23650/PC/13
இவ்வழக்கின் எதிராளி போதகரின் மத நடைமுறை தொடர்பாக இனி அவருடன் எவ்வித பிரச்சினையும் செய்வதில்லை என கூறியதுடன் அவருடைய நடத்தைக்காக போதகரிடம் மன்னிப்பும் கேட்டார். போதகர் சார்பாகத் தோன்றிய சட்டத்தரணி இவ்விடயத்தை இணக்கத்திற்கு கொண்டுவர இணங்கினார்.
எதிராளி போதகரின் மத நடைமுறை தொடர்பான எவ்வித செயற்பாட்டிலும் தலையீடு செய்யக்கூடாதென நீதிமன்றம் ஆணையிட்டது. அவ்வாறு செய்யின், நீதிமன்றம் எதிராளிக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கும் எனவும் கூறியது.