பொருத்தமானதல்ல
பொருத்தமானதல்ல
1977 AIR 908, 1977 SCR (2) 611, 1977 SCC (1) 677
ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் சட்டத்தின் பரிந்துரைக்கப்பட்ட வரம்புகளுக்குள் ஒருவரது மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கவும், பின்பற்றவும் மற்றும் பிரச்சாரம் செய்யவும் அதிகாரம் அளிக்கின்ற இந்திய அரசியலமைப்பின் 25 (1) வது உறுப்புரையானது, வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரைத் தன்னுடைய மதத்திற்கு மாற்றுகின்ற உரிமையினையும் உள்ளடக்குகின்றதா என்பதே இவ்வழக்கின் பிரதான பிரச்சினையாகும்.
ஒருவரின் மதத்தைப் பிரச்சாரம் செய்வதற்கான உரிமை என்பது ஒரு நபரின் நம்பிக்கையை மற்றொரு நபரிடம் தெரிவிப்பதற்கு அல்லது அந்த நம்பிக்கையின் கொள்கைகளை அம்பலப்படுத்துவதற்கான உரிமையாகும் என்பதுடன் அது எந்தவொரு நபரையும் முன்னவரின் நம்பிக்கைக்கு “மாற்றும்” உரிமையை உள்ளடக்காது. எனவே, மதம் மாற்றுவதற்கான உரிமைக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என்பதுடன், அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள மதச் சுதந்திர உரிமையின் கீழான சட்டப் பாதுகாப்பை அது அனுபவிக்க முடியாது.
உறுப்புரையில் “பிரச்சாரம்” என்ற சொல் நபரிடமிருந்து நபருக்கு அல்லது இடத்திலிருந்து இடத்திற்கு கடத்த அல்லது பரப்புதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றொரு நபரை தனது சொந்த மதத்திற்கு மாற்றுவதற்கான உரிமையை இந்த உறுப்புரை வழங்கவில்லை, மாறாக, ஒருவரின் மதத்தை அதன் கொள்கைகளை
வெளிப்படுத்துவதன் மூலம் பரப்புவதற்கான உரிமையினையே வழங்குகின்றது.
உறுப்புரை 25 இன் பிரயோகத் தன்மையைப் பொறுத்தவரை, உறுப்புரையில் குறிப்பிடப்பட்டுள்ள மத சுதந்திரம் ஒரு மதத்திற்காக மட்டும் உத்தரவாதமளிக்கப்படவில்லை, மாறாக, அது அனைத்து மதங்களுக்காகவும் உத்தரவாதமளிக்கப்பட்ட ஒரு உரிமை ஆகும். ஒருவருக்கொருவர் ஒத்திசைவாக அனுபவிக்கின்றபோதே இவ் மத சுதந்திரத்தினை ஒவ்வொருவரும் அனுபவிக்க முடியும். ஒருவருக்கு சுதந்திரமாக அமைகின்ற ஒரு விடயம் அதே அளவில் மற்றையவருக்கும் சுதந்திரமாக அமைதல் வேண்டும். ஆகவே, எந்தவொரு நபரையும் வேறு ஒருவரின் சொந்த மதத்திற்கு மாற்றுவதற்கான அடிப்படை உரிமை என்று எதுவும் இருக்க முடியாது.
உறுப்புரை 25(1) ஆனது, ஒவ்வொரு பிரஜைக்கும் மனசாட்சியினைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை வழங்குகிறது, ஆனால் அந்த மதத்தின் கொள்கைகளை பரப்பும் சாக்குப்போக்கில் மற்றொரு நபரை வேண்டுமென்றே ஒருவரின் மதத்திற்கு மாற்றுவது, அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட ‘மனசாட்சிக்கான சுதந்திரம்’ என்ற சாரத்தை மீறுகிறது.
எனவே, ஒருவர் வேறு எந்த மதத்தையும் ஏற்க விரும்பினால், அத்தகைய மதமாற்றத்திற்கான சரியான காரணங்களை முன்வைக்க வேண்டும் என்பதுடன் அது சுதந்திரமான விருப்பத்துடன் இருக்க வேண்டும்.