Home Sri Lankan Cases A Bill on ‘Provincial of the Teaching Sisters of the Holy Cross of the Third Order of Saint Francis in Menzingen of Sri Lanka (Incorporation)’

Court
உச்ச நீதிமன்றம்
Bench
Shirani Bandaranayake J, H.S. Yapa J, Nihal Jayasinghe J.
Key words
உறுப்புரை 121 (1); உறுப்புரை 123
Cases referred to

குறிப்பீடு செய்யப்பட்ட வழக்குகள்

Rev. Stainislaus v, State of Madhya Pradesh).

 

பிரசன்னமாகிய சட்டத்தரணிகள்

Manohara de Silva with Bandara Thalagune and W.D. Weeraratne

P.A. Ratnayake ASG, S Balapatabendi SC

Counsel who appeared
Date of Decision
25/07/2003
Judgement by Name of Judge/s
Noteworthy information relating to the case
Other information

A Bill on ‘Provincial of the Teaching Sisters of the Holy Cross of the Third Order of Saint Francis in Menzingen of Sri Lanka (Incorporation)’

S.C. Special Determination No. 19/2003

Facts of the case

“A Bill on ‘Provincial of the Teaching Sisters of the Holy Cross of the Third Order of Saint Francis in Menzingen of Sri Lanka (Incorporation)’” எனத் தலைப்பிடப்பட்ட சட்டமூலமானது, “கத்தோலிக்க பாடசாலைகள் மற்றும் அரசினால் உதவியளிக்கப்படுகின்ற மற்றும் பராமரிக்கப்படுகின்ற ஏனைய பாடசாலைகளைத் தாபிப்பதனூடாக அல்லது பராமரிப்பதனூடாக, மற்றும் இலங்கையின் பல பகுதிகளில் கல்வி மற்றும் தொழிற்பயிற்சி நடவடிக்கைகளில் ஈடுபடுவதனூடாக மற்றும் ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் சிறுவர்கள் மற்றும் முதியோர்களுக்கான இல்லங்களைத் தாபிப்பதனூடாக  மதத்தினைப் பரப்புவதனை” நோக்கமாகக் கொண்ட அமைப்பொன்றினை கூட்டிணைக்க முற்படுகின்றது (சட்டமூலத்தின் பாயிரத்தினைப் பார்க்க). கூட்டுத்தாபனம் உருவாக்கப்படுவதற்கான பொதுவான குறிக்கோள்கள் கீழ்வருமாறு பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன:

  • கத்தோலிக்க மதம் பற்றிய அறிவை பரப்புவதற்கு
  • இளைஞர்களுக்கு மத, கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்குதல்
  • முன்பள்ளிகள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் கற்பிக்க
  • ஆரம்பநிலை தனியார் மருத்துவமனை, மருத்துவமனைகள், அகதி முகாம்கள் மற்றும் அது போன்ற நிறுவனங்களில் சேவை செய்ய
  • குழந்தைகள், முதியோர்கள், அனாதைகள், ஆதரவற்றோர் மற்றும் நோயுற்றோருக்கான காப்பகங்கள், பகல்நேர பராமரிப்பு மையங்கள், முதியோர் இல்லங்கள், அனாதை இல்லங்கள், மற்றும் நடமாடும் ஆரம்பநிலை மருத்துவமனைகளை நிறுவி பராமரித்தல்
  • ஒருவருக்கொருவர் அன்பு மற்றும் மரியாதை வழங்குகின்ற சமூகத்தை உருவாக்குதல்

கூட்டுத்தாபனத்தின் மேற்கூறிய நோக்கங்களை மேம்படுத்தும் அத்தகைய பணிகள் மற்றும் சேவைகள் அனைத்தையும் மேற்கொள்வது மற்றும் செயல்படுத்துவது.”

