SMC No.1 of 2014
பேஷாவரில் உள்ள தேவாலயமொன்றில் 2013.09.22 அன்று இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் மற்றும் கலாஷ் பழங்குடிகள் மற்றும் சித்ரால் இல் வசிக்கும் இஸ்லாமியர்களுக்கு இஸ்லாத்தின் வேறு ஒரு பிரிவிற்கு மாறுமாறும் இல்லையெனின் மரணத்தை சந்திக்க நேரிடுமென்றும் வழங்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பாக அவர்களால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல் – மனசாட்சி (அதாவது ஒருவரின் விருப்பப்படி ஒரு மதத்தை வைத்திருப்பது அல்லது ஏற்றுக்கொள்வது) பாரபட்சம்
(1)“பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மை மதங்களின் மதச் சுதந்திரத்தை ஆக்கிரமிக்கும் விதத்தில் மதச் சுதந்திரத்தினை உறுதிப்படுத்துகின்ற உறுப்புரை 20 பொருட்கோடல் செய்யப்படுமாயின் அது பொதுவான உள்ளுணர்விற்கு எதிரானது ஆகும்.”
(2)”பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் பல வழக்குகளில் சர்வதேச மனித உரிமைகள் தொடர்பான நியமங்களைக் கவனத்திலெடுத்துள்ளது. மனசாட்சியினைப் பின்பற்றுவதற்கான சுதந்திரத்தை மத சுதந்திரத்திலிருந்து பிரிக்க முடியாது என்பது இந்த ஏற்பாடுகளை வாசிப்பதன் மூலம் தெளிவாகிறது. மனசாட்சியினைப் பின்பற்றுவதற்கான சுதந்திரம் ஒரு தனிமனித உரிமை என்றாலும், மதத்திற்கான உரிமை என்பது தனிநபர் மற்றும் சமூகம் சார்ந்த அர்த்தங்களைக் கொண்டுள்ளது. அரசியலமைப்பின் 20 வது உறுப்புரையின் உப உறுப்புரை (a) மத சுதந்திரத்திற்கான உரிமையின் தனிப்பட்ட மற்றும் வகுப்புவாத தன்மையை அங்கீகரிக்கிறது, ஏனெனில் அது “ஒவ்வொரு பிரஜையும்” மற்றும் “ஒவ்வொரு மதப் பிரிவினரும்” மற்றும் அதன் “ஒவ்வொரு பிரிவினரும்” என குறிப்பிடுகின்றது. ஆகவே, இதன் ஒரு அம்சம் மற்றொன்றை நீக்க முடியாது.
மேலும், மத சுதந்திரத்தின் தனிப்பட்ட அம்சம் மதத்திற்கு உள்ளேயான மற்றும் மதங்களுக்கு இடையிலான மோதல்களுக்கு எதிராகவும் பிரயோகப்படும்.
(3)”உறுப்புரை 20 ஆனது, சமூகத்தின் உரிமைகள் மற்றும் தனிநபரின் உரிமைகள், அதாவது, அவரது சொந்த அல்லது பிற மத சமூகங்களைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான அவரின் மத உரிமைகளை உத்தரவாதப்படுத்துவதற்கு ஏற்றவகையில் பொருட்கோடல் செய்யப்பட வேண்டும் – சமூகத்தில் மத சகிப்புத்தன்மையை ஒழிப்பதே இறுதி இலக்கு.”
(4)தீர்ப்பின் பக்கங்கள் 30-31, பாகிஸ்தானில் உள்ள மத சிறுபான்மையினர் தொடர்பாக சம்பந்தப்படுகின்ற பாகிஸ்தான் நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களின் பட்டியலை வழங்குகிறது.