குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்
6. R (Williamson) v. Secretary of State for Education and Employment [2005] UKHL 15
பிரசன்னமாகிய சட்டத்தரணிகள்
For appellants Richard McManus QC, Simon Birks, Jonathan Auburn
For respondents Cherie Booth QC, Carolyn Hamilton, Eleni Mitrophanous
பொருத்தமானதல்ல
பொருத்தமானதல்ல
UKHL 15 (2006)
சர்ச்சைக்குரிய பிரச்சினை என்னவென்றால், சீருடை தொடர்பான விதியினை மீண்டும் மீண்டும் மீறுவதால் குறித்த பிரதிவாதி (முஸ்லிம்) பள்ளியில் இருந்து விலக்கப்பட்டமையானது உடன்படிக்கையின் உறுப்புரை 9 இன் கீழான மதம் மற்றும் நம்பிக்கைகளை வெளிப்படுத்தும் உரிமையினை நியாயமற்ற முறையில் மட்டுப்படுத்தியுள்ளது என்பதாகும்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை
மேன்முறையீடு அனுமதிக்கப்படுகிறது.
(1) ஒரு நபருக்கு தன்னுடைய மத நடைமுறைகளைத் தடையற்று பின்பற்றுவதற்கான தெரிவு இருக்கின்றபோது, அத்தகைய தடைகள் காணப்படக்கூடிய தொழில் நிறுவனங்கள் அல்லது கல்வி நிறுவனங்களைத் தானாகவே விருப்பத்துடன் தெரிவு செய்துவிட்டு, குறித்த அத்தடையினை தமது மதம் அல்லது நம்பிக்கையினை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்திற்குரிய தலையீடாக சுட்டிக்காட்டுதலை ஏற்றுக்கொள்வதற்கு Strasbourg நிறுவனங்கள் தயாராக இல்லை. X v. Denmark (1976) 5 DR 157 என்ற வழக்கிலே குறித்த மதகுரு அத்தொழிலை ஏற்றுக் கொண்டதனூடாக அத்தேவாலயத்தின் ஒழுங்குமுறையினை ஏற்றுக் கொண்டுள்ளார் என்றும் அத்தேவாலயத்தினை விட்டுச் செல்வதற்கான அவரது உரிமையினூடாக அவருடைய மதச் சுதந்திரம் உத்தரவாதப்படுத்தப்படுகின்றது என்றும் தீர்க்கப்பட்டது. ஆகவே, உறுப்புரை 9 இன்கீழான அவரது வேண்டுகோள் ஏற்கப்படவில்லை. Karaduman v. Turkey (1993) 74 DR 93 உறுதியான வழக்கொன்றாகும். இவ்வழக்கிலே குறித்த விண்ணப்பதாரி தலைமறைப்பின்றி எடுக்கப்பட்ட புகைப்படம் ஒன்றினை தனது பல்கலைக்கழகத்திற்கு வழங்க மறுத்தமையினால் அவரது பட்டப்படிப்பு சான்றிதழ் வழங்கப்படவில்லை. அச்சான்றிதழை வழங்குவதற்கான ஒரு தேவைப்பாடாக தலைமறைப்பின்றி எடுக்கப்பட்ட புகைப்படம் வழங்கப்பட வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகத்தால் குறிப்பிடப்பட்டிருந்தது. தலைமறைப்பின்றி புகைப்படம் எடுத்தலானது தனது மத நம்பிக்கைகளுக்கு புறம்பானதென விண்ணப்பதாரி அதனை மறுத்திருந்தார். எவ்வாறெனினும், இவ்வழக்கில் உறுப்புரை 9 இன் கீழான ஒரு மீறல் இல்லை என ஆணைக்குழு கண்டறிந்தது. இதற்கான காரணம் யாதெனில், குறித்த உயர் கல்வி நிறுவனத்தினைத் தாமாக தேர்ந்தெடுத்ததன் வாயிலாக விண்ணப்பதாரி அதன் விதிகளுக்கு உட்படுவதற்கு இசைந்துள்ளார் என்பதாகும். அத்துடன், வேறுபட்ட நம்பிக்கைகளைச் சேர்ந்த மாணவர்களின் சக வாழ்வினை உறுதிப்படுத்துவதற்காக உயர்கல்வி நிறுவகம் மாணவர்களின் மதத்தினை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தில் இத்தகைய மட்டுப்பாடுகளை விதிக்க முடியும். Konttinen v. Finland (1996) 87-A DR 68 என்ற வழக்கிலே, 75 வது பக்கத்தில் 1ஆம் பந்தியில் ஆணைக்குழுவானது, “அவர் தன்னுடைய மத கருத்துக்களை மாற்றிக் கொள்ள வேண்டும் என கட்டாயப்படுத்ததப்படவில்லை அல்லது மதம் அல்லது நம்பிக்கையினை வெளிப்படுத்துவதற்கான அவரது சுதந்திரத்திற்கு தடை விதிக்கப்படவில்லை. அவருடை பணி மணித்தியாலங்கள் அவருடைய மத நம்பிக்கைகளுடன் முரண்படுகின்றதென கண்டறியின் அவர் தனது பதவியினைத் துறக்கின்ற சுதந்திரம் அவருக்கு உண்டு” என கூறியது. Stedman v. United Kingdom (1997) 23 EHRR CD 168 என்ற வழக்கிலே, உறுப்புரை 9 இன்கீழ் செய்யப்பட்டுள்ள விண்ணப்பதாரரின் கோரிக்கையினை ஏற்க முடியாது. ஏனெனில், அவர் ஞாயிற்றுக் கிழமைகளில் வேலை