பொருத்தமானதல்ல
No. 43835/11
முழு முகத்தையும் மறைப்பதற்கானத் தடையை எதிர்த்து பிரான்ஸ் நாட்டு பிரஜை ஒருவர் பிரான்ஸுக்கு எதிராக மனு தாக்கல் செய்தார். இத்தடையானது 11 அக்டோபர் 2010 என திகதியிடப்பட்ட 2010-1192 ஆம் இலக்க சட்டத்தினால் ஏப்ரல் 11, 2011 அன்று பிரான்சில் நடைமுறைக்கு வந்தது என்பதுடன் இச்சட்டம் எந்தவொரு நபரும் பொது இடங்களில் தங்கள் முகத்தை மறைப்பதைத் தடை செய்கின்றது.
முகத்திரை அணிகின்ற பெண் என்ற ரீதியில் இத்தடையானது அவரது தனிப்பட்ட வாழ்வுக்கான உரிமை, மதச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் பாரபட்சப்படுத்தப்படாதிருப்பதற்கான உரிமை என்பனவற்றை மீறுவதாக உள்ளது என்று அவர் வாதிட்டார்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை, பாரபட்சம்
கோட்பாட்டுரீதியில் உறுப்புரை 9(2) இன் பரப்பிற்குள் உள்ளடக்கப்படக்கூடிய அரச தரப்பின் இரண்டு நெறிமுறையான நோக்கங்களை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது:
(i) பொது மக்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தல் (சட்டமூலத்துடனான விளக்கக்குறிப்பில் இவ் நோக்கம் குறித்து சுட்டிக் காட்டப்பட்டுள்ளது) மற்றும்
(ii) ஏனையவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தின் பாதுகாப்பு. இது, “சமூகத்தில் வாழ்வின் குறைந்தபட்ச தேவைகளுக்கு மரியாதை அளித்தல்” – அல்லது அனைவரும் “ஒன்றாக வாழ்வது” – போன்ற நோக்கங்களின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்டுள்ள ஒன்றாகும். சில சூழ்நிலைகளில் இவை ஏனையவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாத்தல் என்ற நெறிமுறையான நோக்கத்துடன் இணைக்கப்படலாம். “முகத்தை மறைக்கின்ற திரையினூடாக ஏனையோருக்கு எதிராக எழுப்பப்படுகின்ற தடையினை பிரதிவாதி உணர்கின்றார். கூடி வாழ்தலை எளிதாக்குகின்ற சமூகமயப்பட்ட இடமொன்றில் வாழ்வதற்கான ஏனையோரின் உரிமையினை இது மீறுகின்றது” என்று நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
(2) விதிக்கப்பட்ட தடையானது, “ஏனையவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாப்பதன்” ஒரு அங்கமாக உள்ள “ஒன்றாக வாழ்வதற்கான” நிபந்தனைகளைப் பாதுகாத்தல் என்ற இலக்கிற்கு விகிதசமனாக உள்ளது. ஆகவே, இத்தடை உடன்படிக்கையின் உறுப்புரைகள் 8 அல்லது 9 இனை மீறவில்லை என நீதிமன்றம் தீர்ப்பளித்தது.