முகப்பு பக்கம் சர்வதேச வழக்குகள் Sister Immaculate Joseph & 80 Teaching Sisters of the Holy Cross of the Third Order of Saint Francis in Menzingen of Sri Lanka (‘the Order)

நீதிமன்றம்
மனித உரிமைகள் குழு (ICCPR)
Bench
பொருத்தமானதல்ல
Key words
ICCPR இன் உறுப்புரைகள் 26, 27 மற்றும் உறுப்புரை 18 (1), 19 உடன் இணைத்து வாசிக்கப்பட்ட உறுப்புரை 2 (1)
Cases referred to

குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்

  1. Kavanagh v Ireland (Case No 819/1998)
  2. Waldman v. Canada (Case No. 694/1996)
  3. Malakhovsky et al. v. Belarus (Case No. 1207/2003)

 

 

Counsel who appeared
முடிவு திகதி
12/10/2005
Judgement by Name of Judge/s
பொருத்தமானதல்ல
Noteworthy information relating to the case

Violation of ICCPR Articles recognised.

Other information

பொருத்தமானதல்ல

Sister Immaculate Joseph & 80 Teaching Sisters of the Holy Cross of the Third Order of Saint Francis in Menzingen of Sri Lanka (‘the Order)

CCPR/C/85/D/1249/2004

Facts of the case

1900 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட குறித்த ஸ்தாபகமானது ஏனைய விடயங்களுக்கு மத்தியில் இனம் அல்லது மதத்தினைப் பொருட்படுத்தாது பரந்தளவிலே போதனை, ஏனைய தர்ம காரியங்கள் மற்றும் சமுதாய பணிகளில் ஈடுபட்டு வருவதாக முறைப்பாட்டாளர்கள் குறிப்பிடுகின்றனர். அரசியலமைப்பின் உறுப்புரை 77 இன்கீழ் ஒவ்வொரு சட்டமூலத்தினதும் அரசியலமைப்பு தன்மையினை பரிசீலிக்க வேண்டிய சட்டமா அதிபர் ஜனாதிபதிக்கு அது தொடர்பாக எவ்வித அறிக்கையினையும் அனுப்பவில்லை.

 

இந்த சட்டமூலம் அரசாங்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பின்னர், சட்டமூலத்தின் இரண்டு சட்ட வாசகங்கள் அதன் பாயிரத்துடன் வாசிக்கப்படுகின்றபோது, அரசியலமைப்புச் சட்டத்திற்கு முரணாக உள்ளதென்ற ஒரு ஆட்சேபனை, ஒரு  பிரஜையினால் (“ஆட்சேபிப்பவர்”) 14 ஜூலை 2003 அன்று உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

 

குறித்த மத ஸ்தாபகத்தின் கூட்டிணைப்பானது இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 9 மற்றும் 10 இற்கு முரணானதாகும் என்ற இலங்கை உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பானது ICCPR இன் உறுப்புரைகள் 26, 27 மற்றும் உறுப்புரை 18 (1), 19 என்பனவற்றுடன் இணைத்து வாசிக்கின்றபோது அதன் உறுப்புரை 2 (1) இனை மீறுவதாகின்றது என முறைப்பாட்டாளர் கூறினார்.

Findings related to FoRB

மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை, பாரபட்சம்

Holding/Decision

உறுப்புரை 18ன் கீழ் உள்ள கோரிக்கையைப் பொறுத்தவரை, முறைப்பாட்டாளர்களின் சொந்த மதங்கள் உட்பட பல மதங்கள் அறிவைப் பரப்புவதனையும், தங்கள் நம்பிக்கைகளை மற்றவர்களுக்குப் பரப்புவதனையும், மற்றவர்களுக்கு உதவி செய்வதனையும் மையக் கோட்பாடாகக் கொண்டுள்ளன என்பதனை குழு குறித்து காட்டியது. இவ் அம்சங்கள் தனிநபர் ஒருவரின் மதத்தினை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரம் மற்றும் பேச்சு சுதந்திரம் என்பனவற்றுக்குள் உள்ளடக்கப்படுகின்றன என்பதுடன் உறுப்புரை 18 இன் பந்தி 1 இனால், அவை பந்தி 3.5 இல் சொல்லப்பட்டுள்ள மட்டுப்பாட்டிற்கான பொறிமுறைகளுடன் இணங்குகின்ற அளவிற்கு, பாதுகாக்கப்பட்டுள்ளன.