செய்வதற்கு பதிலாக தன்னுடைய வேலையை இராஜினாமா செய்ய முடியுமென கூறப்பட்டது. Copsey v. WWB Devon Clays Ltd 2005 EWCA Civ 932, [2005] என்ற வழக்கிலே, 28-29 ஆம் பந்திகளிலே, குறிப்பிட்ட விண்ணப்பதாரர் இராணுவ சேவையில் இணைய உடன்பட்டதனூடாக அச்சேவையின் ஒழுங்குவிதிகளுக்கு இணங்குவதற்கும் உடன்பட்டுள்ளார். இராணுவ சேவையின் தன்மை காரணமாக அது சில உரிமைகள் மற்றும் சுதந்திரங்களின் மீது மட்டுப்பாடுகளை விதிக்கலாம் மற்றும் குறிப்பிட்ட நபர் முஸ்லிம்களின் சாதாரண கடப்பாடுகளைச் செய்யக்
கூடியதாக உள்ளது என கூறி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. Jewish Liturgical Association Cha’are Shalom Ve Tsedek v France (2000) 9 BHRC 27 என்ற வழக்கிலே, 81 ஆம் பந்தியில், பிரான்ஸில் இடம்பெறுகின்ற சம்பிரதாயபூர்வமாக கால்நடைகளைக் கொல்வதற்கான ஒழுங்குவிதி தங்களுடைய மத நியமங்களுடன் இணங்கவில்லை என கூறி குறித்த ஒழுங்குவிதியினை சவாலுக்குட்படுத்தினார். எவ்வாறெனினும், அத்தகைய மத நியமங்களின் படி வெட்டப்படுகின்ற கால்நடைகளை அவர்கள் பெல்ஜியத்திலிருந்து இலகுவாகப் பெற்றுக் கொள்ள முடியுமென்ற அடிப்படையில் இவ்விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
(2) இவ் அதிகாரத் தீர்ப்புக்கள் அதிகளவில் மட்டுப்படுத்துவனவாக உள்ளன என்ற காரணத்திற்காக Copsey v. WWB Devon Clays Ltd 2005 EWCA Civ 932, [2005] என்ற வழக்கின் 31-39 ஆம் பந்திகளில் அதிகளவில் விமர்சிக்கப்பட்டன. அத்துடன், R (Williamson) v. Secretary of State for Education and Employment [2005] UKHL 15 என்ற வழக்கின் 39 ஆம் பந்தியில், மத நம்பிக்கையினை வெளிப்படுத்துவதனைச் சாத்தியப்படுத்துகின்ற மாற்று வழிகள், மேற்சொல்லப்பட்ட Copsey v. WWB Devon Clays Ltd 2005 EWCA Civ 932, [2005] என்ற வழக்கின் 80 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ளதனைப் போன்று, “சாத்தியமற்றவை யாக்கப்படால்” மாத்திரம்தான் உறுப்புரை 9 இன்கீழான கோரிக்கையொன்று வெற்றிபெற முடியுமா என சபை கேள்வியெழுப்பியது. இவ் அபிப்பிராயத்தில் பந்தி 23 இல் சொல்லப்பட்டுள்ள எனது நிலைப்பாட்டிற்கு அதிகாரிகள்
ஆதரவளிக்கின்றனர் என நான் கருதுகின்றேன். நிறுவனங்கள் தலையீடு தொடர்பான முறைப்பாடுகளை நிராகரிப்பது தொடர்பாக கடினத்தன்மையினைப் பின்பற்றுகின்ற தவறைப் புரிந்திருப்பினும் கூட, நிலைத்திருக்கின்ற அமைப்புக்களாகிய எமது தேசிய நீதிமன்றங்கள் இதனைக் கருத்திற் கொள்ள வேண்மென்பதுடன், அத்தகைய தலையீட்டினை இலகுவாக தாபிக்க முடியாது என்பது வெளிப்படுத்தப்படுகின்றது.
(3) குறித்த பிரதேசத்தில் ‘ஜிலாப்’ அணிவதனை அனுமதிக்கின்ற மூன்று பாடசாலைகள் காணப்பட்டன என்பது தெளிவாகத் தெரிகின்றது. இவற்றுள் ஒரு பாடசாலைக்கு விண்ணப்பித்த பிரதிவாதியின் விண்ணப்பம் அப்பாடசாலைக்கான அனுமதிகள் ஏலவே நிறைவு பெற்றுவிட்டன என்ற அடிப்படையில் நிராகரிக்கப்பட்டன. ஏனைய இரண்டு பாடசாலைகளும் தொலைவில் இருப்பதாக வாதத்தில் உறுதிப்படுத்தப்பட்டன. அவர் இந்தப் பாடசாலைகளுள் எதையேனும் தெரிவு செய்திருந்தால் பாடசாலைக்கு செல்வதற்கான உண்மையான எவ்வித சிரமும் இருந்திருக்கும் என்பதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. மேற்காணும் நிகழ்வுகளின் அடிப்படையில், வழக்குத்தீர்ப்பை நியாயமாகப் பிரயோகித்து பார்க்கின்றபோது இவ்வழக்கில் (வேறுபாடான முடிவு எட்டப்பட்ட Williamson என்ற வழக்கின் 41 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டிருப்பதனைப் போன்று), பிரதிவாதியின் மதத்தினை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரத்தில் தலையீடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன என்ற முடிவிற்கு வர முடியாது.