பொருத்தமானதல்ல
உரிமை மீறல் அங்கீகரிக்கப்பட்டது.
HRCSL/199.16/L6
முறைப்பாட்டாளரின் கணவர் இந்து என்பதால், முறைப்பாட்டாளரின் மகன் இந்து ஆவார்- அவர் பௌத்தர் அல்ல என்று கருதி, மலியதேவ கல்லூரி தனது மகனுக்கு பள்ளியின் தரம் 1-க்கு அனுமதி மறுத்ததால், சமத்துவத்திற்கான தனது அடிப்படை உரிமை மீறப்பட்டதாக முறைப்பாட்டாளர் குற்றம் சாட்டினார்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்திற்கான மீறல்- மனசாட்சி (அதாவது ஒருவரின் விருப்பப்படி ஒரு மதத்தை வைத்திருப்பது அல்லது ஏற்றுக்கொள்வது) பாரபட்சம்
முறைப்பாட்டாளரின் மகன் பௌத்த மதத்தைச் சார்ந்தவராகப் பிறந்து வளர்ந்தார், மேலும் மேற்கூறிய ஆவணங்கள் வழங்கப்பட்ட போதிலும், நேர்காணலின்போது பிரதிவாதி முன்வைக்கப்பட்ட ஆதாரத்தை நிராகரித்து அனுமதியினை மறுத்தார்.
பெற்றோர்கள் வெவ்வேறு மதங்களைச் சார்ந்தவர்களாக இருக்கும்போது, அவர்கள் தந்தையின் மதத்தினைப் பிள்ளையின் மதமாகக் கருதுகிறார்கள் (இந்நிலையில் தந்தை இந்து மற்றும் தாய் பௌத்தர்) என்ற அடிப்படையில் மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி எடுத்த முடிவு 10 மற்றும் 12 (1) ஆகிய உறுப்புரைகளின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமைகளை மீறுவதாகும்.