Home International Cases Zaheeruddin v. State

Court
பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம்
Bench
Key words
Cases referred to
Counsel who appeared
Date of Decision
03/07/1993
Judgement by Name of Judge/s
மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.
Noteworthy information relating to the case

பொருத்தமானதல்ல

Other information

Zaheeruddin v. State

Civil Appeal No.412 of 1992

Facts of the case

1984 ஆம் ஆண்டின் ஆணை XX ஆம் இலக்க கட்டளைச் சட்டம், காதியானி குழுவின் இஸ்லாமிய எதிர்ப்பு நடவடிக்கைகள், லாகூர் குழு மற்றும் 1984 ஆம் ஆண்டின் அஹ்மதிஸ் (தடை மற்றும் தண்டனை) கட்டளைச் சட்டம் என்பன பாகிஸ்தானிய அரசியலமைப்பை மீறுகிறதா என்பதே குறித்த பிரச்சினை ஆகும்.

 

பஜாரில் ‘கல்மா தையப்பா’ என்ற முத்திரைகளை மார்பில் அணிந்து கொண்டு சிலர் சுற்றித் திரிவதாகப் புகார் எழுந்தது. அவர்கள் குவாடியானியன்கள் (Quadiani) என்று தெரிந்தது. விசாரித்தபோது, அவர்களில் சிலர் தாங்கள் முஸ்லிம்கள் என்று கூறினர். “கல்மா தய்யப்பா” என்ற முத்திரையினை அணிந்திருந்த அவர்களின் இந்தச் செயலினால் அவர்கள் தங்களை முஸ்லீம் போல் காட்டிக் கொள்ள முனைந்தனர்.

Findings related to FoRB

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- மனசாட்சி (அதாவது ஒருவரின் விருப்பப்படி ஒரு மதத்தை வைத்திருப்பது அல்லது ஏற்றுக்கொள்வது) பாரபட்சம். மேன்முறையீடு தள்ளுபடி செய்யப்பட்டது.

Holding/Decision

1) அரசியலமைப்பின் 260(3)(b) ஆம் உறுப்புரையின் மூலம் அஹ்மதியர்கள் முஸ்லிம் அல்லாதவர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த உண்மையை பாகிஸ்தானின் ஃபெடரல் ஷரியா நீதிமன்றம், Mujibur Rehman vs. Federal Government of Pakistan மற்றும் (PLD 1985 FSC 8) ஆகிய வழக்குகளின் மூலம் உறுதிப்படுத்தியுள்ளது. இதற்கான காரணம் அஹ்மதியாக்கள் முஹம்மது நபியின் இறுதித் தன்மையை நம்பவில்லை (அவரில் அமைதி காண முடியுமென்பதை நம்பவில்லை). அவர்கள் புனித குர்ஆனின் தெளிவான மற்றும் பொதுவான வசனத்தை அதன் “தவீல்” (Taweel) மூலம் பொய்யாக்குகிறார்கள் மற்றும் இஸ்லாத்தில் நிழற்தன்மை, அவதாரம் மற்றும் இடமாற்றம் போன்ற மதத்தீவிர கருத்துக்களை உட்புகுத்துகின்றனர். எனவே, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தம்மை முஸ்லிம்களாகக் காட்டிக் கொள்வதிலிருந்தும் அல்லது முஸ்லிம்களின் சட்டப்பூர்வ உரிமைகளைக் கோருவதிலிருந்தும் தவிர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டனர்.

