Home Sri Lankan Cases Officer in Charge Viduthalaitheevu v. Pirathopar Premanathan and 5 others (of the first party) and Jathees Edmund Jenitas and 4 others (2nd party)

Court
மன்னார் நீதவான் நீதிமன்றம்
Bench
பொருத்தமானதல்ல
Key words
குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவு 81, அரசியலமைப்பின் உறுப்புரைகள் 14(1)(உ) மற்றும் 15(7)
Cases referred to

பொருத்தமானதல்ல

Counsel who appeared
Date of Decision
Judgement by Name of Judge/s
பொருத்தமானதல்ல
Noteworthy information relating to the case

திறத்தவர்கள் இணக்கத்திற்கு வந்தனர்

Other information

பொருத்தமானதல்ல

Officer in Charge Viduthalaitheevu v. Pirathopar Premanathan and 5 others (of the first party) and Jathees Edmund Jenitas and 4 others (2nd party)

AR/673/18 Mullativu MC

Facts of the case

இவ்வழக்கின் 2 ஆம் திறத்தவர் (றோமன் கத்தோலிக்கமல்லாத கிறிஸ்தவர்) போதகரின் வளாகத்தில் தற்காலிக தேவாலய அமைப்பு/  கூடாரமொன்றினை அமைத்தார். வழிபாட்டு நடவடிக்கைகளின் போது ஏற்படும் மோசமான காலநிலையினைக் கருத்திற்கொண்டு இது அமைக்கப்பட்டது. இது கத்தோலிக்க பாதிரியார்மார்களாலும் அப்பிரதேசவாசிகளாலும் (பெரும்பாலும் றோமன் கத்தோலிக்கர்கள்) எதிர்க்கப்பட்டது.

Findings related to FoRB

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை

Holding/Decision

இவ்வழக்கானது அமைதியினை குலைப்பதுடன் தொடர்புடைய வழக்கொன்றாக அன்றி தண்டனைச் சட்டக் கோவையின் 15 ஆம் அத்தியாயத்தின்கீழ் பதிவு செய்யப்பட வேண்டியதாகும் என்பதனை நீதிமன்றம் குறித்து கொண்டது. அத்துடன் அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)(உ) இற்கு அமைவாக தமது மதம் அல்லது நம்பிக்கையினை வெளிப்படுத்துவதற்கான உரிமை அனைவருக்கும் உண்டு எனவும் நீதிமன்றம் கூறியது. தற்காலிக கூடாரத்தினை அமைப்பதற்கான அனுமதியினை நீதிமன்றம் 2ஆம் திறத்தவருக்கு வழங்கியதுடன் ஏதேனும் நிரந்தரமான கட்டுமானத்தை மேற்கொள்வதாயின் பொருத்தமான முறையில் அனுமதி பெற வேண்டுமென்றும் கூறியது. உறுப்புரை 15(7) இன் கீழ் சொல்லப்பட்டுள்ள தேசிய பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கிற்கு பங்கம் விளைவிக்காது மற்றும் ஏனையோருக்கு இடையூறு விளைவிக்காது இரு திறத்தவர்களும் தமது உரிமைகளை அனுபவிக்க வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டது.