Home International Cases Rev. Satya Ranjan Majhi and anr. v. State of Orissa and Ors.

Court
இந்திய மேல் நீதிமன்றம்
Bench
P Balasubramanyan CJ, P Mohanty J
Key words
இந்திய அரசியலமைப்பின் உறுப்புரை 25
Cases referred to

பொருத்தமானதல்ல

Counsel who appeared
Date of Decision
05/03/2003
Judgement by Name of Judge/s
P.K. Balasubramanyan, C. J.
Noteworthy information relating to the case

மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

Other information

பொருத்தமானதல்ல

Rev. Satya Ranjan Majhi and anr. v. State of Orissa and Ors.

AIR 2003 Ori 2003 2003 I OLR 404

Facts of the case

1967 ஆம் ஆண்டு ஒரிசா மத சுதந்திரச் சட்டத்தின் உறுப்புரை 2, 1989 ஆம் ஆண்டின் ஒரிசா மதச் சுதந்திர விதிகளின் விதிகள் 4 மற்றும் 5, மற்றும் 1999 ஆம் ஆண்டு ஒரிசா மதச் சுதந்திர விதிகளுக்கு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்தினூடாகச் சேர்க்கப்பட்ட விதிகள் 2 மற்றும் 3 என்பனவற்றின் அரசியலமைப்பு வலிதாந்தன்மை மற்றும் சட்டபூர்வதன்மை கேள்விக்குட்படுத்தப்பட்டன.

Findings related to FoRB

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- மனசாட்சி (அதாவது ஒருவரின் விருப்பப்படி ஒரு மதத்தை வைத்திருப்பது அல்லது ஏற்றுக்கொள்வது)

 

சட்டத்தின் பிரிவு 7 ஆனது, சட்டத்தின் ஏற்பாடுகளை நிறைவேற்றும் நோக்கத்திற்காக விதிகளை உருவாக்க மாநில அரசுக்கு விதிகளை ஆக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இச்சட்டம் இயற்றப்பட்டதன் வெளிப்படையான நோக்கம் பலப்பிரயோகம், தூண்டுதல் அல்லது ஏதேனும் மோசடியான வழிமுறைகள் மூலம் இடம்பெறும் மதமாற்றம் அல்லது மதமாற்ற முயற்சிகளைத் தடுக்க வேண்டும் என்பதாகும். சட்டத்தின் இந்த நோக்கத்தை நிறைவேற்றுவதற்காகவே விதிகள் வகுக்கப்பட்டுள்ளன என்பதுடன் 3 முதல் 7 வரையிலான விதிகள் சட்டத்தால் தடைசெய்யப்பட்ட மதமாற்றங்கள் நடைபெறாமல் இருப்பதை உறுதிசெய்வதற்காகவே உள்ளன.

 

26-11-1999 தேதியிட்ட அறிவிப்பின் மூலம் ஆக்கப்பட்ட விதி 5 இற்கான துணை விதி 2 ஆனது, மதமாற்றங்கள் அல்லது மத மாற்ற முயற்சிகள் சட்டத்தினால் தடுக்கப்படுகின்றன அல்லது கட்டுப்படுத்தப்படுகின்றன என்பதனை உறுதிப்படுத்தும் பொருட்டே ஆக்கப்பட்டது.

 

உள்ளூர்மட்ட விசாரணைக்கான விதிகள் மற்றும் எந்தத் தரப்பிலிருந்தும் ஏதேனும் ஆட்சேபனை உள்ளதா என்பதைக் கண்டறிவதற்கான விதிகள் என்பனவும், மத மாற்றமானது மதம் மாறுபவரின் சுதந்திரத் தெரிவின் அடிப்படையில் இடம்பெறுகின்றது என்பதுடன்  எந்தவிதமான பலாத்காரம், தூண்டுதல் அல்லது மோசடியும் மதம் மாறுபவர் தொடர்பாக செய்யப்படவில்லை என்பதை உறுதிசெய்வதனை மட்டுமே நோக்கமாகக் கொண்டுள்ளன.