 

குறித்த ஸ்தாபகத்தின் கூட்டிணைப்பானது அவ் ஸ்தாபகத்தின் மத சார்பான மற்றும் மத சார்பற்ற குறிக்கோள்களை (உதாரணமாக:

வழிபாட்டு தலங்களின் கட்டுமானம்) சிறப்பான முறையில் அடைந்து கொள்வதற்கு வழிவகுக்கும் என முறைப்பாட்டாளர்கள் வாதிட்டுள்ளதுடன் அதனை அரச தரப்பு மறுதலிக்கவில்லை. உண்மையில் இதுவே அச்சட்டமூலத்தின் நோக்கமாகும் என்பதுடன் இது அதன் குறிக்கோள் வாசகத்திலும் குறிப்பிடப்பட்டிருந்தது. குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புதன்மை தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானமானது முறைப்பாட்டாளர்களின் மத நடைமுறைகளுக்கான சுதந்திரம் மற்றும் வெளிப்படுத்தலுக்கான சுதந்திரம் என்பனவற்றை மட்டுப்படுத்தியுள்ளன. குறித்த உறுப்புரைகளின் பந்தி 3 இன்கீழ் இச்சுதந்திரங்கள் மட்டுப்படுத்தப்பட வேண்டுமாயின் அவை சட்டத்தினால் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும் என்பதுடன் அவை ஏனையோரின் உரிமைகள் அல்லது சுதந்திரங்களைப் பாதுகாப்பதற்கு அல்லது பொது பாதுகாப்பு, ஒழுங்கு, சுகாதாரம் அல்லது நெறிமுறைகளைப் பாதுகாப்பதற்கு அவசியமானதாய் இருத்தல் வேண்டும்.

 

நீதிமன்றத்தின் தீர்மானம் சந்தேகத்திற்கு இடமின்றி சட்டத்தால் விதிக்கப்பட்ட ஒரு மட்டுப்பாடாக இருந்தபோதிலும், குறித்த மட்டுப்பாடு கூறப்பட்ட நோக்கங்களுள் ஒன்றினை அடைந்து கொள்வதற்கு அவசியமா என்பதை தீர்மானிக்க வேண்டும். உடன்படிக்கையில் சொல்லப்பட்டுள்ள உரிமைகள் மீதான அனுமதிக்கப்பட்ட மட்டுப்பாடுகள், பிரச்சினைக்குட்பட்டுள்ள குறித்த உரிமையைப் பயன்படுத்துவதற்கான விதிவிலக்குகள், குறுகலாகப் பொருட்கோடல் செய்யப்பட வேண்டுமென்பதுடன் குறித்த காரணங்களை அவற்றுக்கான நியாயப்பாட்டுடன் கவனமாக பரிசீலித்தல் வேண்டும்.

 

குழுவினால்; கண்டறியப்பட்டுள்ள நிகழ்வுகள், இலங்கை உடன்படிக்கையின் உறுப்புரை 18 இன் பந்தி 1 மற்றும்  உறுப்புரை 26 இனை மீறியுள்ளமையினை வெளிப்படுத்துகின்றன என குழு கருதுகின்றது.

விருப்ப பின்னேட்டிற்கான திறத்தவரொருவராவதன் மூலம், குறித்த உடன்படிக்கை மீறப்பட்டுள்ளதா இல்லையா என்பதை தீர்மானிப்பதற்கான குழுவின் தகைமையினை அரச தரப்பு அங்கீகரித்துள்ளது என்பதையும், உடன்படிக்கையின் உறுப்புரை 2 இன் படி, அரச தரப்பு தனது எல்லைக்குள் மற்றும் நியாயாதிக்கத்தில் உள்ள அனைத்து தனிநபர்களுக்கும் உடன்படிக்கையில் அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமைகளை  உறுதிப்படுத்துவதற்கும் மற்றும் ஏதேனும் மீறல் நிரூபிக்கப்படின் பயனுள்ள மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வை வழங்குவதற்கும் உடன்பட்டுள்ளது என்பதனை மனதில் கொண்டு, குழுவின் கருத்துகளுக்கு வலுவளிக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த தகவல்களை 90 நாட்களுக்குள் அரச தரப்பிடமிருந்து பெறுவதற்கு குழு எதிர்பார்க்கிறது.

 

குழுவின் கருத்துக்களை வெளியிடுமாறும் அரச தரப்பு கேட்டுக் கொள்ளப்படுகிறது.