Facts of the case
நீதவான் நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட பிரச்சினைகள்- அப்பிரதேசவாசிகள் பிரதிவாதி-மனுதாரரின் இல்லத்தில் பாரிய எண்ணிக்கையிலான நபர்கள் வழிபாட்டு நடவடிக்கைகளுக்காக ஒன்று சேர்வதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்தனர். இவ் ஒன்றுகூடல்கள் அப்பிரதேசவாசிகளுக்கு இடையூறு மற்றும் தொந்தரவினை ஏற்படுத்துவதாக கூறப்பட்டது. இவ்விடயம் நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளப்பட்டபோது, பிரதிவாதியின் செயற்பாடுகளைத் தற்காலிகமாக இடைநிறுத்துமாறான நிபந்தனையுடன் நீதவான் இடைக்கால கட்டளையொன்றினை வழங்கினார்.
மேல் நீதிமன்றத்தின் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட பிரச்சினைகள்- பிரதிவாதி-மனுதாரர் வழிபாட்டிற்காக ஒன்று கூடுதலை இடைநிறுத்தி வழங்கப்பட்ட இடைக்கால ஆணையினை மீளாய்வு செய்வதற்கான விண்ணப்பமொன்றினைப் பதிவு செய்தார்.
Findings related to FoRB
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை
Holding/Decision
- அடிப்படை உரிமைகளைத் துய்ப்பதற்கான பிரதிவாதி-மனுதாரரின் உரிமையானது ஏனையோருக்கு தொந்தரவு/இடையூறு ஏற்படுத்தப்படும் வகையில் பிரயோகிக்கப்பட முடியாது. (වගඋත්තරකාර පෙත්සම්කරු විසින් ඔහුගේ මූලික අයිතිවාසිකම් ක්රියාත්මක කල හැක්කේ එකී අයිතිවාසිකම ක්රියාත්මක කිරීම හේතුවෙන් අනෙක් පුද්ගලයින්ට කරදර හිරිහැරයක් නොවන ආකාරයටය.)
- நீதவானால் வழங்கப்பட்ட இடைக்கால ஆணையின் குறிக்கோளானது பிரதிவாதி-மனுதாரரின் மத சுதந்திரத்தினைத் தடை செய்வது அல்ல- மாறாக குறித்த வழக்கு விளக்கத்திற்கு வரும்வரையில் நெருக்கடி சூழலொன்று ஏற்படுவதனைத் தவிர்ப்பதற்கே வழங்கப்பட்டது.
- ஏதேனும் திறத்தவர்கள் தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டு விட்டதாகக் கோருவார்களாயின், அது தொடர்பாக மேற்கொள்ளக்கூடிய மிகச்சிறந்த நடவடிக்கை நீதவான் நீதிமன்றம் முன்னிலையில் உள்ள விடயத்தை துரிதப்படுத்தி இறுதிக் கட்டளையினைப் பெற்றுக் கொள்வதாகும்.
- பிரச்சினைக்குட்பட்டுள்ள இவ் ஆதனம் தனிப்பட்ட இல்லமென்றும் பொது இடமொன்றல்ல என்றும் பிரதிவாதி-மனுதாரர் குறிப்பிட்டிருந்தார். இவ்விடயமும் விசாரணையின்போது நீதவான் நீதிமன்றத்தினால் கருத்திற் கொள்ளப்பட வேண்டுமென மேல் நீதிமன்றம் குறித்து கொண்டது.