43683
குறித்த வழிபாட்டு தலம் மீண்டும் மீண்டும் அடையாளம் தெரியாத தனிநபர்களினால் கல்லடி தாக்குதலுக்கு உள்ளானதைத் தொடர்ந்து 2018 ஜனவரியில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. தாக்குதலுக்கு முன்னர், 2017 ஜுன் மாதமளவில் இப்பிரதேச பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் அவருடைய நடவடிக்கைகள் தொடர்பாக அப்பிரதேச செயலகம் மற்றும் கிறிஸ்தவ விவகாரங்களுக்கான திணைக்களம் என்பவற்றிலிருந்து குறித்த ஆவணங்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர். இவ்விசாரணைகளைத் தொடர்ந்து, பொலிஸார் மத செயற்பாடுகளை நிறுத்துமாறு போதகரிடம் கேட்டு கொண்டனர்.
அதன்பின்னர், 2018 ஜுலை மாதத்தில் அத்தனகல்ல பிரதேச சபை அலுவலர்கள் சுமார் 100 பிரதேசவாசிகள் தேவாலயத்திலிருந்து வரும் ஒலி தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர் என கூறி போதகரிடத்திற்கு வந்தனர். அவ் அலுவலர்கள் மத செயற்பாடுகளை நிறுத்துமாறும் வேறு இடத்திற்கு செல்லுமாறும் போதகரை வேண்டினர்.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை