இணக்கம்
PC/35019/19
கரும்கலிசோலை பிரதேசவாசிகள் (இந்துக்களான 2 ஆம் திறத்தவர்) முதலாம் திறத்தவருக்கு (றோமன் கத்தோலிக்கரல்லாத கிறிஸ்தவர்கள்) எதிராக பொலிஸில் செய்த பாரிய முறைப்பாடு யாதெனில் முதலாம் திறத்தவர்கள் அனுமதியின்றி ஒன்று கூடுகின்றனர் என்பதாகும். அதேநேரத்தில் முதலாம் திறத்தவர்களும் எவ்வித காரணமுமின்றித் தம்மை இடையூறு செய்வதாக இரண்டாம் திறத்தவர்களுக்கு எதிராக முறைப்பாடொன்றினைப் பதிவு செய்திருந்தனர். இரண்டாம் திறத்தவர்கள் முதலாம் திறத்தவர்களை எச்சரித்து பயம் காட்டியிருந்தார்கள். இச்சூழ்நிலையில், பொலிஸ் இரண்டு முறைப்பாடுகளையும் இணைத்து அவர்களுக்கு எதிராக வழக்கொன்றைப் பதிவு செய்தது.
மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தின் மீறல்- வெளிப்படுத்துகை- வழிபாடு, அனுட்டிப்பு, பின்பற்றுதல், போதனை, பாரபட்சம்
முதலாம் திறத்தவரின் ஆட்சேபணைக்கு அமைய, முதலாம் மற்றும் இரண்டாம் திறத்தவர்களினால் பதிவு செய்யப்பட்ட முறைப்பாடுகள் ஒரே உள்ளடக்கத்தினைக் கொண்டவை அல்ல. அத்துடன் இவ்வழக்கிற்கான காரணம் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபடுவதுடன் இரு திறத்தவர்களும் இவ்வழக்கில் முரண்பாட்டிற்குரியவர்கள். ‘பொது இடையூறு ஏற்படுத்திய எதிர் எதிராக உள்ள இரு திறத்தவரிடம் ஒன்றாக விளக்கம் கேட்க இயலாது’ என்ற குற்றவியல் நடபடிமுறைக் கோவை விதி முன்னிலைப்படுத்தி காட்டப்பட்டது.
|
இரு திறத்தவர்களும் அமைதியினைப் பேண விரும்புவதாகவும் இவ்விடயத்தினை இணக்கத்திற்கு கொண்டு வர விரும்புவதாகவும் கூறி நீதிமன்றத்திற்கு விண்ணப்பித்தனர். அவ்விண்ணப்பத்தின்படி இவ்வழக்கு முடிவுறுத்தப்படுவதாக நீதிமன்றம் ஆணையிட்டது.