முகப்பு பக்கம் இலங்கை வழக்குகள் வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்படுவதைத் தடுக்கும் சட்டமூலம்

நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்
Bench
T.B. Weerasuriya J, N.E. Dissanayake J, Raja Fernando J,
Key words
உறுப்புரைகள் 9, 10, 14(1)(e), 12(1) மற்றும் 12(2) – அரசியலமைப்பு. உறுப்புரை 18(2) - ICCPR
Cases referred to

குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்

Kokkinakis v. Greece

Counsel who appeared
முடிவு திகதி
Judgement by Name of Judge/s
Noteworthy information relating to the case
Other information

வலுக்கட்டாயமாக மதம் மாற்றப்படுவதைத் தடுக்கும் சட்டமூலம்

SC Special Determination Nos. 2-22/2004

Facts of the case

ஜூலை 2004 இல், ‘கட்டாய மதமாற்றம் தடை’ என்ற தலைப்பில் ஒரு சட்டமூலம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. இது மோசடி, கவர்ச்சி அல்லது பலவந்தத்தின் விளைவாக நடைபெறும் மதமாற்றங்களைத் தடுக்க முயன்றது. இந்த சட்டமூலம் உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்டது.

சட்டப்பிரிவு 8 உடன் வாசிக்கப்பட்ட சட்டமூலத்தின்  சட்ட வாசகம் 2, அரசியலமைப்பின் 9, 10, 14(1)(e) மற்றும் 12(2) ஆகிய பிரிவுகளுக்கு முரணானது என்று வாதிடப்பட்டது. மேலும் 10வது உறுப்புரை முழுமையான உரிமை என்றும் வாதிடப்பட்டது.

Findings related to FoRB

Holding/Decision

10வது உறுப்புரை ஒருவரின் மதத்தை மாற்றுவதற்கான உரிமையை உள்ளடக்கியது, ஆனால் இந்த சட்டமூலம் மோசடி, பலாத்காரம் மற்றும் கவர்ச்சி மூலமான மதமாற்றங்களைத் தடுக்க மட்டுமே முயற்சித்தது.

 

  • கவர்ச்சியின் மூலமாக மத மாற்றுகின்ற குற்றத்தின் இன்றியமையாத மூலப்பொருள், ஒரு நபரை கவர்ந்திழுக்க அல்லது அவரை ஈர்க்கும் வகையில் கணக்கிடப்பட்ட சில நன்மைகளை வழங்குவதன் மூலம் அவரது தீர்மானத்தைப் பாதிக்கக்கூடிய ஒரு சலனத்தை அல்லது தூண்டுதலை ஏற்படுத்துவதாகும்.

 

  • பலாத்காரம் அல்லது வசீகரம் அல்லது மோசடியான வழிமுறைகள் மூலம் ஒரு நபரை ஒரு மதத்திலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றுவதைத் தடுப்பதே சட்டமூலத்தின் முதன்மையான நோக்கமாக இருப்பதால், சக்தி, மயக்கம் அல்லது மோசடி வழிமுறைகள் தொடர்பான சொற்களை இச்சட்டமூலத்தின் முதன்மை நோக்கத்திற்கிணங்க வரையறுப்பது விரும்பத்தக்கதாகும்.

 

சட்ட வாசகம் 8(a), (c) மற்றும் (d) இல் சில மாற்றங்களைச் செய்வதற்கு அமைய, சட்ட வாசகம் 8உடன் வாசிக்கப்பட்ட சட்ட வாசகம் 2 என்பன அரசியலமைப்பின் உறுப்புரைகள் 9, 10, 14(1)(e), 12(1) மற்றும் 12(2) என்பவற்றுடன் முரணாக இல்லை

 

மதமாற்றம் செய்பவர், வசதிகளை ஒழுங்கு செய்பவர் மற்றும் விழாவுக்கு சாட்சியாக இருப்பவர் மதமாற்றம் குறித்து பிரதேச செயலாளருக்கு அறிவிக்க வேண்டும் என்ற நிபந்தனையை உள்ளடக்கிய சட்ட வாசகம் 3, அரசியலமைப்பின் 10வது உறுப்புரைக்கு முரணானது.

வாசகம் 3 இன் அமுலாக்கத்துடன் தொடர்புறுகின்ற வாசகம் 4 ஆனது குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரயோகத்தன்மையினை மறுப்பதனால் அது உறுப்புரை 10 உடன் முரண்படுகின்றது.

 

நீதவான் நீதிமன்றத்தில் நடபடிமுறைகளைத் தொடங்குதல் தொடர்பான வாசகம் 5 மற்றும் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை உருவாக்கும் அமைச்சரின் அதிகாரம் தொடர்பான வாசகம் 6 என்பனவும் உறுப்புரை 10 உடன் முரண்படுகின்றது.

 

பரிந்துரைகள்:

  • பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையுடன் சட்டமூலம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுடன் மற்றும் ஒரு சர்வசனவாக்கெடுப்பில் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்
  • வாசகம் 3 மற்றும் 4(b) நீக்கப்படும்
  • சட்டமூலத்தின் சட்ட வாசகம் 4(a) ஐ திருத்தவும்
  • பலம், மோசடி மற்றும் கவர்ச்சி ஆகியவற்றின் வரையறையை திருத்தவும்

சட்டமூலத்தின் பிரிவு 8 (c) மற்றும் (d) ஐ திருத்தவும்