Findings related to FoRB

Holding/Decision

  • மதத்தை பரப்புவதற்கான அடிப்படை உரிமையை அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை. “பிரசாரம்” என்ற சொற்றொடருக்கு பல அர்த்தங்கள் உள்ளன, ஆனால் சுருக்கமான ஆக்ஸ்போர்டு அகராதியின்படி இது “ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு அல்லது ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு (ஒரு அறிக்கை, நம்பிக்கை, நடைமுறை போன்றவற்றை) பரப்புதல்” என்பதாகும். உச்ச நீதிமன்றத் தீர்மானம் எண். 2/2001 இல், “இலங்கையில், இந்திய அரசியலமைப்பின் 25(1) வது பிரிவில் உள்ளதைப் போல மதத்தை “பிரசாரம்” செய்வதற்கான அடிப்படை உரிமைக்கு அரசியலமைப்பு உத்தரவாதம் அளிக்கவில்லை. இங்கு உறுப்புரை 14(1)(e) இனால் அனைவருக்கும் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது யாதெனில், அந்த பிரஜையின் மதம் அல்லது போதனையை வெளிப்படுத்துவதற்கும், வழிபடுவதற்கும், கடைபிடிப்பதற்கும், மற்றும் நடைமுறைப்படுத்தவதற்குமான உரிமையே ஆகும்.
  • நமது அரசியலமைப்பின் கீழ் ஒருவர் தனது மதத்தை வெளிப்படுத்த அனுமதியிருந்தாலும், மதத்தை பரப்புவதற்கான அடிப்படை உரிமையை அரசியலமைப்பு உறுதிப்படுத்தாததால், மற்றொரு மதத்தை பரப்புவது அனுமதிக்கப்படாது. பிரச்சாரம் என்பது அரசியலமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமையாகக் கருதப்படும் சூழ்நிலைகளில் கூட, மற்றொரு நபரை ஒருவரின் சொந்த மதத்திற்கு மாற்றுவதற்கான உரிமையளவிற்கு இது நீட்டிக்கப்படவில்லை, ஏனெனில் அது “மனசாட்சியின் சுதந்திரத்தை பாதிக்கிறது. ( Stainislaus v. மத்திய பிரதேச மாநிலம்).

 

  • அதேபோன்று, பிரசாரம் செய்வதற்கு அடிப்படை உரிமை இல்லாத போது, மற்றொரு நபரை தனது சொந்த மதத்திற்கு மாற்ற முயற்சித்தால், அத்தகைய நடத்தை புத்த சாசனத்தின் இருப்புக்கே தடையாக இருக்கும். அரசியலமைப்பின் கீழ் உத்தரவாதம் அளிக்கப்படுவது, ஒருவரின் சொந்த மதத்தின் வெளிப்படுத்துவதற்கான, கடைபிடிப்பதற்கான மற்றும் நடைமுறைப்படுத்துவுதற்கான உரிமையே ஆகும். சட்ட வாசகம் 3 இல் குறிப்பிடப்பட்டுள்ளபடி கிறிஸ்தவத்தை பரப்புதலானது (கத்தோலிக்க மதத்தைப் பற்றிய அறிவைப் பரப்புவதற்கும், இளைஞர்களுக்கு மத, கல்வி மற்றும் தொழில் பயிற்சிகளை வழங்குவதற்கும் கூட்டுத்தாபனம் உருவாக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடுகின்றது) பௌத்தம் அல்லது புத்த சாசனத்தின் இருப்பையே பாதிக்கும் என்பதால் அது அனுமதிக்கப்படாது

 

  • இந்த ஏற்பாட்டில் உள்ள விடயங்கள் அரசியலமைப்பின் உறுப்புரை 9 மற்றும் 10 க்கு முரணாக இருப்பதால், அரசியலமைப்பின் 123 (2) வது பிரிவின் அடிப்படையில் இந்த சட்டமூலம் உறுப்புரை 83 (a) இன் வரம்பிற்குள் வரும் என்று நாங்கள் தீர்மானிக்கிறோம். ஆகவே, இது அரசியலமைப்பின் உறுப்புரை 84(2) இல் சொல்லப்பட்டுள்ளதன்படி சிறப்புப் பெரும்பான்மையால் நிறைவேற்றப்பட்டு, சர்வசனவாக்கெடுப்பில் மக்களால் அங்கீகரிக்கப்பட வேண்டும்.