Facts of the case
அரசு புகையிரதத் துறை ஊழியரான மனுதாரர், தனது ஆட்சேபனை இல்லாத பட்சத்தில் தேசிய பாதுகாப்பு நிதியத்திற்கு தன்னிடம் இருந்து பங்களிப்பு தொகையை ஒதுக்கிக் கொள்ள அதிகாரம் அளிக்கும் சுற்றறிக்கை (1) அவரது அடிப்படை உரிமையான சிந்தனை, மற்றும் மனசாட்சி என்பனவற்றுக்கான சுதந்திரம் மற்றும் மதத்தினை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் (அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 10, 14(1) (e)) என்பனவற்றை மீறுவதாகக் குறிப்பிட்டார். ஏனெனில் அப்பணம் ஆயுதங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவதற்கு பயன்படுத்தப்படும். அவை மனித அழிவிற்கும் வன்முறைக்கும் காரணமாக அமையும். இவை அவர் பின்பற்றுகின்ற பௌத்தத் தர்மத்திற்கு எதிரானவை ஆகும். ஆனால், ஆட்சேபணையினை வெளிப்படையாகக் கூற வேண்டும் என குறிப்பிடுவதனூடாக தனது அபிப்பிராயங்களைப் பகிரங்கமாகக் கூறுவதற்கு அவர் கட்டாயப்படுத்தப் படுகின்றார் என்பதுடன் இது அவர் தொந்தரவிற்கு உள்ளாவதற்கு வழிவகுக்கலாம் (2) சமத்துவத்திற்கான அவரது உரிமையினை மீறுகின்றது (அரசியலமைப்பு சட்டத்தின் உறுப்புரை 12(1)- ஏனெனில், உதாரணமாக, இப்பாதுகாப்பு நிதிக்கு பங்களிப்பு வழங்குமாறு சுகாதாரத் திணைக்கள உத்தியோகத்தர்களிடம் கோரப்படவில்லை. மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்திற்கான மீறல் – மனசாட்சி (அதாவது ஒருவரின் விருப்பப்படி ஒரு மதத்தை வைத்திருப்பது அல்லது ஏற்றுக்கொள்வது) பாரபட்சம்
Findings related to FoRB
Holding/Decision
- சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரத்தின் அடிப்படை உரிமையானது நமது அரசியலமைப்பின் மூலம் முழுமையான விதிமுறைகளில் வழங்கப்பட்டுள்ளது, மேலும் அது அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தபோது நடைமுறையில் இருந்த எழுதப்பட்ட அல்லது எழுதப்படாத எந்தவொரு சட்டத்திற்காக மட்டுமே சமரசம் செய்து கொள்ளப்படலாம். அதுவும் அவைகளுக்கிடையில் உள்ள முரண்பாடுகளின் அளவிற்கு மட்டுமே.
- மதத்தில் வேரூன்றிய நம்பிக்கைகள் பாதுகாக்கப்படுகின்றன. ஒரு மத நம்பிக்கை பாதுகாக்கப்படுவதற்கு அது தர்க்கரீதியானதாகவோ, ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவோ, நிலையானதாகவோ அல்லது புரிந்துகொள்ளக் கூடியதாகவோ இருக்க வேண்டியதில்லை. கோரிக்கை வினோதமானதாக மற்றும் மதச்சார்பற்ற உந்துதலுக்காக செய்யப்படுகின்றது என்பது தெளிவாக தெரியாதவிடத்து, பாதுகாப்பைக் கோரும் நபர் தனது குறிப்பிட்ட நம்பிக்கையின் கட்டளைகளை சரியாக உணர்ந்திருக்கிறாரா என்பதை விசாரிப்பது நீதித்துறை செயற்பாட்டு பரப்பு மற்றும் நீதித்துறை தகுதிக்கு உட்பட்டது அல்ல. நீதிமன்றங்கள் வேத விளக்கத்தின் நடுவர்கள் அல்ல, மத நம்பிக்கைகளைப் பகுப்பாய்வு செய்யக் கூடாது.
- அதன் முகத்தோற்றளவில் நடுநிலையான ஒரு ஒழுங்குமுறை, ஓர் உரிமையின் முழுமையான மற்றும் சுதந்திரமான நடைமுறையை தேவையற்ற முறையில் தடை செய்யின், அது அரசியலமைப்புத் தேவைப்பாட்டினை மீறுவதாக அமையும்.
- விலக்குக்கு வெளிப்படையாக ஆட்சேபனை தெரிவிக்க வேண்டிய அவசியம், மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளபடி, மனுதாரரின் மத சுதந்திரத்தினை மீறுவதாகவும் இல்லை. ஏனெனில் விலக்குக்கு ஆட்சேபனை செய்பவர்களுக்கு தண்டனைத் தடைகள் அல்லது குறைபாடுகள் எதுவும் விதிக்கப்படவில்லை மற்றும் மனுதாரரினதும் அவரது மதத்தினதும் முழுமையான மற்றும் சுதந்திரமான நடைமுறையில் எந்த விதத்திலும் குறுக்கீடு செய்யவில்லை.
- தேசிய பாதுகாப்பு நிதிக்கு பங்களிப்புச் செய்ய சுகாதாரத் துறை ஊழியர்களுக்கு அழைப்பு விடுக்கப்படாததால் சமத்துவத்திற்கான உரிமை மீறப்பட்டுள்ளதா என்பதைத் தீர்மானிக்க நீதிமன்றத்தின் முன் உள்ள தரவுகள் போதுமானதாக இல்லை.