Facts of the case
            நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் பிரிவு 8J(1) இன் கீழ் மனுதாரர் வதிவிட வளாகங்களுக்கான அனுமதி பெற்ற கட்டிட வரைபடமொன்றினை வைத்திருந்தார். அப்பிரதேசவாசிகள் அவ்வளாகத்தில் இடம்பெறுகின்ற நடவடிக்கைகள் மற்றும் சடங்குகள் பொது மக்களுக்கு இடையூறு விளைவிப்பதாகக் கூறியதனைத் தொடர்ந்து அனுமதியளிக்கின்ற அதிகாரசபையினால் கட்டுமானம் இடைநிறுத்தப்பட்டது. மனுதாரர் கட்டிட வரைபடத்திற்கான அனுமதியினை இரத்து செய்கின்ற தீர்மானத்தினை ரத்து செய்யக்கோரி தடையீட்டு எழுத்தாணையொன்றினைக் கோரியுள்ளார்.
            Findings related to FoRB
            மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- மனசாட்சி (அதாவது, ஒருவரின் தெரிவின்படி மதமொன்றினைக் கொண்டிருத்தல் அல்லது ஏற்றுக் கொள்ளல்), பாரபட்சம்
            Holding/Decision
            
- நகர அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் பிரிவு 8J(1) இன் கீழ் அனுமதி வழங்கப்பட்ட பின்னர், வழங்கப்பட்ட அனுமதிக்கேற்ப கட்டிடத்தினைக் கட்ட வேண்டியது மனுதாரரின் கடமையாகும்.
 
- மனுதாரர்கள் கட்டிட அனுமதியின் ஏதேனும் நியதிகள் அல்லது நிபந்தனைகளை மீறியுள்ளனர் என பிரதிவாதிகள் முறைப்பாடு செய்யவில்லை.
 
- எழுந்த ஆட்சேபணையானது, உயர் சத்தத்தில் சங்கீத உபகரணங்களைப் பாவித்தல் மற்றும் மத நடவடிக்கைகளை உரத்து மேற்கொள்தலினால் அமைதி குலைக்கப்படுகின்றது மற்றும் ஒலி மாசடைவு ஏற்படுகின்றது என்பது தொடர்பானதாகும். இவ் ஆட்சேபனைகள் கட்டப்படவுள்ள கட்டிடம் தொடர்பானது அல்ல. மாறாக, ஏற்கனவே இருக்கின்ற கட்டிடமொன்றில் நடைபெறுகின்ற விவகாரங்கள் தொடர்பானது.
 
- உயர் சத்தத்தில் சங்கீத உபகரணங்களைப் பாவித்தல் மற்றும் மத நடவடிக்கைகளை உரத்து மேற்கொள்தலினால் அமைதி குலைக்கப்படுகின்றது மற்றும் ஒலி மாசடைவு ஏற்படுகின்றது போன்ற முறைப்பாடுகள் கட்டுவதற்கு அனுமதிக்கப்பட்ட கட்டிடம் தொடர்பானவை அல்ல- நடைபெறுகின்ற விவகாரங்களைக் கட்டுப்படுத்த வேண்டுமாயின் அதனால் பாதிக்கப்படும் இப்பிரதிவாதிகள் அல்லது வேறு நபர்கள் அச்சூழ்நிலையினைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சட்டத்தின்படி மேற்கொள்ள வேண்டும்.