை செய்வதற்கான மத நிறுவனங்களின் சுதந்திரத்தில் மேற்கொள்ளப்படுகின்ற தேவையற்றத் தலையீடு ஆகும்.
மத நம்பிக்கையுடன் இணங்குகின்ற மத நடைமுறைகள் அல்லது செயற்பாடுகள், குறிப்பிட்ட கோட்பாடுகளில் மதத்தின் அல்லது நம்பிக்கையின் பகுதியொன்றாகக் கருதப்படுகின்றது.
இவ்வாறு, ஜைன அல்லது பார்சி மதத்தின் கோட்பாடுகள் சில சடங்குகள் குறிப்பிட்ட எண்ணிக்கையான தடவைகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட முறையில் செய்யப்பட வேண்டும் என கூறுகின்றபோது, வெறுமனே அச்சடங்குகள் பணச் செலவு அல்லது பூசாரிகளை வேலைக்கமர்த்தல் அல்லது சந்தைப்படுத்தக்கூடிய பொருட்களின் பயன்பாடு என்பனவற்றை உள்ளடக்குகின்றன என்ற காரணத்தினால் அவை வணிக அல்லது பொருளாதாரத் தன்மையைக் கொண்ட மதச்சார்பற்ற நடவடிக்கைகள் என்று கூற முடியாது.
எனவே, “இவை மதம் மற்றும் அதன் முக்கிய பகுதிகள் அல்ல என்று கூற எந்த வெளிவாரி அதிகாரிக்கும் உரிமை இல்லை” என்று நீதிமன்றம் வலியுறுத்தியது. “அற சொத்தை நிர்வகிக்கின்றோம் என்ற போர்வையில் அவர்கள் விரும்புகின்ற முறையில் அவர்கள் செயற்படுவதனை மட்டுப்படுத்துகின்ற அதிகாரம் மதசார்பற்ற அரசிற்கு கிடையாது” என்றும் நீதிமன்றம் கூறியது.
1950 ஆம் ஆண்டின் பம்பாய் பொது அறக்கட்டளைச் சட்டத்தின் பிரிவு 44 ஆனது, எந்தவொரு பொது அறக்கட்டளைக்கும், அவை கோவில் அல்லது மத சார்பான அறக்கட்டளைகளாக இருப்பினும் கூட, அதனை நிர்வகிப்பதற்கான தர்ம ஆணையாளரை நீதிமன்றத்தினூடாக நியமிப்பது தொடர்பானது ஆகும். இது அரசியலமைப்புடன் இசைவாகவில்லை என்றும் அதனால் வெறிதாக்கப்பட வேண்டுமென்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
மேலும், அறக்கட்டளையின் மீது விதிக்கப்படும் பங்களிப்பு ஒரு வரி என்றும், இவ்வாறு வரி விதித்தலானது மாநில சட்டமியற்றும் சபையின் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும் வாதிடப்பட்டது. இந்தச் சிக்கலுக்குப் பதிலளிக்கையில், சட்டத்தின் 58வது பிரிவின்படி மாநில சட்டமன்றம் அதிகார வரம்பிற்கு அப்பால்
செயற்படவில்லை என்று நீதிமன்றம் கூறியது, ஏனெனில் பிரிவின் கீழ் விதிக்கப்படும் பங்களிப்பு வரி அல்ல, மாறாக, அது அட்டவணை VII இல் உள்ள பட்டியல் III இன் 47வது பிரிவின் பரப்பிற்குள் உள்ளடக்கப்படக்கூடிய கட்டணமாகும்.
மேன்முறையீடுகள் பகுதியளவில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன, மேலும் சட்டத்தின் கீழ்வரும் ஏற்பாடுகளை மேன்முறையீட்டாளர்களுக்கு எதிராக நடைமுறைப்படுத்துவதனைத் தவிர்க்குமாறு மாநில அரசு மற்றும் அறநிலைய ஆணையருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
(i) சட்டத்தின் பிரிவு 44- நீதிமன்றம் அறநிலைய ஆணையரை மதம் சார்ந்த பொது நம்பிக்கை அமைப்பொன்றின் அறங்காவலராக நியமிப்பது தொடர்பான அளவிற்கு,
(ii) உறுப்புரை 47 இன் (3) முதல் (6) வரையான வாசகங்கள்
(iii) உறுப்புரை 55 இன் வாசகம் (உ) மற்றும் உறுப்புரை 56 இன் வாசகம் (1) இன் ஒரு பகுதி.