Home International Cases Yeo-Bu m Yoon and Myung-Jin Choi v. Republic of Korea

Court
மனித உரிமைகள் குழு (ICCPR)
Bench
Key words
ICCPR இன் உறுப்புரை 18
Cases referred to

குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்

  1. Muhonen v Finland (Case No. 89/1981)
  2. J.P. v. Canada, Communication (Case No. 446/1991
Counsel who appeared
Date of Decision
03/11/2006
Judgement by Name of Judge/s
பொருத்தமானதல்ல
Noteworthy information relating to the case

எந்த மீறலும் அங்கீகரிக்கப்படவில்லை.

Other information

பொருத்தமானதல்ல

Yeo-Bu m Yoon and Myung-Jin Choi v. Republic of Korea

CPR/C/88/D/1321-1322/2004

Facts of the case

இத் தொடர்பாடலை மேற்கொண்டவர்கள் தங்கள் மத நம்பிக்கைகள் மற்றும் மனசாட்சியின் காரணமாக இராணுவ சேவையில் இணைய மறுத்துவிட்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டு இராணுவ சேவை சட்டத்தின் உறுப்புரை 88 (பிரிவு 1) இன் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.

Findings related to FoRB

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- மனசாட்சி (அதாவது ஒருவரின் விருப்பப்படி ஒரு மதத்தை வைத்திருப்பது அல்லது ஏற்றுக்கொள்வது) பாரபட்சம்

Holding/Decision

(1) தனது மனசாட்சியின் அடிப்படையில் இராணுவ சேவைக்கு இணைய மறுக்கின்றமையானது உறுப்புரை 18 இன் 1.3 ஆம் பந்தியின் கீழ் பாதுகாக்கப்பட்டுள்ள மதத்தினை வெளிப்படுத்துகின்ற ஒரு வடிவமாகும் என்ற தனது முன்னைய சட்டவியல் தீர்ப்பினை குழு மீள நினைவுபடுத்திக்கொண்டது.  ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்தும் உரிமை என்பது சட்டத்தால் விதிக்கப்பட்ட அனைத்து கடமைகளையும் மறுக்கும் உரிமையைக் குறிக்கவில்லை என்றாலும், உண்மையான மத நம்பிக்கைக்கு எதிராகச் செயல்பட வேண்டிய கட்டாயத்திற்கு எதிராக, உறுப்புரை 18, பந்தி 3 க்கு இணங்க அது குறிப்பிட்ட பாதுகாப்பை வழங்குகிறது. பொதுக் கருத்துரை 224 இல் வெளிப்படுத்தப்பட்ட அதன் பொதுவான கருத்தையும் குழு நினைவுபடுத்துகிறது. ஒரு நபரை ஆபத்தான சக்தியைப் பயன்படுத்துதலானது குறித்த நபரின் மனசாட்சி அல்லது மத நம்பிக்கைகளின் தேவைகளுடன் தீவிரமாக முரண்படும்போது,  அவ்வாறு செய்வதற்கு அவரைக் கட்டாயப்படுத்துவதானது உறுப்புரை 18 இன் பரப்பிற்குள் வருகிறது என குழு கூறியது. தற்போதைய வழக்கில் முறைப்பாட்டாளர்கள் கட்டாய இராணுவ சேவையில் இணைய மறுக்கின்றமையானது  அவர்களின் மத நம்பிக்கைகளின் நேரடி வெளிப்பாடாகும் என்பதுடன் அதன் நேர்மைத்தன்மை மறுதலிக்கப்படவில்லை. முறைப்பாட்டாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள தண்டனையானது, மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்தும் அவர்களின் இயலுமையினை மட்டுப்படுத்துகிறது. அத்தகைய மட்டுப்பாடு உறுப்புரை 18 இன் பந்தி 3 இல் விவரிக்கப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட வரம்புகளால் நியாயப்படுத்தப்பட வேண்டும். அதாவது எந்தவொரு மட்டுப்பாடும் சட்டத்தால் பரிந்துரைக்கப்பட வேண்டும் மற்றும் பொது பாதுகாப்பு, ஒழுங்கு, சுகாதாரம் அல்லது அறநெறிகள் அல்லது பிறரின் அடிப்படை உரிமைகள் மற்றும் சுதந்திரங்களைப் பாதுகாக்க அவசியமாக இருக்க வேண்டும். இருப்பினும் அத்தகைய மட்டுப்பாடு பிரச்சினைக்குட்பட்டுள்ள உரிமையின் சாரத்தை பாதிக்கக் கூடாது.

