1.Warsame v. Canada No.1959/2010
4. P.K. v. Canada No. 1234/2003
பொருத்தமானதல்ல
பொருத்தமானதல்ல
2288/2013
முறைப்பாட்டாளர் அவர் சார்பாகவும் பராயமடையாத அவரது பிள்ளையின் சார்பாகவும் தொடர்பாடலைச் சமர்ப்பிக்கிறார். நைஜீரியாவிற்கு நாடு கடத்தப்பட்டால், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் 6 மற்றும் 7 வது உறுப்புரைகளின் கீழ் தனது உரிமைகளை அரச தரப்பு மீறும் என்றும் அவர் கூறுகிறார். உடன்படிக்கையின் உறுப்புரைகள் 3, 6, 7, 13 மற்றும் 14 ஆகியவற்றுடன் சேர்த்து வாசிக்கின்றபோது 2, 18, 26, மற்றும் 27 ஆகிய உறுப்புரைகளின் கீழான தனது உரிமைகள் அரச தரப்பால் மீறப்படும் என்றும் அவர் கூறுகிறார்.
முறைப்பாட்டாளர் நைஜீரியாவிலிருந்து டென்மார்க்கிற்கு குடியுரிமைக்கான அனுமதியுடன் பி.பி. அவர்களது உதவியுடன் இடம் பெயர்ந்ததாகவும், பின்னர் அவர் குறித்த பி.பி என்பவரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, குடியுரிமை அனுமதி பெறுவதற்காக வாங்கிய கடனை செலுத்துவதற்காக பாலியல் தொழிலாளியாக வேலை செய்யும்படி கட்டாயப்படுத்தப்பட்டுள்ளார். எவ்வாறாயினும், குடியுரிமை அனுமதிக்கான முறையான ஆவணங்கள் அவரிடம் இல்லை என்றும், அதனால் அவர் மனித கடத்தலுக்கு உட்பட்டுள்ளதாகவும் பின்னர் தெரியவந்தது. அதன்பிறகு, அவர் தஞ்சம் கோரி மனு தாக்கல் செய்தார். அவர் வசிக்கும் இடம் தெரியாததால் இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
உடன்படிக்கையின் உறுப்புரை 2(3) (a) இன் பிரகாரம், அரச தரப்பானது இத்தொடர்பாடலைச் செய்த முறைப்பாட்டாளரான Osayi Omo-Amenaghawon க்கு வினைத்திறனான நிவாரணங்களை வழங்க வேண்டிய கடப்பாட்டினைக் கொண்டுள்ளது. அவர் நைஜீரியாவிற்கு சென்றால் உடன்படிக்கையின் உறுப்புரைகள் 6 மற்றும் 7 இல் குறிப்பிடப்பட்டுள்ள உரிமைகளை இழக்க நேரிடுமென்ற அவரது கோரிக்கை உள்ளடங்கலாக, உடன்படிக்கையின்கீழான அரச தரப்பின் கடப்பாடுகள் மற்றும் குழுவினால் தற்போது தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள் அனைத்தையும் கருத்திலெடுத்து அந்நிவாரணத்தை வழங்க வேண்டுமென குழு தெரிவித்தது.
முறைப்பாட்டாளரின் புகலிடக் கோரிக்கை மறுபரிசீலனை செய்யப்படுகின்ற அதேவேளை, அவரையும் அரவது பராயமடையாத பிள்ளையினையும் நைஜீரியாவுக்கு வெளியேற்றுவதைத் தவிர்க்குமாறு அரச தரப்பு கேட்டுக் கொள்ளப்படுகிறது. தனது சட்ட அமுலாக்க அதிகாரிகளுடன் இணைந்து, அரச தரப்பானது, மனித கடத்தலுக்கு ஆளாகியுள்ளவர்களிடமிருந்து வருகின்ற புகலிடக் கோரிக்கைகளுக்கு விசேட கரிசனம் வழங்காதிருக்கின்ற தமது கொள்கையினை மீளாய்வு செய்தல் வேண்டும்.