முகப்பு பக்கம் சர்வதேச வழக்குகள் Evangelical Fellowship of India & Act Now for Harmony and Democracy v. State of Himachal Pradesh

நீதிமன்றம்
இந்திய மேல் நீதிமன்றம்
Bench
Deepak Gupta, J. Rajiv Sharma, J.
Key words
ஹிமாச்சல பிரதேச மத சுதந்திர சட்டம், 2006, இந்திய அரசியலமைப்பின் 14, 19 (1), 21 மற்றும் 25 ஆம் உறுப்புரைகள்
Cases referred to

குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்

  1. Stainislaus v. State of Madhya Pradesh and others, AIR 1977 Supreme Court 908
  2. Satya Ranjan Majhi and another v. State of Orissa and others, (2003) 7 Supreme Court Cases 439
  3. Ramjilal Modi v. State of U. P., (1957) SCR 860
  4. Arun Ghosh v. State of West Bengal, AIR 1970 SC 1228

 

பிரசன்னமாகிய சட்டத்தரணிகள்

For the petitioners: Mr. Sudhir Nandarajog, Senior Advocate, with M/s   R.R.   David, P.K.   Singh, Aman   Sood,

Tehmina Arora, Loreign Ovung, Febin Mathew

Varghese and Dhiraj Philip, Advocates.

 

For the respondents: Mr.   R.K.   Bawa, Advocate   General,   with   Mr. Vivek   Singh   Thakur,   Additional   Advocate

General, for the respondent.

Counsel who appeared
முடிவு திகதி
20/08/2012
Judgement by Name of Judge/s
Deepak Gupta, J.
Noteworthy information relating to the case

மேன்முறையீடு பகுதியளவில் அனுமதிக்கப்படுகிறது.

Other information

Evangelical Fellowship of India & Act Now for Harmony and Democracy v. State of Himachal Pradesh

438 of 2011-A / 4716 of 2011 -E

Facts of the case

2006 ஆம் ஆண்டின் இமாச்சல பிரதேச மத சுதந்திரச் சட்டத்தின் அரசியலமைப்புத் தன்மை சவாலுக்குட்படுத்தப்பட்டது. இந்தச் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மதச் சுதந்திர விதிகள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தினால் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அப்பாற்பட்டன என்றும் அவை இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14, 19 (1), 21 மற்றும் 25 ஆகிய உறுப்புரைகளை மீறுவதாகவும் கூறப்பட்டது.

Findings related to FoRB

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- மனசாட்சி (அதாவது ஒருவரின் விருப்பப்படி ஒரு மதத்தை வைத்திருப்பது அல்லது ஏற்றுக்கொள்வது). மத மட்டுப்பாடு தொடர்பான இவ்வழக்கில், இந்தியாவில் வாழும் அனைத்து நபர்களும் சமத்துவத்திற்கான அரசியலமைப்புச் சட்டப் பாதுகாப்பிற்கு உரிமையுள்ளவர்கள் என்றும், அதை மறுக்க முடியாது என்றும் நீதிமன்றம்  கண்டறிந்தது.

Holding/Decision

(1) ‘… நாங்கள் மனுக்களை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு அனுமதிக்கிறோம் மற்றும் இமாச்சல பிரதேச மத சுதந்திரச் சட்டம், 2006 இன் பிரிவு 4 மற்றும் இமாச்சலப் பிரதேச மத சுதந்திர விதிகள், 2007 இன் விதி 3 ஆகியவை அரசியலமைப்பு உறுப்புரை 14 ஐ மீறுவதாகவும் இந்திய அரசியலமைப்பின் அதிகாரத்தினை மீறுவதாகவும் அமைந்துள்ள காரணத்தினால் அவற்றை ரத்து செய்கின்றோம். விதி 5 ஆனது அது எந்தளவிற்கு பிரிவு 4 உடன் தொடர்புடைய செயற்பாடுகளுடன் தொடர்புற்றிருக்கிறதோ அந்த அளவிற்கு மட்டும் வெறிதாகும். இருப்பினும், சட்டத்தின் ஏனைய அனைத்து ஏற்பாடுகளும் விதிகளும் சட்டப்பூர்வமாகவும் செல்லுபடியாகவும் இருக்கும். இரண்டு மனுக்களும் மேற்கூறியவற்றிற்கு இணங்க நீக்கப்படுகின்றன.

 

(2) ‘… மதம் மாற்றப்படுபவரைப் பொறுத்தவரையில், இமாச்சலப் பிரதேச  சட்டமானது, மத்தியப் பிரதேசம் அல்லது ஒரிசா சட்டங்களை விட அதிக அளவிற்கு சென்றிருப்பதைக் காண்கிறோம். இந்தியாவில் வாழும் எவருக்கும் சட்டத்தின் கீழான சமத்துவத்தினை அல்லது இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியில் உள்ள நன்மைகளை மறுக்க கூடாது என்பதையும், இந்திய அரசியலமைப்பின் மூன்றாம் பகுதியின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட சுதந்திரங்களுக்கு ஒவ்வொரு நபரும் உரிமையுள்ளவர் என்பதையும் நமது அரசியலமைப்பு உறுதிப்படுத்துகிறது என்பதை நாங்கள் முன்பே விவாதித்தோம்.’’