பொருத்தமானதல்ல
பொருத்தமானதல்ல
பொருத்தமானதல்ல
HCJ/Writ/2113/17
மனுதாரர் கட்டளை எழுத்தாணை மனுவொன்றினூடாக வட மாகாணத்திலுள்ள மிருசுவில் பகுதியில் “இயேசு கிறிஸ்துவின் அக்கினி தேவாலயத்தினைக்’ கட்டுவதற்கான அனுமதியினைக் கோரினார். அத்துடன் மனுதாரர் பிரதிவாதியுடன் தொடர்புடைய தீர்மானத்தினை ரத்து செய்வதற்காக தடையீட்டு எழுத்தாணையொன்றினையும் கோரினார்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை, பாரபட்சம்
மனுதாரரின் கோரிக்கையினை ஏற்றுக் கொள்கின்றபோது எதிர்மறையான பின்விளைவுகள் தோன்றும் என்பதுடன் மனுவில் குறைபாடுகள் உள்ளன மற்றும் சட்டத் தேவைப்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டிருக்கவில்லை என கூறி நீதிமன்றம் மனவினைத் தள்ளுபடி செய்தது. பிரதிவாதிக்கு 21,000 செலுத்த வேண்டுமென நீதிமன்றம் மனுதாரருக்கு கட்டளையிட்டது.