Sobhitha Rajakaruna J
கட்டளை எழுத்தாணை, தடையீட்டு எழுத்தாணை என்பன வழங்கப்பட்டன.
C.A/Writ/183/2019
இவ்விண்ணப்பமானது பராயமடையாத தனது மகளின் சார்பாக மனுதாரரினால் கட்டளை எழுத்தாணையொன்றினைக் கோரி பதிவு செய்யப்பட்டது. இவ் எழுத்தாணையானது தனது மகளை 2019 ஆம் ஆண்டிற்கான முதலாம் தரத்தில் தமிழ் மொழிமூலத்தில் கண்டி பெண்கள் உயர் பாடசாலையில் அனுமதிக்குமாறு கோருவதற்காக வேண்டப்பட்டது. அனுமதி நிராகரிப்பு கடிதத்தினை ரத்து செய்வதற்காகத் தடையீட்டு எழுத்தணை ஒன்றினையும் மனுதாரர் கோரியிருந்தார். மனுதாரர் தனது விண்ணப்பத்தினை “பாடசாலைக்கு அண்மையில் வசித்தல்” என்ற வகைப்பாட்டின் கீழும் “கிறிஸ்தவர்” என்ற வகைப்பாட்டின்கீழும் சமர்ப்பித்திருந்தார்.
33.8 புள்ளிகளை மட்டும் பெற்றுக் கொண்ட தனது மகளை, “பாடசாலைக்கு அண்மையில் வசித்தல்” என்ற வகைப்பாட்டின் கீழ் பெற்றுக் கொண்ட புள்ளிகளைப் பொருட்படுத்தாது, கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 24/2018 என்ற இலக்கத்தினைக் கொண்ட சுற்றுநிரூபத்தின் 4.2 ஆம் வாசகத்தின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள ‘கிறிஸ்தவம்’ தொடர்பான அறிவுறுத்தல்களுக்கு அமைய குறிப்பிட்ட பாடசாலையில் இணைத்துக் கொள்ள வேண்டுமென மனுதாரர் குற்றம் சாட்டினார். மேலும், கண்டி பெண்கள் உயர் பாடசாலையில் 2019 இற்கான முதலாம் தரத்திற்குரிய மாணவர்களுக்குரிய வெற்றிடங்களில் 13 வெற்றிடங்களே நிரப்பப்பட்டுள்ள நிலையில் 47 இடங்கள் இன்னமும் வெற்றிடங்களாகவே உள்ளன என்றும் மனுதாரர் கூறினார்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- மனசாட்சி (அதாவது, ஒருவரின் தெரிவின்படி மதமொன்றினைக் கொண்டிருத்தல் அல்லது ஏற்றுக் கொள்ளல்), பாரபட்சம்
பிரதிவாதிகள் தங்களுடைய பாடசாலையிலுள்ள மாணவர்களுக்கான வெற்றிடங்களை மதங்கள் மற்றும் வகைப்பாடுகளுக்கிடையே விகிதசமனான முறையில் பிரித்திருக்கவில்லை. கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட 24/2018 என்ற இலக்கத்தினைக் கொண்ட சுற்றுநிரூபத்தினைக் கவனத்திற் கொள்ளாது, வெறுமனே கண்டி பெண்கள் உயர் பாடசாலையானது கிறிஸ்தவ மெதடிஸ்ட் பிரிவினரைத் தவிர்ந்த ஏனைய கிறிஸ்தவ பிரிவினருக்கு அனுமதி வழங்காது என பிரதிவாதிகள் கூற முடியாது.