 

(2) “மேற்குறிப்பிட்ட நியாயாதிக்கத்தில் மேற்கண்ட கருத்துக்கள் அதிகளவில் நிலைத்திருக்கின்றமையானது, மதச் சுதந்திரமானது சட்டம் மற்றும் ஒழுங்கு அல்லது பொது அமைதி தலையிட அனுமதிக்கப்படாது என்பதைக் காட்டுகிறது. தனது சொந்த உரிமைகளை அனுபவிப்பதற்காக, பிறருடைய அடிப்படை உரிமைகளை மீறவோ அல்லது பறிக்கவோ அரசு யாரையும் அனுமதிக்காது. அத்துடன், யாரும் பிற மதத்தை அவமதிக்கவோ, சேதப்படுத்தவோ அல்லது கெடுக்கவோ அல்லது பிற மதங்களின் உணர்வுகளை தூண்டவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள், ஏனெனில், அவ்வாறு செய்கின்றமையானது சட்டம் மற்றும் ஒழுங்கில் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே, அமைதியும் ஒழுங்கும் சீர்குலைந்துவிடும் அல்லது மற்றவர்களின் மத உணர்வுகள்

புண்படுத்தப்படலாம் என்று நம்புவதற்கு எப்போதெல்லாம் அல்லது எங்கெல்லாம் காரணம் இருக்கிறதோ, அப்போதெல்லாம் அரசு சட்டம் மற்றும் ஒழுங்கினை உறுதிப்படுத்துவதற்கான குறைந்தபட்ச தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கலாம்.”

 

(3) “ஆங்கில ஆட்சியின் போது, அதன் துணைக் கண்டத்தில், முஸ்லிம் சமூகத்திற்கு மத்தியில் இந்த அஹ்மதியா சமூகம் பிறந்தமையினை, தமது சித்தாந்த அடையாளங்கள் மீதான தீவிரமான மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தாக்குதலொன்றாகவே முஸ்லிம்கள் நினைக்கிறார்கள். முஸ்லீம் சமூகத்தின் சமூக அரசியல் அமைப்பு அதன் மதத்தை அடிப்படையாகக் கொண்டிருப்பதால், அவர்களின் ஒருமைப்பாடு மற்றும் ஒற்றுமைக்கு இது நிரந்தர அச்சுறுத்தலென அவர்கள் கருதுகின்றனர். இந்தச் சூழ்நிலையில், மேற்கூறப்பட்ட விடயங்களை முஸ்லிம்கள் தங்களுடைய இஸ்லாமிய ஆளுமைகளுக்கு எதிராக வேண்டுமென்றே செய்யப்படுகின்ற செயலொன்றாக, தங்களுடைய முழு இஸ்லாமிய சமூகத்தின் கௌரவத்திற்குரிய அச்சுறுத்தலொன்றாக மற்றும் கடந்த காலங்களில் பல தடவைகள் இடம்பெற்றுள்ளதனைப் போன்று சட்டம் மற்றும் ஒழுங்கினை சீர்குலைக்கக்கூடிய காரணியொன்றாகப் பார்க்கின்றனர்.”

(4) “எனவே, அஹ்மதியர்கள் சட்டரீதியாகவும், அரசியலமைப்பு ரீதியாகவும், முஸ்லிம் அல்லாதவர்கள் என்பதுடன் அவர்கள் தங்கள் தெரிவின்படி, முஸ்லிம்களாக அன்றி சிறுபான்மையினராகவே உள்ளனர். இதன் விளைவாக, முஸ்லீம்களுக்குப் பிரத்தியேகமான ‘Shaaíre Islam’ போன்ற அடைமொழிகளைப் பயன்படுத்த அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை, மேலும் அவற்றைப் பயன்படுத்துவது சட்டத்தாலும் சரியான முறையில் மறுக்கப்பட்டுள்ளது. மேலே சொல்லப்பட்டுள்ளபடி, பாகிஸ்தான் அரசியலமைப்பு அஹ்மதியர்களை முஸ்லிமல்லாதவர்கள் என்று அறிவிக்கிறது. சந்தேகத்திற்கு இடமின்றி, அவர்கள் ஒரு சிறிய சிறுபான்மையினராக உள்ளனர், மேலும் அவர்களின் நம்பிக்கையின் காரணமாக, முஸ்லிம்களின் பிரதான அமைப்பால், மதவெறியர்களாகவும், முஸ்லிம் அல்லாதவர்களாகவும் கருதப்பட்டனர்.”