வழிகாட்டுதல்

#MinorMatters ஆனது, சுயமான மற்றும் சிந்தனையினைத் தூண்டுகின்ற, தெளிவாக விளங்கிக் கொள்ளக்கூடிய வகையில் எழுதப்பட்டுள்ள, மரியாதையான மற்றும் ஈடுபடச் செய்கின்ற வலைப்பதிவுகளையும் ஆக்கங்களையும் வரவேற்கின்றது. அனைத்து பங்களிப்புக்களும் வெளியிடப்படுவதற்கு முன்னர் சீரமைக்கப்படும் என்பதுடன் பங்களிப்பு செய்பவர்கள் குறைந்தபட்ச நியமமாகக் கீழ்வரும் வழிகாட்டிகளைப் பின்பற்ற வேண்டுமென எதிர்பார்க்கப்படுகின்றனர்.

துல்லியம்

துல்லியத்தன்மை- சுயாதீனமாகச் சரிபார்க்கக்கூடிய நிகழ்வுகள் மற்றும்ஃஅல்லது தகவல்கள் அல்லது கண்ணியமான மூன்றாந் திறத்தவரிடமிருந்து முறையாகப் பெற்றுக்கொள்ளப்பட்ட உள்ளடக்கங்களை மாத்திரமே முன்வைக்க.

நேர்மை மற்றும் முழுமை

நியாயத்தன்மை மற்றும் முழுமைத்தன்மை- எந்தவொரு விடயத்திற்கும் பல கோணங்கள் இருக்கலாம் என்பதனை அங்கீகரிக்க வேண்டும் என்பதுடன் உங்களுடைய வாசகர்களுக்கு முழுமையான, நிறைவான மற்றும் சூழமைவிற்கேற்றாற்போலான தகவல்களை வழங்குங்கள்.

தனியுரிமை

அந்தரங்கம்- தெளிவான மற்றும் வலிதான பகிரங்க அக்கறை காணப்படுகின்ற விதிவிலக்கான சந்தரப்பங்களைத் தவிர வேறு எச்சந்தர்ப்பத்திலும் குழுவொன்றின் அல்லது தனிநபரொருவரின் அந்தரங்கத்திற்கான உரிமையினை மீறுகின்ற உள்ளடக்கங்களை நாம் வெளியிட மாட்டோம்.

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல்

வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புகூறும்தன்மை- உங்களுடைய மூலங்களை வெளிப்படுத்துங்கள், உங்களுடைய வாசகர்களுடன் வெளிப்படையாகச் செயற்படுங்கள் மற்றும் நீங்கள் சமர்ப்பிக்கின்ற உள்ளடக்கங்களுக்கு பொறுப்பு கூறுபவராய் இருங்கள்.

மொழி

மொழி- உங்களுடைய வாசகர்கள் தொடர்பாக அவதானத்துடன் இருங்கள். ஆபாசமான அல்லது வெளிப்படையான அல்லது இனவாதமிக்க மொழியினைப் பயன்படுத்த வேண்டாம். அச்சுறுத்தல்கள், தனிப்பட்ட தாக்குதல்கள் அல்லது அவமதிப்புக்கள் ஆகியவற்றை செய்ய வேண்டாம்.

பொறுப்பு துறப்பு: ஒவ்வொரு வலைப்பதிவிலும் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துக்கள் மற்றும் அபிப்பிராயங்கள் என்பன அவற்றை எழுதியவருடையவை மாத்திரமே என்பதுடன் அவை MinorMatters இன் கொள்கைகள் அல்லது நிலைப்பாட்டினைப் பிரதிபலிப்பதில்லை. வலைப்பதிவிலுள்ள கருத்துக்களுக்கான பிரத்தியேக பொறுப்பு அவற்றை எழுதியவர்களையே சாரும். வலைத்தளத்தின் நியமங்கள் மற்றும் தேவைப்பாடுகளைப் பூர்த்தி செய்யாத வலைப்பதிவுகள் மற்றும் கருத்துக்களை இடைநிறுத்துவதற்கான உரிமையினை MinorMatters தன்னகப்படுத்திக் கொள்கின்றது.