பொருத்தமானதல்ல
பொருத்தமானதல்ல
No.21528
குற்றவாளி சபையின் அனுமதியின்றி வழிபாட்டிடமொன்றை அமைத்தமையினூடாக பிரதேச சபை சட்டத்தின் பிரிவுகள் 47, 48, 49 மற்றும் 52 மற்றும் வீடு மற்றும் மேம்பாட்டு கட்டளைச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் குற்றவியல் குற்றமொன்றினை புரிந்துள்ளார்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை, பாரபட்சம்
இவ்வழக்கில் பிரதேச சபை சட்டத்தின் பிரிவுகள் 47, 48, 49 மற்றும் 52 மற்றும் வீடு மற்றும் மேம்பாட்டு கட்டளைச் சட்டத்தின் பிரிவுகள் 5 மற்றும் 6 என்பனவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட குற்றச்சாட்டுக்கள் ஒன்றிணைக்கப்படாது ஒரே குற்றப்பத்திரிகையின்கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவை வேறாக்கப்பட வேண்டும். நீதிமன்றமானது குற்றவியல் நடபடிமுறைக் கோவையின் பிரிவு 167(3) இன் கீழ் அத்தகைய குற்றச்சாட்டை மாற்றுவதற்கு அனுமதித்தது- நீதவான் நீதிமன்றமொன்றில் ஒரு குற்றச்சாட்டிற்கு பதிலாக மற்றொன்றைப் பதிலீடு செய்தல் என்பன இப்பிரிவின்கீழ் அத்தகைய குற்றச்சாட்டினை மாற்றுதலாகக் கருதப்படல் வேண்டும்