மதமாற்றம் செய்யப்படுவதற்கு முன், ஒரு நபர் வேறு ஒருவரை தனது மதத்திற்கு மாற்ற விரும்புவதாக பிரகடனப்படுத்த வேண்டும் என்ற தேவைப்பாடும், குறித்த மதமாற்றமானது சட்டத்தால் எதிர்க்கப்படுகின்ற மதமாற்றமாக இல்லை என்பதனை  உறுதிசெய்வதற்காக மட்டுமே காணப்படுகின்றது. ஆகவே, இவ்விதிகளில் எந்த குறைபாடுகளையும் நாங்கள் காணவில்லை. விதிகள் சட்டத்தின் 7வது பிரிவின் மூலம் வழங்கப்பட்ட விதி உருவாக்கும் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவை என்றும் கூற முடியாது.

Holding/Decision

  • ‘… இங்குள்ள மனுதாரர்கள் எந்த மதத்திற்கும் தங்களை மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் அல்ல. அவர்கள் மற்றவர்களை தங்கள் மதத்திற்கு மாற்ற விரும்பும் நபர்கள். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 25வது உறுப்புரையின் கீழ் தங்களின் உரிமை மீறப்பட்டுள்ளது என்ற அவர்களின் வாதம், மேலே குறிப்பிடப்பட்ட உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பால் தெளிவாக நிராகரிக்கப்படுகிறது.

 

நாம் கவனித்தபடி, மற்றொரு நபரை தனது சொந்த மதத்திற்கு மாற்றுவதற்கான உரிமை இந்திய அரசியலமைப்பின் 25 (1) வது உறுப்புரையின் கீழ் இல்லை என்றும், மற்றொரு நபரை தன்னுடைய மதத்திற்கு மாற்றுவதற்கான அடிப்படை உரிமை யாருக்கும் இல்லை என்றும் உச்ச நீதிமன்றம்  தெளிவாகக் கூறியுள்ளது. இதுபோன்ற

எவ்வித சட்டத்தையும் அரசியலமைப்பின் உறுப்புரை 25(2) இன்கீழ் இயற்ற முடியாதென்ற மனுதாரர்களுக்கான கற்றறிந்த வழக்கறிஞரின் வாதத்தினை ஏற்க முடியாது. ஏனெனில், மேற்கூறப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பில், ‘இந்திய அரசியலமைப்பின் ஏழாம் அட்டவணையின் நுழைவு 1, பட்டியல் II இல் சொல்லப்பட்டுள்ள பொது ஒழுங்கினைப் பேணுவதற்காக சட்டம் இயற்றும் தகைமை சட்டத்துறைக்கு உண்டு’ என நீதிமன்றம்  தெளிவாகக் கூறியுள்ளது.

 

  • ‘… மதமாற்றம் செய்ய விரும்பும் மனுதாரர்கள் மதமாற்றம் சுதந்திரமாகவும் நியாயமாகவும் இருப்பதை உறுதிசெய்ய பரிந்துரைக்கப்படுகின்ற நடைமுறைக்கு எந்த ஆட்சேபனையினையும் கொண்டிருக்க முடியாது என்று நாங்கள் கருதுகிறோம். அவர்கள் தங்களின் மதங்களை மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் அல்ல, மேலும் ஆனால் அவர்கள் இவ்விதிகளை அபாயகரமானதாக, நடைமுறை சாத்தியமில்லாததாக அல்லது எதேச்சாதிகாரமானதாகக் கருதுகின்றனர்.

 

அவர்கள் வெறுமனே மற்றொரு நபரை தங்கள் மதத்திற்கு மாற்றுவதற்கு விதிகளால் பரிந்துரைக்கப்பட்ட வழிமுறைகளைப் பின்பற்ற விரும்பாத நபர்கள். அவர்கள் சொல்வதுபோல விதிகள் செல்லாது என்பதைக் கண்டறிவதற்கான எவ்வித சாத்தியமும் இல்லை என்று நாங்கள் நம்புகிறோம்.