N/A
நீதவான் நீதிமன்ற ஆவணங்கள் கிடைக்காமையினால், மேற்குறிப்பிட்ட தகவல்களானவை அடிப்படை உரிமைகளுக்கான மனுவொன்றிலிருந்து பெறப்பட்டவை.
B13101/19
குற்றவாளி கவிஞரும் ஆசிரியரும் ஆவார். அவர் காலத்திற்கு காலம் எழுதிய கவிதைகளைக் கொண்டு “நவரசம்” எனத் தலைப்பிடப்பட்ட கவிதை புத்தகத்தினை வெளியிட்டார்.
நவரசம் என்ற இப்புத்தகமானது தாயின் அன்பு, போதை பொருள் மற்றும் மது பாவனையின் ஆபத்து, சுய ஒழுக்கம் மற்றும் வெற்றிக்கான ஊக்குவிப்பு கதைகள், யுத்தத்திற்கு எதிரான கவிதைகள், இஸ்லாமிய வரலாறு மற்றும் தற்போதைய விவகாரங்கள் போன்ற பல்வகைப்பட்ட தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்விற்குரிய கவிதைகளை உள்ளடக்கியிருந்தது.
எவ்வாறெனினும், வன்முறை/தீவிரவாதத்தினைத் தூண்டியமை என்ற அடிப்படையில் குற்றவாளி எதேச்சாதிகாரமாகக் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட தடுத்து வைப்பிற்கான கட்டளையினூடாகத் தடுத்து வைக்கப்பட்டார்.
|
மேலும், குறித்த குற்றவாளி தனக்கெதிராகக் குற்றம் சாட்டுகின்ற வகையில் அறிக்கை செய்யுமாறு அதிகாரிகளினால் கட்டாயப்படுத்தப்பட்டார். அதனூடாக, அவர் இஸ்லாமியக் கற்கைகளுக்கான நலிமியா நிறுவனத்தில் கல்வி பயின்றபோது தீவிரவாத சிந்தனைகளுக்கு ஆட்பட்டதாகவும் அதன் பின்னர் மாணவர்களுக்கு தீவிரவாதத்தினைக் கற்றுக்கொடுக்கின்ற ஆசிரியராக வந்ததாகவும் கூறுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்.
பொருத்தமானதல்ல |
N/A