Elmore Perera for the Petitioner
Suren Gnanaraj SC for the Respondents
அடிப்படை உரிமைகள் விண்ணப்பம் அனுமதிக்கப்பட்டது.
SC/FR 353/2016
அறிமுகம்- மனுதாரர் (கிறிஸ்தவ பெப்டிஸ்ட்) தன்னுடைய மகனான A. B. Abishek Anuhas (கிறிஸ்தவ பெப்டிஸ்ட்) இற்கு முதலாம் ஆண்டிற்கானப் பாடசாலை அனுமதியினை மறுத்ததனூடாக கிங்ஸ்வூட் கல்லூரியின் அதிபர் இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 12(1) இல் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள சமத்துவத்திற்கான தனது அடிப்படை உரிமையினை மீறியுள்ளார் என நீதிமன்றத்தில் முறையிட்டார்.
விண்ணப்பம்- கிறிஸ்தவ மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்த ஒதுக்கீட்டின்கீழ் மனுதாரர் விண்ணப்பத்தினை சமர்ப்பித்திருந்தார்.
நேர்காணல்- மனுதாரரின் மகன் தெரிவு செய்யப்பட்டோரின் பட்டியலில் உள்ளடக்கப்படவில்லை- ஆனால் “காத்திருப்போரின் பட்டியலில்” 6 ஆம் இலக்கத்தில் காணப்பட்டார்.
மனுதாரரின் வாதம்- 1960 ஆம் ஆண்டின் 5 ஆம் இலக்க உதவியளிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் பயிற்சி பாடசாலைகள் (விசேட ஏற்பாடுகள்) சட்டத்தின் வாசகம் 3.2 மற்றும் 1961 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க, உதவியளிக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் பயிற்சி பாடசாலைகள் (நிரப்பு ஏற்பாடுகள்) (மத ஒதுக்கீடு) என்பனவற்றின்கீழ் தன்னுடைய மகனுக்கு அனுமதி கிடைக்க வேண்டும் என மனுதாரர் வாதிட்டார்.
பிரதிவாதியின் வாதம்- 1961 ஆம் ஆண்டில் கிங்ஸ்வூட் கல்லூரியில் கல்விகற்ற கிறிஸ்தவ மாணவர்களின் எண்ணிக்கையினைப் பார்ப்பதற்கான பதிவேடொன்று கிடைக்கக்கூடியதாக இல்லை என்றும், இக்காரணத்தினால் பாடசாலை அனுமதி சுற்றுநிரூபத்தின் வாசகம் 3.2 இனை அமுல்படுத்த முடியாதுள்ளது என்றும் பிரதிவாதி குறிப்பிட்டார்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- மனசாட்சி (அதாவது, ஒருவரின் தெரிவின்படி மதமொன்றினைக் கொண்டிருத்தல் அல்லது ஏற்றுக் கொள்ளல்), பாரபட்சம்
மத சேர்க்கை தொடர்பான புள்ளிவிபரங்கள் இன்மையானது நியாயப்படுத்தக்கூடிய பதிலொன்றாகாது. மனுதாரரின் விண்ணப்பத்தினைக் கையாள்கின்றபோது இந்நிலைப்பாட்டினைக் கருத்திற் கொள்வதற்கு பிரதிவாதி தவறியுள்ளார். வாசகம் 3.2 இனைக் கவனத்திலெடுக்கத் தவறியமையினூடாக கிங்ஸ்வூட் கல்லூரியின் அதிபர் எதேச்சதிகாரமாகவும் நியாயமற்றும் செயற்பட்டுள்ளார் என்பதுடன் அதனூடாக மனுதாரரின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளார்.
மனுதாரரின் மகனை கண்டியிலுள்ள கிங்ஸ்வூட் கல்லூரியில் முதலாம் தரத்திற்கு அனுமதிக்குமாறு அதிபருக்கு பணிக்கப்பட்டது.
செலவு தொடர்பாக எவ்விதக் கட்டளையும் வழங்கப்படவில்லை.