2) அரச தரப்பின் சட்டங்களின் கீழ் மனசாட்சி அடிப்படையிலான ஆட்சேபனைகளின் நிமித்தம் இராணுவ சேவையினை எதிர்க்கின்றமையானது அங்கீகரிக்கப்படவில்லை என்பதனை குழு குறித்து கொண்டது. தமது தேசிய தற்காப்புத் திறன்களைப் பேணுவதற்கும், சமூக ஒற்றுமையைப் பேணுவதற்கும் பொதுப் பாதுகாப்பிற்காகவும் இந்த மட்டுப்பாடு அவசியம் என்று அரச தரப்பு வாதிட்டது. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தால் வகுக்கப்பட்ட மனசாட்சியின் அடிப்படையிலான ஆட்சேபனைகள் தொடர்பான தேசிய செயற்திட்டத்தினை அமுல்படுத்துவதற்கான அரச தரப்பின் நோக்கம் மற்றும் தேசிய பாதுகாப்பின் குறிப்பிட்ட பின்னணி பற்றிய அதன் வாதம் என்பனவற்றை குழு கவனத்தில் எடுத்தது. உடன்படிக்கைக்கான பல திறத்துவ நாடுகள் தாம் தக்க வைத்திருந்த கட்டாய இராணுவ சேவைக்கு மாற்றிடாக பல வழிகளை அறிமுகப்படுத்தியுள்ளதனை குழு குறித்து கொண்டது. அத்துடன், உறுப்புரை 18ன் கீழ் உள்ள உரிமைகளை முறைப்பாட்டாளர்களுக்கு  முழுமையாக வழங்குகின்ற பட்சத்தில் அதனால் ஏற்படக்கூடிய குறிப்பான பாதகங்கள் என்ன என்பதனை அரச தரப்பு சுட்டிக்காட்டத் தவறியுள்ளது.

3) எனவே தற்போதைய வழக்கில், குறித்த மட்டுப்பாடானது உடன்படிக்கையின் உறுப்புரை 18 இன் பந்தி 3 இல் பரப்பிற்குள் உள்ளடங்குகின்றது என்பதனை அரச தரப்பு நிரூபிக்கவில்லை என்று குழு கருதுகிறது.

 

(4) குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் விருப்ப பின்னேட்டின் உறுப்புரை 5 இன் 4 ஆம் பந்தியின் கீழ் செயல்படும் மனித உரிமைகள் குழுவானது, அதனால் கண்டறியப்பட்ட நிகழ்வுகளின் பிரகாரம்,  கொரியா குடியரசானது முறைப்பாட்டளார்களுக்கு உடன்படிக்கையின் உறுப்புரை 18 இன் பந்தி 1 இன்கீழ் காணப்படும் உரிமைகளை மீறியுள்ளது என்ற தீர்மானத்திற்கு வருகிறது. அத்துடன்,  உடன்படிக்கையின் உறுப்புரை 2 பந்தி 3 இன் படி, முறைப்பாட்டாளர்களுக்கு இழப்பீடு உட்பட பயனுள்ள தீர்வை வழங்குவதற்கு அரச தரப்பு கடமைப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் இதுபோன்ற உடன்படிக்கை மீறல்களைத் தவிர்க்கவும் அரச தரப்பு கடமைப்பட்டுள்ளது.