பெருத்தமானதல்ல
உரிமை மீறல் அங்கீகரிக்கப்பட்டது. இந்து மதத்தைப் பின்பற்றும் மாணவர்களின் சுதந்திரம் முஸ்லிம் ஆசிரியர்கள் அபாயா அணிவதால் பாதிக்கப்படவில்லை என்று ஆணைக்குழு எடுத்துரைத்தது.
பொருத்தமானதல்ல
HRC/TCO/27/18
பள்ளியில் உதவி ஆசிரியர்களாகப் பணியாற்றிய முறைப்பாட்டாளர்கள் அபாயா அணிவதற்கு பள்ளி நிர்வாகக் குழுவால் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை, பாரபட்சம்
(1) உறுப்புரை 10 ஆல் பாதுகாக்கப்படும் உரிமையானது, ஒருவருக்கு விருப்பமான மதம் அல்லது நம்பிக்கையை மாற்றிக்கொள்ளவோ அல்லது பின்பற்றவோ காணப்படும் சுதந்திரம் தொடர்பாகக் காலப்பகுதியொன்றை நிர்ணயிக்கவில்லை. எனவே, முறைப்பாட்டாளர்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு சேலை அணிந்து பள்ளிக்குச் சென்றதனால் மட்டும் மத நம்பிக்கையை வெளிப்படுத்தும் ஒரு வடிவமாக அபாயா அணிவதற்கான அவர்களுடைய உரிமை மட்டுப்படுத்தப்பட முடியாது.
(2) அரச பாடத்திட்டமானது மதச்சார்பற்றது- அதாவது சமயப் பாடத்தைத் தவிர ஏனைய அனைத்து பாடங்களும் மதச் சார்பற்றவை. சமய பாடத்தினை ஒவ்வொரு மாணவரும் அவரவர் நம்பிக்கையின்படி பின்பற்றலாம். பிரதிவாதியாக உள்ள குறித்த பாடசாலை இந்து மரபுகள் மற்றும் கலாச்சாரத்தைப் பின்பற்றும் அதே வேளையில், ஆசிரியர்கள் அபாயா அணிந்து வருகின்றமையானது, இந்து மரபுகளைப் பின்பற்றுவதற்கான மாணவர்களின் உரிமை அல்லது திறனை எந்த வகையிலும் பாதிக்கவில்லை என்று ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.
(3) ‘…முறைப்பாட்டாளர்கள் தங்களது பாரம்பரிய உடையை அணிவதற்கான உரிமையை மறுப்பது மற்றும் அவர்களை தன்னிச்சையான முறையில் இடமாற்றம் செய்வது என்பன முறைப்பாட்டாளர்களின் மதத்தின் அடிப்படையில் செய்யப்பட்டடுள்ளன. எனவே, அரசியலமைப்பின் உறுப்புரை 12 (1) மற்றும் 12 (2) இல் கூறப்பட்டுள்ள முறைப்பாட்டாளர்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ளன.’
(4) சமூகத்தில் இன, மத சகிப்பின்மை மற்றும் வெறுப்புணர்வைத் தூண்டும் வகையில் பயன்படுத்தப்பட்ட இந்த விடயம் தொடர்பான உண்மைக்குப் புறம்பான தகவல்களைப் பகிரக்கூடிய வகையில் சமூக ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளதாக ஆணைக்குழு கண்டறிந்துள்ளது.
(5) உறுப்புரைகள் 10,12 (1) இன் கீழான முறைப்பாட்டாளர்களின் உரிமைகளை பிரதிவாதிகள் மீறியுள்ளமையை ஆணைக்குழு மேலும் கண்டறிந்தது.
முறைப்பாட்டாளர்கள் தங்களது விருப்பத்தின் பேரில் அபாயாவை அணிந்து தமது கடமைகளை நிர்ணயிக்கப்பட்ட பாடசாலைகளில் எவ்வித இடையூறும் இன்றி செய்யலாம் என்பதனை உறுதிப்படுத்துமாறு ஆணைக்குழு பிரதிவாதி பாடசாலையினைப் பணித்தது.