குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்
SC Determination 2 of 2001
பிரசன்னமாகிய சட்டத்தரணிகள்
Manohara de Silva, W.D. Weeraratne, Bandara Talgune
M.A. Sumanthiran, Viran Corea
P.A. Rathnayake DSG, Arjuna Obeysekara SC
S.C. Special Determination No. 2/2003
கூட்டிணைக்கப்பட வேண்டுமென குறிப்பிடப்படுகின்ற இவ் அமைப்பின் குறிக்கோளானது சுவிஷேஷக கூட்டங்கள், திருவிவிலியக் கற்கைகள் போன்ற மதரீதியிலான செயற்பாடுகளைத் தாண்டி இயேசு கிறிஸ்துவின் செய்திகள் மற்றும் போதனைகளை சமூக பொருளாதார பரிமாணங்களுடன் இணைத்து ஏனைய மதங்கள் மற்றும் நம்பிக்கைகளைச் சேர்ந்த மக்களையும் இணைப்பதாக அமைகின்றது. உறுப்புரை 14(1)(g) இன்கீழ் உத்தரவாதப் படுத்தப்பட்டுள்ள அடிப்படை உரிமையினைப் பிரயோகிக்கின்ற வகையில் மதம் அல்லது நம்பிக்கையொன்றினை வெளிப்படுத்துவதோடு மட்டுமல்லாமல், குறித்த அமைப்பானது மதத்தினைப் பரப்புகின்ற மற்றும் ஊக்குவிக்கின்ற பொருளாதார நடவடிக்கைகளிலும் அவர்கள் ஈடுபடுவதாக குறிப்பிட்டுள்ளனர். மேலும், குறிக்கோள்களின் பொருளாதார பரிமாணம் அமைப்பிற்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரத்தினால் மேலும் பலமாக்கப்படுமென்றும் அது கூட்டுத்தாபனத்தின் நிதி தகைமையினை மேம்படுத்தி தாங்கள் பரப்ப எண்ணுகின்ற மதத்திற்கு ஏனைய மதங்களைச் சேர்ந்தவர்களை மாற்றிக் கொள்வதற்கு வழிவகுக்கும் என்றும் மனுதாரர் வாதிட்டார்.
(1) “இலங்கை மக்களின் சமூக-பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் செயல்முறையானது, கூட்டிணைக்கப்படவுள்ள அமைப்பின் மதம் அல்லது நம்பிக்கையினைக் கொண்ட நபர்களுக்கு மட்டுப்படுத்தப்படாமையானது, சுதந்திரமான பயின்முறையில் உறுப்புரை 10 இல் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களின் சிந்தனை, மனசாட்சி மற்றும் மதத்திற்கான சுதந்திரத்தினை சுதந்திரமாகப் பிரயோகிப்பதில் முரண்பாட்டை ஏற்படுத்தும்.”
(2) “சமூகப் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்தும் செயல்பாட்டில் விளையும் கவர்ச்சியானது, பிரிவு 10ன் உத்தரவாதத்தின்படி ஒவ்வொரு நபரும் அவரவர் விருப்பத்தின் படி ஒரு மதத்தைக் கடைப்பிடிக்க உள்ள சுதந்திரத்தை சிதைக்கும்.”